Saturday, April 2, 2022

ஆதாரம் இல்லாத அண்ணாமலையின் குற்றச் சாட்டுகள்

தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவராக தமிழிசை இருந்தபோது தினம் ஒரு செய்தியுடன் ஊடகங்களில் இடம் பிடித்தார். அடுத்து வந்த எல்.முருகனும் அதேபாணியில் ஊடகங்களில் முகத்தைக் காட்டினார். இன்றைய தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் அண்ணாமலையும் அவர்களின் வழியில் ஊடக வெளிச்சத்தைத் தன் பக்கம் திருப்பி உள்ளார்.

அரசியல் நாகரீகத்துடன் தமிழிசை  குற்றம் சுமத்தினார். முருகன் எல்லை மீறி வேல் யாத்திரை சென்றார். அண்ணாமலை அரசியல் நாகரீகத்தைக் காற்றில் பறக்க விட்டுள்ளார். மிரட்டல், சண்டித்தனம்  போன்றவற்றுடன் குட்டி ராஜ்யம் நடத்துகிறார். தமிழக அரசு ஊழல் செய்கிறது, டெண்டர்கள் முறைகேடாக நடக்கின்றன போன்ற குற்றச் சாட்டுகளை  சுமத்துகிறார். ஆதாரம் இருந்தால்  நீதிமன்றத்துக்கும் போகலம் என பதிலடி கொடுத்தால் தன்னைக் கைது செய்யும்படி சவால் விடுகிறார்.

  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள் அரசை வழிநடத்தி வருவதால் குற்றச் சம்பவங்கள் பெருகியுள்ளதாகயுள்ளார்.

ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை 16 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு தரவில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொன்னதற்கு, ‘தமிழக அரசுக்குக் கொடுக்கவேண்டிய நிலுவைத் தொகை அனைத்தும் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனால், உண்மையை மறைத்து தமிழக அரசு பொய் சொல்கிறதுஎன்று தமிழக பா.. தலைவர் அண்ணாமலை அடித்துப் பேசிவருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் தி.மு.-வினரோ, மார்ச் 16-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் பேசியதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்... ‘மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி இழப்பீடாக 96,756 ரூபாய் கோடி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 53,661 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. அதில், தமிழ்நாட்டுக்கு 6,733 கோடி ரூபாய் நிலுவையில் இருக்கிறதுஎன்று அவர் பேசியிருக்கிறார். மத்திய நிதியமைச்சரே ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை குறித்து ஒப்புக்கொண்ட பிறகு, ‘உண்மையை மறைத்து, பொய் சொல்கிறார் அண்ணாமலை... ஏன் இந்த வேண்டாத வேலை?’ என்று கமலாலயம் தரப்பிலிருந்தே விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதேபோல நூறு நாள் வேலைத் திட்டத்திலும் 40 சதவிகித கட்டுமானப் பணிகளுக்கான நிதியைக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்திவைத்திருக்கிறது.

தமிழகநிதி அமைச்சர் சமர்ப்பித்த பட்ஜெட்டில் தவறு  இருப்பதாக அண்ணாமலை சொல்வது பச்சைப்பொய் என்பது வெளிப்படையானது. அண்ணாமலையின் கருத்துக்கு பதில் சொல்ல வேன்டிய அவசியம் இல்லை என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடுஅண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை எனபதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. அண்ணாமலையின் குற்றச் சாட்டுக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக சட்டபப்டி நடவடிக்கை எடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகி விட்டது.

 துபாயில் நடைபெற்று வரும் கண்காட்சியை முதலமைச்சர்  ஸ்டாலின் திறந்து வைத்த நிலையில் முதலமைச்சர் துபாய் பயணத்தில் மர்மம் என்ன எனக்  கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தநிலையில் முதலமைச்சர் துபாய் பயணம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார், அதில் இந்த மாத இறுதியோடு துபாய் கண்காட்சி நிறைவடையவுள்ளதாக தெரிவித்தவர்,இந்த நிலையில் தான் தற்போது தமிழக அரங்கை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார். இத்தனை காலம் திறக்காமல் இப்போ திறப்பதற்கு காரணம் என்ன என்றும் கேள்வி கேட்டார். மேலும்  முதலமைச்சர் துபாய் செய்வதற்கு முன் அவரது குடும்பத்தினர் பல முறை துபாய் சென்று வந்ததாக கூறினார். தற்போது முதலமைச்சர் தனது குடும்பத்தோடு மீண்டும் துபாய் சென்றுள்ளதாகவும் கூறினார். , எனவே துபாய் மர்மம் என்ன? என்று கேள்வி எழுப்பியவர் அங்கு என்னதான் நடக்கிறது என்று புரியவில்லை எனவும் கூறினார்.

வார நாளிதழ் ஒன்றில் தமிழகத்தில் இருந்து 5000 கோடி ரூபாய் துபாய் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக கூறியவர், அந்த  5000 கோடியின் மர்மம்  என்னவென்றும் கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் குடும்பம் அடிக்கடி துபாய் செல்வதற்கு காரணம் என்ன? எனவும் வினவினார். முதலமைச்சர் ஏதோ ஒரு தவறு செய்வதற்காகதான் துபாய் கண்காட்சி என்று காரணம் கூறுவதாக  குற்றம்சாட்டினார். தமிழக மக்கள் நலனுக்காக முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் செல்லவில்லையெனவும்  அப்போது அண்ணாமலை தெரிவித்தார். இந்திய முதலமைச்சர்களில் முதலிடத்தில் இருக்கிறார் ஸ்டாலின்.எதிரணி அரசியல்வாதிகளும் ஸ்டலினின் நிர்வாகத்தைப் புகழ்கிறார்கள். அண்ணாமலை மட்டும் இகழ்கிறார்.

தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் கடந்த ஆண்டு தமிழக பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தவருமான அண்ணாமலையை மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.

 .ர்நாடக மாநில பிரிவைச் சேர்ந்த .பி.எஸ். அதிகாரியான கே. அண்ணாமலை, 2019ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி தனது .பி.எஸ் பதவியை இராஜினாமா செய்தார். அப்போது அவர் தெற்கு பெங்களூரு துணை ஆணையர் பதவியை வகித்து வந்தார்.

ஆனால், தனது பதவியை அவர் இராஜினாமா செய்த தருணத்தில், எந்த அரசியல் கட்சியிலும் சேருவதாகவும் அவர் தெரிவிக்கவில்லை. சொந்த ஊருக்குச் சென்று விவசாயத்தில் ஈடுபட்டு, "எனது ஆடு இன்னும் எனது குரலுக்கு செவிமடுக்கிறதா என்பதை பார்க்க ஆசையோடு இருப்பதாக" கூறியிருந்தார்.

ஆனால், விரைவிலேயே அவர் ரஜினிகாந்த் துவங்கவிருக்கும் கட்சியில் சேருவார் என்றும் பாரதிய ஜனதா கட்சியில் சேருவார் என்றும் பேச்சுகள் அடிபட்டன. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் பாரதிய ஜனதாக் கட்சியில் இணைந்தார். கட்சியில் சேர்ந்த சில வாரங்களிலேயே அவருக்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது

 

  தமிழ்நாட்டு பா..கவின் மீது கர்நாடகத்தின் ஆதிக்கம் உண்டு. தமிழ்நாடு பொறுப்பாளர் சி.டி. ரவி கர்நாடகத்தைச் சேர்ந்தவர். அதேபோல, அண்ணாமலை போட்டியிட்ட தொகுதியில் கர்நாடகத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் வந்து தங்கி பணியாற்றினர். 20 தொகுதிகளில் வேறு யாருக்கும் இந்த அளவுக்கு வெளி மாநில ஆதரவு கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு கர்நாடக செல்வாக்கு இவருக்கு உண்டு.ஆனால், அண்ணாமலையின் பணி எளிதாக இருக்கப்போவதில்லை.

"பா..கவின் இந்துத்துவா கொள்கை கோவையில் வேண்டுமானால் ஓரளவுக்கு எடுபடலாம். ஆனால், தமிழ்நாட்டில் எடுபடாது. மத்திய அரசு எடுக்கக்கூடிய தமிழ்நாட்டிற்கு விரோதமான கொள்கைகள் பா... மீதான கோபத்தை தக்கவைக்கவே செய்கின்றன. ஆகவே, அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் கட்சியை வளர்க்க விரும்பினால், இதில் கவனம் செலுத்த வேண்டும். நீட், இந்தித் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை போன்றவற்றால், சிறுபான்மையினர் தவிர்த்து பா..கவுக்கு எதிரான புதிய வாக்கு வங்கியை உருவாக்கியிருக்கிறது.

ஆகவே அண்ணாமலைக்கு முன்பாக ஒரு பெரிய சவால் காத்திருக்கிறது. ஒன்று, இந்துத்துவ அரசியலை கையில் எடுக்கலாம். அது கோவை பகுதியில் அவருக்கு கைகொடுக்கக்கூடும். அல்லது தமிழகத்திற்கு ஆதரவான கொள்கைகளை வகுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி, அதன் மூலம் பா..கவை வளர்க்கலாம்.

No comments: