Sunday, April 3, 2022

சென்னையை வீழ்த்திய லிவிங்ஸ்டன்

ஐ.பி.எல் 2022 தொடரின் 11-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் அணிகள் மோதின. நானயச் சுழற்சியில்  வென்ற சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், ஷிகர் தவன் களமிறங்கினர். கப்டன் மயங்க் அகர்வால் 4 ஓஆட்னகள் எடுத்திருந்த நிலையில் முகேஷ் சௌத்ரி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பானுகா ராஜபக்ச 9 ஓட்டங்களில் ரன்அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

 ஷிகர் தவன், லியம் லிவிங்ஸ்டன் இணை ஜோடி சேர்ந்தது. இந்த இணை அதிரடியாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டது. 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் தவித்த நிலையில் தவன், லிவிங்ஸ்டன் சிறப்பாக ஆடினர். தவன் 24 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ப்ராவோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய லிவிங்ஸ்டன் 32 பந்துகளில் 60 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவருடைய ஆட்டமிழப்புக்குப் பிறகு பஞ்சாப் அணியின் ஓட்ட வேகம் குறைந்தது. 10 ஓவருக்கு 115 ஓட்டங்களை பஞ்சாப் கடந்த நிலையில் ஸ்கோர் 200 ஓட்டங்களைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இரண்டாம் பாதியில் களமிறங்கிய வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழக்க அணியின் ஓட்ட வேகம் குறைந்தது. 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் 180  ஓட்டங்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ஜோர்டன், ட்வைன் ப்ரிட்டோரியஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரொபின் உத்தப்பா, ருத்ராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். ருத்ராஜ் 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலி ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ராபின் உத்தப்பாவும் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.அவரைத் தொடர்ந்து வந்த வீரர்களும் தொடர்ந்து ஆட்டமிழந்தனர். அம்பதி ராயுடு 13 ஓட்டங்களிலும், கப்டன் ஜடேஜா ஓட்டம்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். 36 ஓட்டக்ன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தடுமாறியது. அந்த நேரத்தில் ஷிவம் துபே மட்டும் அதிரடியாக ஆடி சென்னையை சரிவிலிருந்து மீட்டார். அவருக்கு டோனி பார்ட்னர்ஷிப் அளித்தார். துபே 30 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 57 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் லிவிங்ஸ்டன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டக்ன்களில் ஆட்டமிழக்க டோனி நிதானமாக ஆடினார். டோனியும் 23 ஓட்டங்களில் சென்னை அணி 18 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அதன்மூலம் பஞ்சாப் அணி 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி வீரரான ராஜபக்சேவை சென்னை அணியின் விக்கெட் கீப்பர் டோனி ரன் அவுட் செய்த விதம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.  ஏனெனில் இளம் வீரர்களே கிரிக்கெட் களத்தில் சோர்வடைந்து தளர்ந்து போகும் வேளையில் 40 வயதாகும் டீனி இன்னமும் முழு உடல் தகுதியுடன் ஓடி வந்து மின்னல் வேகத்தில் அவர் ரன்அவுட் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  ஒரு சில வீரர்களுக்கு வயது ஏற ஏற அவர்களது ஓட்டத்தில் வேகம் குறையும். ஆனால் டோனியின் ஓட்டம் இப்போதும் சிறுத்தை போல உள்ளது என இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments: