15வது
ஐபிஎல் தொடர் பிரம்மாண்டமாக நடைபெற்று
வருகிறது. மொத்தம் 70 போட்டிகள் கொண்ட இந்த தொடரில்
தற்போது கிட்டத்தட்ட 40 போட்டிகளை நெருங்கியுள்ள இத்தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை
,சென்னை ஆகிய இரு ஜாம்பவான்
அணிகளும் கிட்டத்தட்ட பிளே ஆப் வாய்ப்பை
இழந்துவிட்ட நிலையில் மற்ற அணிகளுக்கு இடையே
கடுமையான போட்டி நிலவுகிறது.
தற்போது நடப்பு ஐ.பி.எல் தொடரானது மேலும்
சுவாரசியமான கட்டத்தினை எட்டியுள்ளது. இந்நிலையில் முன்னாள் வீரர்கள் பலரும் இந்தத் தொடர்
குறித்த தங்களது கருத்துக்களை சமூக
வலைதளம் வாயிலாக வெளிப்படையாக தெரிவித்து
வருகின்றனர். இந்திய
அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேலும்
இந்த ஐபிஎல் தொடர் குறித்து
தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர்
நடப்பு ஐபிஎல் தொடரின் சிறந்த
பவுலர்களை கொண்ட அணி எது
என்பது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நடப்பு
ஐபிஎல் தொடரில் பந்து வீச்சில்
முழு பலம் வாய்ந்த அணி
எது என்று கேட்டால் நான்
நிச்சயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தான்
குறிப்பிடுவேன். ஏனெனில் சுழற்பந்து வீச்சாளர்கள்
அஸ்வின், சாஹல் ஆகியோர் சிறப்பாக
பந்துவீசி எதிரணிகளுக்கு நெருக்கடியை அளித்து வருகின்றனர்.
அதோடு வேகப்பந்து வீச்சில் ட்ரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா குல்தீப் சென் போன்ற வீரர்களும் அது தவிர்த்து சில வீரர்களும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் பந்துவீச்சில் தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment