பாகிஸ்தானில் கடந்த ஒரு வருடமாகப் பொருளாதார சிக்கல் நீடித்து வருகிறது. அதனால், பிரதமராக இருந்த இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. எதற்கும் அசைந்து கொடுக்காத இம்ரான்கான் நம்பிக்கை இலாத தீர்மானத்தின் மூலம் பிரதமர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.
கூட்டணி கட்சிகளின்
ஆதரவோடு இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பாகிஸ்தானில் ஆட்சியமைத்து
வந்தது. அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் சிலர் ஆதரவை திரும்ப பெற்றனர். இதையடுத்து
இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு
வந்தன. இதன் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக
இம்ரான் கானின் பரிந்துரையின்பேரில் பாராளுமன்றத்தை சபாநாயகர் கலைத்தார்.
இது தொடர்பான வழக்கில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் கான் தோல்வியடைந்ததை அடுத்து தனது பதவியை அவர் இராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுகப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த
வாக்கெடுப்புக்கு முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ``திருடர்களுடன்
சட்டமன்றத்தில் உட்கார மாட்டேன்" எனக்கூறி தேசிய சட்டமன்ற உறுப்பினர் பதவியை
இராஜினாமா செய்தார்.
அவரை தொடர்ந்து,
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் உறுப்பினர்களும் வாக்கெடுப்பைப்
புறக்கணித்து பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில்,
முன்னாள் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, ``அனைத்து சட்டமன்ற
உறுப்பினர்களும் தேசிய சட்ட மன்றத்திலிருந்து இராஜினாமா செய்வார்கள்" என்று
கூறினார். அதைத் தொடர்ந்து, அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா செய்தனர்.
அதன் பின்னர் இம்ரான்
கான், ``ஒருவர் மீது 16 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கும், மற்றொருவர் மீது 8,000 கோடி
ரூபாய் ஊழல் வழக்கும் உள்ளவர்கள் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.
இதை விடப் பெரிய அவமானம் நாட்டுக்கு இருக்க முடியாது. எனவே, தேசிய சட்ட
மன்றத்திலிருந்து இராஜினாமா செய்கிறேன்" என்று கூறிவிட்டு இராஜினாமா
செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் இன்றி
ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகி அவரது கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
பாகிஸ்தானில் எந்த பிரதமரும் முழுமையாக ஆட்சி செய்ததில்லை என்ற வரலாறு மீண்டும்
திரும்பியதோடு, நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் ஆட்சியை இழந்த முதல் பிரதமர் என்ற
மோசமான சாதனையை இம்ரான் கான் படைத்துள்ளார். நாட்டில் சவால்கள் அடுத்த பிரதமராக
யார் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதிலும், இம்ரான் முன் நின்ற அதே
சோதனைகளைத் தான் அவர்களும் எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே உண்மை. மோசமான
செயல்திறன் கொண்ட பொருளாதாரம், நாட்டில் அதிகரித்து வரும் தீவிரவாதம் மற்றும்
முன்னாள் நட்பு நாடுகளுடன் தற்போது இருக்கும் மோசமான உறவுகள் ஆகியவை அடுத்த
நிர்வாகத்திற்கு நெருக்கடி அளிப்பதில் முன்னிலையில் உள்ளன. அவை வரவிருக்கும்
அரசாங்கத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறவு நிலைகளில் பல சவால்களை
ஏற்படுத்தும்.
220 மில்லியன் மக்கள் வசிக்கும் பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமருக்கு வரவிருக்கும் முக்கிய சிக்கல்களாக பொருளாதாரம், கடன், பணவீக்கம் மற்றும் பலவீனமான நாணய மதிப்பு உள்ளது. இந்த பிரச்சினைகள் இணைந்துதான் கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சியை தேக்க நிலையில் வைத்திருக்கின்றன. பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் எகனாமிக்ஸ்-ன் துணைவேந்தர் நதீம் உல் ஹக் கூறுகையில், "பொருளாதாரத்தை மாற்றுவதற்கு தீவிரமான கொள்கை சீர்திருத்தங்கள் தேவை." என்கிறார். நாட்டில் பணவீக்கம் 12 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, வெளிநாட்டுக் கடன் $130 பில்லியனாகவும், டொலருக்கு நிகரான ரூபாய் 190 ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகரிக்கும் தீவிரவாதம் அடுத்ததாக கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்த தாலிபான்கள் பாகிஸ்தானின் உள்ளூர் தீவிரவாதிகளுடன் இணைந்து கடந்த சில மாதங்களில் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ரமலானின் போதும் கூட அரசாங்கப் படைகளுக்கு எதிரான தாக்குதலை அவர்கள் தொடங்கினார். ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் பாகிஸ்தான் நாட்டை வெளிநாட்டு தீவிரவாதிகளின் தளமாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அது தான் பெரிய சிக்கல் என்பது தான் கவனிக்கத்தக்கது.
ரஷ்யா உக்ரைனை
ஆக்கிரமித்த நாளில் மாஸ்கோவிற்கு இம்ரான் பயணம் செய்ததன் மூலம் இம்ரான் கான்
மேற்குலக நாடுகளை கோபப்படுத்தினார், மேலும் சீனாவின் மனித உரிமைகள் பதிவை
எதிர்த்து மற்றவர்கள் புறக்கணித்தபோது பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின்
தொடக்கத்தில் கலந்து கொண்ட சில உலகத் தலைவர்களில் ஒருவராகவும் இம்ரான் இருந்தார்.
எந்த நாட்டுடன் நட்பு பாராட்டினாலும் மற்றொரு நாடு பாகிஸ்தானுக்கு எதிராக
திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது
பாகிஸ்தானின் முன்னாள்
பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீபின் இளைய சகோதரர்தான் இன்றைய பிரதமர் ஷெபாஸ்
ஷெரீப். எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சியின் தற்போதைய
தலைவராக இருந்து வருகிறார். பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியும்
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கின் நீண்டநாள் அரசியல் எதிரியுமான பாகிஸ்தான் மக்கள்
கட்சியும் இம்ரான் கானுக்கு மாற்றாக தற்போது ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி பரவாயில்லை என்ற
நிலைக்கு வந்து ஆதரவளித்துள்ளனர்.
ஷெபாஸ் ஷெரீப் தனது சகோதரர் நவாஸ் ஷரீபை போல் மக்கள் கூட்டத்தை தன்பக்கம் இழுக்கும் கவர்ச்சியான பேச்சாளர் இல்லை. அவரது பலம் நிர்வாகத் திறனில் இருப்பதாக பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கருதுகின்றனர். ஷெபாஸ் ஷெரீப் ஒரு பணக்கார தொழில்பதிபரின் மகன். ஆரம்ப காலம் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்த ஷெபாஸ் ஷெரீப் தனது குடும்ப வியாபாரத்தில் கவனம் செலுத்தாமல் தனது சகோதரர் நவாஸ் ஷரீஃபை போலவே அரசியலை தேர்ந்தெடுத்தார். பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் லாஹூரில் உள்ள அரசு கல்லூரியில் படித்தார். அதன் பின்னர் தனது குடும்ப நிறுவனமான இத்திஃபாக் குழுமத்தில் பணிபுரிந்தார். பஞ்சாப் மாநில முதலமைச்சர் 1990 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டபோது, முதல்முறையாக பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் ஷெபாஸ் ஷெரீப். அதன் பின்னர் 1997 ஆம் ஆண்டு நவாஸ் ஷெரீப்பிரதமரான பின்னர் பாகிஸ்தானின் சக்திவாய்ந்த முக்கியத்துவமான மாநிலமாக கருதப்பட்ட பஞ்சாபின் முதலமைச்சராக ஷெபாஸ் ஷெரீப்தேர்வானார்.
ஆட்சிக்கு வந்த
இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமையை மாற்ற நவாஸ் ஷெரீப் முயன்றபோது
அவரையும் ஷெபாஸையும் ராணுவம் விரட்டிவிட்டு ஆட்சியை கையில் எடுத்தது. ஷெபாஸ்
குடும்பத்தோடு சவூதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றார். 2007 ஆம் ஆண்டு வரை சவூதி
அரேபியாவில் இருந்த நவாஸ் ஷெரீப்பும், ஷெபாஸ் ஷெரீப்நாடு
திரும்பியவுடன் தத்தமது பதவிகளில் அமர்ந்தனர். ஷெபாஸின் தலைமையில் பஞ்சாப்
மாநிலத்தின் உள்கட்டமைப்பு பெரும் அளவில் மேம்படுத்தப்பட்டது. 2017 ஆம்
ஆண்டு ஊழல் புகார் காரணமாக நவாஸ் ஷெரீப் ஆட்சி கலைக்கப்பட்டவுடன் அவருக்கு
மாற்றாக பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் ஷெபாஸ் ஷெரீப். ஆனால் 2018 தேர்தலில்
தோல்வியடைந்து எதிர்க்கட்சித் தலைவராக ஷெபாஸ் இருந்து வந்தார். இவர் சீனாவின்
நிதியுதவியுடன் பாகிஸ்தானில் தொடங்கப்பட்ட திட்டங்களில் நெருக்கமாக பணியாற்றிய
அனுபவம் கொண்டவர். சீனாவின் நண்பன். அமெரிக்காவின் எதிரி சீனாவுக்கு
ஆதரவானவராகவும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைபாடு கொண்டவராகவும் ஷெபாஸ்
பார்க்கப்படுகிறார். கடந்த வாரம் அவர் அளித்த பேட்டியில்கூட, அமெரிக்காவுடன்
நெருக்கமான உறவை வைத்திருப்பது பாகிஸ்தானுக்கு நல்லதல்ல என்று கருத்து
தெரிவித்தார். ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சீனாவுடன்
நெருக்கமாக இருப்போம் என்றும் அவர் கூறி இருக்கிறார். சீனாவும் ஷெபாஸ் ஷரீஃப்
பஞ்சாபில் மேற்கொண்ட திட்டங்களுக்காக பாராட்டு தெரிவித்து இருக்கிறது. தனது
சகோதரர் நவாஸ் ஷெரீப்பைப் போலவே ஷெபாஸ் ஷெரீப் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள்
உள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு ஷெபாசும் அவரது மகனும் சட்டவிரோத பண பரிமாற்ற
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர். அவர்களின் குடும்ப வங்கிக் கணக்குகளை பிரிட்டன்
முடக்கியது. ஆனால், பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு ஷெபாஸ் மீதான
குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என பிரிட்டன் தேசிய குற்ற விசாரணை நிறுவனம்
தெரிவித்து. பிரிட்டனில் அந்த வழக்கு கைவிடப்பட்டாலும் பாகிஸ்தானில் அந்த
வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் இம்ரான் கான் அரசை கவிழ்த்துவிட்டு ஷெபாஸ் ஷெரீப்ஆட்சிக்கு வந்திருப்பதால் அவரை கண்கொத்திப் பாம்பாக தெஹ்ரிக் கட்சியினரும், பொதுமக்களும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பாகிஸ்தானின் பணவீக்கம் 13 சதவீதமாக உள்ளதுடன் அதன் பண மதிப்பும் குறைந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டிய சவால் தற்போது அரசியல் சதுராட்டத்தால் பதவி இழந்த இம்ரான்கான்
பாகிஸ்தானில் கடந்த ஒரு
வருடமாகப் பொருளாதார சிக்கல் நீடித்து வருகிறது. அதனால், பிரதமராக இருந்த இம்ரான்
கான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. எதற்கும் அசைந்து
கொடுக்காத இம்ரான்கான் நம்பிக்கை இலாத தீர்மானத்தின் மூலம் பிரதமர் பதவியில்
இருந்து தூக்கி எறியப்பட்டார்.
கூட்டணி கட்சிகளின்
ஆதரவோடு இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பாகிஸ்தானில் ஆட்சியமைத்து
வந்தது. அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் சிலர் ஆதரவை திரும்ப பெற்றனர். இதையடுத்து
இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு
வந்தன. இதன் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக
இம்ரான் கானின் பரிந்துரையின்பேரில் பாராளுமன்றத்தை சபாநாயகர் கலைத்தார்.
இது தொடர்பான வழக்கில்,
பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம்
தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்
கான் தோல்வியடைந்ததை அடுத்து தனது பதவியை அவர் இராஜினாமா செய்தார்.
இதையடுத்து புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப்
தேர்ந்தெடுகப்பட்டார்.
கடந்த சனிக்கிழமை
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த
வாக்கெடுப்புக்கு முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ``திருடர்களுடன்
சட்டமன்றத்தில் உட்கார மாட்டேன்" எனக்கூறி தேசிய சட்டமன்ற உறுப்பினர் பதவியை
இராஜினாமா செய்தார்.
அவரை தொடர்ந்து,
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் உறுப்பினர்களும் வாக்கெடுப்பைப்
புறக்கணித்து பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில்,
முன்னாள் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, ``அனைத்து சட்டமன்ற
உறுப்பினர்களும் தேசிய சட்ட மன்றத்திலிருந்து இராஜினாமா செய்வார்கள்" என்று
கூறினார். அதைத் தொடர்ந்து, அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா செய்தனர்.
அதன் பின்னர் இம்ரான்
கான், ``ஒருவர் மீது 16 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் வழக்கும், மற்றொருவர் மீது 8,000 கோடி
ரூபாய் ஊழல் வழக்கும் உள்ளவர்கள் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.
இதை விடப் பெரிய அவமானம் நாட்டுக்கு இருக்க முடியாது. எனவே, தேசிய சட்ட
மன்றத்திலிருந்து இராஜினாமா செய்கிறேன்" என்று கூறிவிட்டு இராஜினாமா
செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் இன்றி
ஷெபாஸ் ஷெரீப் பிரதமராகி அவரது கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
பாகிஸ்தானில் எந்த பிரதமரும் முழுமையாக ஆட்சி செய்ததில்லை என்ற வரலாறு மீண்டும்
திரும்பியதோடு, நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் ஆட்சியை இழந்த முதல் பிரதமர் என்ற
மோசமான சாதனையை இம்ரான் கான் படைத்துள்ளார். நாட்டில் சவால்கள் அடுத்த பிரதமராக
யார் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த போதிலும், இம்ரான் முன் நின்ற அதே
சோதனைகளைத் தான் அவர்களும் எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதே உண்மை. மோசமான
செயல்திறன் கொண்ட பொருளாதாரம், நாட்டில் அதிகரித்து வரும் தீவிரவாதம் மற்றும்
முன்னாள் நட்பு நாடுகளுடன் தற்போது இருக்கும் மோசமான உறவுகள் ஆகியவை அடுத்த
நிர்வாகத்திற்கு நெருக்கடி அளிப்பதில் முன்னிலையில் உள்ளன. அவை வரவிருக்கும்
அரசாங்கத்திற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறவு நிலைகளில் பல சவால்களை
ஏற்படுத்தும்.
220 மில்லியன் மக்கள்
வசிக்கும் பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமருக்கு வரவிருக்கும் முக்கிய
சிக்கல்களாக பொருளாதாரம், கடன், பணவீக்கம் மற்றும் பலவீனமான நாணய மதிப்பு உள்ளது.
இந்த பிரச்சினைகள் இணைந்துதான் கடந்த மூன்று ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சியை தேக்க
நிலையில் வைத்திருக்கின்றன. பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட்
எகனாமிக்ஸ்-ன் துணைவேந்தர் நதீம் உல் ஹக் கூறுகையில், "பொருளாதாரத்தை
மாற்றுவதற்கு தீவிரமான கொள்கை சீர்திருத்தங்கள் தேவை." என்கிறார். நாட்டில்
பணவீக்கம் 12 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, வெளிநாட்டுக் கடன் $130
பில்லியனாகவும், டொலருக்கு நிகரான ரூபாய் 190 ஆகக் குறைந்துள்ளது
குறிப்பிடத்தக்கது. அதிகரிக்கும் தீவிரவாதம் அடுத்ததாக கடந்த ஆண்டு
ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்த தாலிபான்கள் பாகிஸ்தானின் உள்ளூர்
தீவிரவாதிகளுடன் இணைந்து கடந்த சில மாதங்களில் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய ரமலானின் போதும் கூட அரசாங்கப் படைகளுக்கு எதிரான
தாக்குதலை அவர்கள் தொடங்கினார். ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் பாகிஸ்தான் நாட்டை
வெளிநாட்டு தீவிரவாதிகளின் தளமாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று
ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அது தான் பெரிய சிக்கல் என்பது தான்
கவனிக்கத்தக்கது.
ரஷ்யா உக்ரைனை
ஆக்கிரமித்த நாளில் மாஸ்கோவிற்கு இம்ரான் பயணம் செய்ததன் மூலம் இம்ரான் கான்
மேற்குலக நாடுகளை கோபப்படுத்தினார், மேலும் சீனாவின் மனித உரிமைகள் பதிவை
எதிர்த்து மற்றவர்கள் புறக்கணித்தபோது பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கின்
தொடக்கத்தில் கலந்து கொண்ட சில உலகத் தலைவர்களில் ஒருவராகவும் இம்ரான் இருந்தார்.
எந்த நாட்டுடன் நட்பு பாராட்டினாலும் மற்றொரு நாடு பாகிஸ்தானுக்கு எதிராக
திரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது
பாகிஸ்தானின் முன்னாள்
பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீபின் இளைய சகோதரர்தான் இன்றைய பிரதமர் ஷெபாஸ்
ஷெரீப். எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் கட்சியின் தற்போதைய
தலைவராக இருந்து வருகிறார். பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய எதிர்க்கட்சியும்
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கின் நீண்டநாள் அரசியல் எதிரியுமான பாகிஸ்தான் மக்கள்
கட்சியும் இம்ரான் கானுக்கு மாற்றாக தற்போது ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி பரவாயில்லை என்ற
நிலைக்கு வந்து ஆதரவளித்துள்ளனர்.
ஷெபாஸ் ஷெரீப்
தனது சகோதரர் நவாஸ் ஷரீபை போல் மக்கள் கூட்டத்தை தன்பக்கம் இழுக்கும் கவர்ச்சியான
பேச்சாளர் இல்லை. அவரது பலம் நிர்வாகத் திறனில் இருப்பதாக பாகிஸ்தான்
அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கருதுகின்றனர். ஷெபாஸ் ஷெரீப் ஒரு பணக்கார
தொழில்பதிபரின் மகன். ஆரம்ப காலம் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்த ஷெபாஸ்
ஷெரீப் தனது குடும்ப வியாபாரத்தில் கவனம் செலுத்தாமல் தனது சகோதரர் நவாஸ் ஷரீஃபை
போலவே அரசியலை தேர்ந்தெடுத்தார். பணக்கார குடும்பத்தில் பிறந்தாலும் லாஹூரில் உள்ள
அரசு கல்லூரியில் படித்தார். அதன் பின்னர் தனது குடும்ப நிறுவனமான இத்திஃபாக்
குழுமத்தில் பணிபுரிந்தார். பஞ்சாப் மாநில முதலமைச்சர் 1990 ஆம் ஆண்டு பாகிஸ்தான்
பிரதமராக நவாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டபோது, முதல்முறையாக பாகிஸ்தான்
பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் ஷெபாஸ் ஷெரீப். அதன் பின்னர் 1997
ஆம் ஆண்டு நவாஸ் ஷெரீப்பிரதமரான பின்னர் பாகிஸ்தானின் சக்திவாய்ந்த
முக்கியத்துவமான மாநிலமாக கருதப்பட்ட பஞ்சாபின் முதலமைச்சராக ஷெபாஸ்
ஷெரீப்தேர்வானார்.
ஆட்சிக்கு வந்த
இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமையை மாற்ற நவாஸ் ஷெரீப் முயன்றபோது
அவரையும் ஷெபாஸையும் ராணுவம் விரட்டிவிட்டு ஆட்சியை கையில் எடுத்தது. ஷெபாஸ்
குடும்பத்தோடு சவூதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றார். 2007 ஆம் ஆண்டு வரை சவூதி
அரேபியாவில் இருந்த நவாஸ் ஷெரீப்பும், ஷெபாஸ் ஷெரீப்நாடு
திரும்பியவுடன் தத்தமது பதவிகளில் அமர்ந்தனர். ஷெபாஸின் தலைமையில் பஞ்சாப்
மாநிலத்தின் உள்கட்டமைப்பு பெரும் அளவில் மேம்படுத்தப்பட்டது. 2017 ஆம்
ஆண்டு ஊழல் புகார் காரணமாக நவாஸ் ஷெரீப் ஆட்சி கலைக்கப்பட்டவுடன் அவருக்கு
மாற்றாக பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார் ஷெபாஸ் ஷெரீப். ஆனால் 2018 தேர்தலில்
தோல்வியடைந்து எதிர்க்கட்சித் தலைவராக ஷெபாஸ் இருந்து வந்தார். இவர் சீனாவின்
நிதியுதவியுடன் பாகிஸ்தானில் தொடங்கப்பட்ட திட்டங்களில் நெருக்கமாக பணியாற்றிய
அனுபவம் கொண்டவர். சீனாவின் நண்பன். அமெரிக்காவின் எதிரி சீனாவுக்கு
ஆதரவானவராகவும் அமெரிக்காவுக்கு எதிரான நிலைபாடு கொண்டவராகவும் ஷெபாஸ்
பார்க்கப்படுகிறார். கடந்த வாரம் அவர் அளித்த பேட்டியில்கூட, அமெரிக்காவுடன்
நெருக்கமான உறவை வைத்திருப்பது பாகிஸ்தானுக்கு நல்லதல்ல என்று கருத்து
தெரிவித்தார். ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சீனாவுடன்
நெருக்கமாக இருப்போம் என்றும் அவர் கூறி இருக்கிறார். சீனாவும் ஷெபாஸ் ஷரீஃப்
பஞ்சாபில் மேற்கொண்ட திட்டங்களுக்காக பாராட்டு தெரிவித்து இருக்கிறது. தனது
சகோதரர் நவாஸ் ஷெரீப்பைப் போலவே ஷெபாஸ் ஷெரீப் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள்
உள்ளன. கடந்த 2020 ஆம் ஆண்டு ஷெபாசும் அவரது மகனும் சட்டவிரோத பண பரிமாற்ற
வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர். அவர்களின் குடும்ப வங்கிக் கணக்குகளை பிரிட்டன்
முடக்கியது. ஆனால், பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு ஷெபாஸ் மீதான
குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என பிரிட்டன் தேசிய குற்ற விசாரணை நிறுவனம்
தெரிவித்து. பிரிட்டனில் அந்த வழக்கு கைவிடப்பட்டாலும் பாகிஸ்தானில் அந்த
வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் இம்ரான் கான் அரசை கவிழ்த்துவிட்டு ஷெபாஸ் ஷெரீப்ஆட்சிக்கு வந்திருப்பதால் அவரை கண்கொத்திப் பாம்பாக தெஹ்ரிக் கட்சியினரும், பொதுமக்களும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். பாகிஸ்தானின் பணவீக்கம் 13 சதவீதமாக உள்ளதுடன் அதன் பண மதிப்பும் குறைந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டிய சவால் தற்போது ஷெபாஸ் ஷெரீப் வசம் உள்ளது.
No comments:
Post a Comment