ஐபிஎல் 2022 தொடர் மிகுந்த விறுவிறுப்புடன் வெற்றிகரமான 4-வது வாரத்தை தொட்டுள்ளது. பந்து வீச்சாளர்களும், துடுப்பாட்ட வீரர்களும் ரசிகர்களைக் குதூகலப்படுத்துகிறார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் இந்த வருட ஐபிஎல் தொடரில் விஸ்வரூபம் எடுத்து அசால்டாக சதங்களை அடித்து சாதனைகளை படைத்து வருகிறார்.
ஏப்ரல்
22-ஆம் திகதி நடைபெற்ற
34-வது லீக் போட்டியில முதலில்
துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தானுக்கு
முதல் அதிரடியாக தேவ்தூத்
படிக்கல் உடன் இணைந்து முதல்
விக்கெட்டுக்கு 155 ஓட்டங்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து
ஆரம்பத்திலேயே வெற்றி உறுதி செய்தார். ஓட்டங்கள்
விளாசி ஆட்டமிழந்தார். அவரின் அதிரடியால் 20 ஓவர்களில்
222/2 ஓட்டங்களை எடுத்த ராஜஸ்தான் இந்த
வருடம் ஐபிஎல் தொடரின் அதிகபட்ச
ஸ்கோரை பதிவு செய்து அசத்தியது.
முன்னதாக
மும்பைக்கு எதிரான போட்டியில் முதல்
முறையாக சதமடித்த அவர் ராஜஸ்தான் பங்கேற்ற
தனது 6-வது போட்டியில் கொல்கத்தாவுக்கு
எதிரான போட்டியில் 2-வது சதமடித்திருந்தார். அதன்பின் டெல்லிக்கு
எதிராக ராஜஸ்தான் பங்கேற்ற தனது 7-வது போட்டியில்
மீண்டும் சதம் அடித்த அவர்
அடுத்தடுத்த 2 போட்டிகளில் சதம் அடித்துள்ளார்.
இதன்
வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில்
அடுத்தடுத்த வீரர் என்ற சரித்திர
சாதனையைத் ஜோஸ் பட்லர் படைத்துள்ளார். கடந்த
2020இல் இந்திய வீரர் ஷிகர்
தவான் தான் முதல் முறையாக
இப்படி அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்திருந்தார்.
இத்துடன்
இதுவரை வெறும் 7 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ள அவர்
35, 100, 70*, 13, 54, 103, 116 என
2 அரை சதங்கள் 3 சதங்கள் உட்பட 491* ஓட்டங்களை
81.83 என்ற அபார சராசரி விகிதத்தில்
குவித்து அதிக ஓட்டங்கள்
குவித்த பட்டியலில்
முதலிடம் பிடித்து அதற்கான கௌரவ ஒரெஞ்ஞ்சு
தொப்பியையும் தன் வசம் வைத்துள்ளார்.
முதல்
7 போட்டிகளிலேயே 3 சதங்களை அசால்ட்டாக அடித்துள்ள
அவர் “ஐபிஎல் வரலாற்றில் ஒரு
ஐபிஎல் தொடரின் முதல் பாகத்தில்
3 சதங்களை அடித்த முதல் வீரர்”
என்ற மாபெரும் புதிய சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு ஒரே
வருடத்தில் 4 சதங்கள் அடித்த விராட்
கோலி கூட இப்படி முதல்
பாகத்தில் அதுவும் முதல் 7 போட்டிகளில்
3 சதங்கள் அடித்ததே கிடையாது.
முதல்
7 போட்டிகளில் 491 ஓட்டங்கள் அடித்துள்ள அவர் 2016இல் 4 சதங்கள் உட்பட
973 ஓட்டங்கள் விளாசி ஐபிஎல் வரலாற்றில்
குறிப்பிட்ட தொடரில் அதிக ஓட்டங்கள்
,சதங்கள் அடித்த துடுப்பாட்ட வீரர்
என்ற சாதனை படைத்துள்ள விராட்
கோலியின் சாதனையையும் முறியடிக்க பிரகாச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment