Saturday, April 9, 2022

அண்ணாமலையின் அரசியலால் தமிழக பிஜேபிக்கு சிக்கல்

தமிழகத்தில் தாமரை மலரும் என்ற கோஷத்துடன் அரசியல் செய்தவர் தமிழிசை. தமிழிசையின் சபதத்தை செயல்படுத்த முயன்ற‌வர் எல்.முருகன். அந்த இடத்தை அண்ணாமலை கெட்டியாகப் பிடித்துவிட்டார்.   அண்ணாமலை சொல்லும்  பொய்களுக்கு  முக்கியத்துவம் கொடுப்பதற்கு சில ஊடகங்கள்  முண்டியடிக்கின்றன.

திடாவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக அரசியல் செய்யும் அண்ணாமலை தனது கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எதிராகவும் அரசியல் செய்கின்றார்.அதுமட்டுமலாமல் தனக்கு என ஒரு அணியை  உருவாக்கி வருகிறார்.

அண்ணாமலை இன்னமும் அரசியல்வாதியாகவில்லை பழைய பொலிஸ் என்ற மன நிலையில் இருக்கிறார். தனக்கென‌ ஐடி லிங்,  சுய புராணம்,  சுய சமூக அரசியல் , மூத்த உருப்பினர்களை  ஓரம் கட்டுவது என உள்ளடி வேலைகளில் அண்ணாமலை  பிசியாக உள்ளார்.

பாரதீய ஜனதாக் கட்சி ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி.துரைசாமி மேடையில்  பேசும்போது அண்ணாமலை வருவதை ஒருவர் மிகவும் சத்தமாக அறிவித்தார்.  துரைசாமியின் பேச்சுக்கு அவர் இடைஞ்சல் செய்தார்.  மனம் நொந்த துரைசாமி பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு அண்ணாமலை மேடைக்கு வந்தபின்னர்  பேசினார். அந்தக் களேபரத்தில் "என்னைய்யா மிரட்டுகிறீர்களா" என துரைசாமி கேட்டது  அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.  திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த அரசியல்வாதியான துரைசாமிக்கு பாரதீய ஜனதாவில் கிடைத்த மதிப்பு இதுதான்.  

பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழக  தலைவராக இருந்த எல்.முருகனுக்கு, மத்திய அமைச்சர் பதவி கொடுத்ததும் அடுத்த தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், மதுரை பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட சில மூத்தவர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. ஆனால், இவர்கள் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளி பா..-வின் தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷின் ஆதரவுடன் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றார் முன்னாள் .பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை.  !

மூத்த அரசியல்வாதிகளை மதிப்பதில்லை. எல்லோரையும் ஒருமையில் பேசுவது போன்ர குற்றச் சாட்டுகள் அண்ணாமலை மீது சுமத்தப்பட்டுள்ளது. கமலாலயத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய அண்ணாமலை, ‘உள்ளாட்சித் தேர்தலில் 30 சதவிகிதத்துக்குக் குறைவாக வேட்பாளர்களை நிறுத்திய மாவட்ட நிர்வாகிகள் அனைவரும், ஒரு வார காலத்துக்குள் தாமாக அவரவர் பதவியை ராஜினாமா செய்துவிடுங்கள். நானாக நடவடிக்கை எடுத்தால் மொத்த நிர்வாக அமைப்பையும் கலைத்துவிடுவேன் என்றார். இதனால் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். !”

 அவர் சொன்னபடியே அடுத்த ஒரு வாரத்தில் எட்டு மாவட்ட அமைப்புகளைக் கலைப்பதாக அறிவிப்பு வெளியானது. இதை சீனியர் நிர்வாகிகள் யாரும் எதிர்பார்க்கவில்லை. இது தொடர்பாக அண்ணாமலையைச் சந்தித்து சில மாவட்டத் தலைவர்கள் பேசியபோது, ‘உன்மேல ஏகப்பட்ட புகார் வந்துருக்கு. நீ எங்கே பணம் வாங்குறேன்னு எனக்குத் தெரியாதுனு நெனைச்சுக்கிட்டு இருக்கியா? தலைகீழா கட்டித் தொங்கவிட்டுடுவேன் என மிரட்டினார்.

ஒரு மாநிலத் தலைவரிடமிருந்து இப்படியான அணுகுமுறையை  யாருமே எதிர்பார்க்கவில்லை. பொலிஸ் மனநிலையிலிருந்து அண்ணாமலை இன்னும் கொஞ்சமும் மாறவில்லை. கட்சி ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்காக மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் வழக்கமாகப் பணம் வசூலிப்பதைக்கூடப் புரிந்துகொள்ள முடியாதவர், தலைமைப் பொறுப்பில் இருப்பதை எண்ணி அவர்கள் வருத்தப்பட்டார்கள்.  20 வருடங்கள் கட்சிக்காக உழைத்த கமலாலய மேனேஜர் நம்பிராஜனையும் அவர் விட்டுவைக்காமல் அவமானப்படுத்தியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.   

கட்சிக்குள் யாரையும் நம்பாத மனநிலையில் இருக்கிறார் அண்ணாமலை. அதனால், தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கிக்கொண்டு முத்தவர்களை ஓரங்கட்டுவது கட்சிக்குள் சலசலப்பை உருவாக்கியிருக்கிறது. மார்ச் 30-ம் தேதி நடந்த பா.ஜ.க மையக்குழுக் கூட்டத்தில், இது வெளிப்படையாகவே வெடித்திருக்கிறது.  மாவட்ட நிர்வாகங்களில் தன்னுடைய ஆட்கள்தான் அமர வேண்டும் என அண்ணாமலை நினைக்கிறார். ஆனால், வானதி சீனிவாசன், ஹெச்.ராஜா, நயினார் நாகேந்திரன், வி.பி.துரைசாமி போன்ற சீனியர்கள் தங்களது மாவட்டங்களில், தாங்கள் சொல்லும் நபர்களுக்கே பதவி வழங்க வேண்டுமென நிர்பந்திக்கிறார்கள். இதனால் இவர்களுக்கும் அண்ணாமலைக்குமான உரசல் போக்கு அதிகரித்திருக்கிறது. சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி ஆகிய சீனியர்கள் கலந்துகொண்டும்கூட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும், சுமுகமாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பல பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கும் அண்ணாமலை, கட்சிக்குள் நிலவும் பிரச்னைகள் எதையும் சரிசெய்வதில்லை.

தமிழிசை எல்.முருகன் ஆகியவர்கள் தமிழகத்துக்குச் செல்லும்போது  ஆதரவாளர்கள் அவர்களை வரவேற்பதை அண்ணாமலை விரும்பவில்லை. தனது கட்சியினர் தனக்கு மட்டும்தான் மதிப்பளிக வேன்டும் என அண்ணாமலை விரும்புகிறார்

தன் ஆதரவாளரான அமர் பிரசாத் ரெட்டி என்பவரை பா.ஜ.க-வின் ‘இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுப் பிரிவின் மாநிலத் தலைவராக நியமித்திருக்கிறார் அண்ணாமலை. இப்படியொரு பிரிவு எந்தக் கட்சியிலும் இல்லை. இவர்தான் அண்ணாநகரில் ஒரு ஐடி விங் அலுவலகத்தைத் தனியே நடத்தி, அண்ணாமலைக்காகச் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்கிறார். சராசரியாக நாள் ஒன்றுக்கு ‘யோகியே...’, ‘சிங்கமே...’ என அண்ணாமலையைப் புகழ்ந்து, 100 பதிவுகளை இந்த ஐடி விங் பதிவிடுகிறது. இதுபோக, தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்கு அமைப்புரீதியாக 60 மாவட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அண்ணாமலையைப் புகழ்ந்து தினமும் 10 பதிவுகளாவது போட வேண்டும் என பா.ஜ.க நிர்வாகிகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது இந்த ஐடி விங். இது கட்சியின் அதிகாரபூர்வ ஐடி விங் செயலாளரான நிர்மல் குமார் வட்டாரத்துக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. தன்னிச்சையாகத் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ள அண்ணாமலை காட்டும் முயற்சியை சீனியர்கள் யாரும் விரும்பவில்லை.

 திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்து தினமும் அறிக்கை  வெளியிடும் அண்ணாமலை கட்சியை வளர்ப்பதற்கு  எதுவும் செய்வதில்லை. பூத் கமிட்டிகளை அமைப்பது, புதிய அங்கத்தவர்களைச் சேர்ப்பது, மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது என பல வேலைகள் அண்ணாமலைக்கு முன்னால் உள்ளன. அவை எவையும் அண்ணாமலையின் கண்ணுக்குத் தெரிவதில்லை.

அண்ணாமலையைப் பற்ரிய புகார் பட்டியல் டெல்லிவரை சென்றுள்ளதாம் பூனைக்கு மணிகட்டுவது யார் என்பதே தமிழக பாரதீய ஜனதாக் கட்சியினரின் கேள்வி.

No comments: