Monday, April 25, 2022

காங்கிரஸை வலுப்படுத்த பிரசாந்த் கிஷோர் வியூகம்


 பரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சி  தொடர்ந்து இரன்டாவது முறையாகவும் பாரதீய ஜனதாவிடம் ஆட்சியைப் பறிகொடுத்து பரிதவித்து வருகிறது. இழந்த ஆட்சியை மீண்டும் பெற்றுவிடுவதற்கு தன்னாலான முயற்சிகளை காங்கிரஸ் செய்து வருகிறது. இந்தியத் தேர்தல் விற்பன்னரான பிரசாந் கிஷோரின் உதவியை காங்கிரஸ் நாடியுள்ளது. கடந்த மூன்று நாள்களில் இரண்டாவது முறையாக மூத்த காங்கிரஸ் தலைவர்களைத் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்திருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது மற்றும் தேர்தலுக்கு தயார்படுத்துவது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களைச் சந்தித்து பிரஷாந்த் கிஷோர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக தேர்தல் தொடர்பான முன்வடிவினை வழங்கிய பிரஷாந்த் கிஷோர், கடந்த மூன்று நாள்களில் இரண்டாவது முறையாக அந்தக் கட்சியின் தலைவர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

  சோனியா காந்தியின் மகளும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வத்ரா, மற்றும் மூத்த தலைவர்களான .சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி ஆகியோருடன் பிரஷாந்த் கிஷோர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள இடங்களில் எந்தெந்த மாநிலங்களில் தனித்துப் போட்டியிட வேண்டும்,எந்தெந்த மாநிலங்களில் கூட்டணி அமைக்க வேண்டும் போன்ற திட்டங்களை பிரசாந்த் கிஷோர் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

அதன்படி, உத்தரப்பிரதேசம், பிகார், ஒடிஸாவில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிராவில் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோர் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ராகுல் காந்தி ஒப்புக் கொண்டதாக பிரபல தனியார் செய்தி நிறுவனமான .என். தகவல் தெரிவித்துள்ளது.

மூன்றாவது முறையாக   ஆட்சி அமைக்க வேண்டும் என்ற திட்டத்தோடு பாஜகவும் 10 ஆண்டுகளுக்கு பிறகு இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியும் வரிந்து கட்டி தயாராகி வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் வெற்றிக்கு கூட்டணிக் கட்சிகளின் பங்கு முக்கியம் என்பதால் அது குறித்த வியூகங்களை வகுப்பது பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரசாந்த் கிஷோர் சனிக்கிழமை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேசினார். தேர்தல் திட்டம் இந்தச் சந்திப்பின்போது கட்சியினை மறுசீரமைப்பு செய்வது, 2024 மற்றும் இடைப்பட்ட காலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்வது குறித்த தனது திட்டங்களை எடுத்துரைத்ததாகவும் இது குறித்து ஆராய காங்கிரஸ் ஒரு குழுவினை அமைத்ததாகவும் தகவல் வெளியானது.

பிரசாந்த் கிஷோர். ஏற்கனவே அவர் ஆலோசகராக இல்லாமல் கட்சியில் சேர காங்கிரஸ் தலைமை விடுத்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, மேற்கு வங்காளத்தில் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, கங்கிரஸ் கட்சியில் சேரும் பிகேவின் திட்டம் தோல்வியடைந்தது. முக்கிய ஆலோசனை நேற்றைய கூட்டத்தில், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியிலும், அடுத்த ஆண்டு கர்நாடகா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் நடைபெறவுள்ள தேர்தல்களைப் பற்றி ஆலோசனைகள் நடத்தப்பட்டது என்றும், இதில் பிரசாந்த் கிஷோர் தனது திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டதாக செய்தி நிறுவனமான பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.

 கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியைச் சந்தித்துப் பேசினார்.

கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை ஆகியோருடன் பிரசாந்த் கிஷோர்  சந்தித்துப் பேசினார்.காங்கிரஸ் கட்சி அல்லாமல் பாஜகவுக்கு எதிரான அணியை கட்டமைக்கும் முயற்சியில் திரிணமூல் காங்கிரஸ் இறங்கியுள்ள நிலையில் இதனை பிரசாந்த் கிஷோர் முன்னெடுப்பதாக கூறப்பட்டது.. இதனால் காங்கிரஸ்- பிரசாந்த கிஷோர் இடையே மோதல் தொடங்கி, அவர் வெளியேறினார்.யுள்ளதாக கூறப்படுகிறது.

மாநிலத் தேர்தல்களின் தோல்வியினால் பாடம் படித்த காங்கிரஸ் பிரசாந்த் கிஷோரின் ஊதவியை நாடியுள்ளது.

காங்கிரஸுக்கு புத்துயிர் அளித்து, அதை மீண்டும் ஆட்சியில் அமரச் செய்ய தன்னிடம் திட்டங்கள் இருப்பதாக பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், கடந்த ஆண்டு தெரிவித்து இருந்தார்.காங்கிரஸ் கட்சியில் தன்னை சேர்க்க வேன்டும் எனவும் நிபந்தனை விதித்தார். இதற்கு கட்சிக்குள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த பேச்சு நின்றது.தற்போது காங்கிரஸ் தலைமையுடன் பிரசாந்த் கிஷோர் மீண்டும் பேச்சு நடத்தி வருகிறார்.

 இவர் 2014 நாடாளுமன்றத்  தேர்தலில், பாரதீய ஜனதாவுக்கான தேர்தல் வியூகங்களை வகுத்து, அக்கட்சியை அபார வெற்றி பெற வைத்தார். பின், மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ், ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தமிழகத்தில் தி.மு.., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் ஆட்சியை பிடிக்க,  வியூகம் வகுத்துக் கொடுத்தார்.

கட்சி தலைமை மீது அதிருப்தி தெரிவித்து கையெழுத்திட்ட, 'ஜி 23' குழுவில் உள்ள முகுல் வாஸ்னிக்கை தவிர, பிற தலைவர்கள் யாரையும் அழைக்காமலேயே, சோனியா ஆலோசனை நடத்தியதும் அதிருப்தியை அதிகரிக்க வைத்துள்ளது. இந்த அதிருப்தியாளர்கள், 'யாரோ ஒரு வெளிநபர் கட்சியில் சேர்ந்து ஒரு பாரம்பரியம் மிக்க, நுாற்றாண்டை சந்தித்திருக்கும் கட்சியை வழிநடத்த முடியுமா' என்ற கேள்வியை எழுப்புகின்றனர்.

  'தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட  மாநில கட்சிகள் பலவற்றுக்கும், இவர் தான் ஆலோசகராக பணியாற்றுகிறார்.  காங்கிரஸை எதிர்க்கும் கட்சிகலுக்கு ஆலோசகராக இருக்கும்  இவர் எப்படி, காங்கிரஸை வெற்றிபெற வைப்பார்' என்ற சந்தேகத்தையும் அவர்கள் கிளப்புகின்றனர்.அதேநேரத்தில், 'அதளபாதாளத்தில் இருக்கும் கட்சியை மீட்டு எடுக்க, புதிய திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும். பிரசாந்த் கிஷோரை கட்சிக்குள் கொண்டு வருவதன் வாயிலாக, தொண்டர்களுக்கு புதிய நம்பிக்கை கிடைக்கும்.

'இவரது வருகையால், தங்களின் அதிகாரம் பறிபோகுமோ என்ற அச்சத்தால் தான், சில மூத்த தலைவர்கள் எதிர்க்கின்றனர். இவர்களின் கருத்தை ஏற்க கூடாது' என, வேறு தரப்பினர் வாதிடுகின்றனர்.இதனால், பிரசாந்த் கிஷோரை கட்சிக்குள் இணைப்பதா, வேண்டாமா என்ற குழப்பம், நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. இவ்விஷயத்தில் என்ன முடிவு எடுத்தாலும், அதற்கான எதிர்வினை நிச்சயம் எழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

370 முதல் 400 தொகுதிகள் வரை காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கான உத்திகளை கூட்டத்தின்போது பிரசாந்த் கிஷோர் விவரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும், இதன் அடிப்படையில் தேர்தல் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்ற தயார் என்று பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். இது தொடர்பாக இரு தரப்பில் இருந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அதனை காங்கிரஸ் நிராகரித்தது. தற்போது சோனியா கட்சியின் தலைமை பொறுப்பை கையில் எடுத்துள்ள நிலையில் பிரசாந்த் கிஷோர் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

 பாரதீய ஜனதாவை ஆட்சியில் அமர்த்திய பிரசந்த் கிஷோர்,  இப்போது  அக்கட்சியை தூக்கி எறிவதற்கு  காங்கிரஸுடன் கைகோர்த்துள்ளார்.

 

No comments: