Friday, April 1, 2022

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா வெற்றி


    பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி .ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 ஆம் திகதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும்  8-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணியின் ப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.  தொடக்க வீரராக களமிறங்கிய அணியின் ப்டன் மயங்க் அகர்வால் 1 ஓட்டம் மட்டுமே எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு ஜோடி சேர்ந்த தவான்,  பானுக ராஜபக்சா அதிரடியாக விளையாட தொடங்கினர். ஆனால் இந்த ஜோடி வெகு நேரம் நிலைக்கவில்லை. ராஜபக்சா 9 பந்துகளில் 31 ஓட்டங்கள் அடித்து மாவி பந்துவீச்சில் சௌதீ-யிடம்  பிடிகொடுத்து வெளியேறினார்.

  ஷிகர் தவான் 16 ஓட்டங்களில் சௌதீ பந்துவீச்சில் வெளியேறினார்.    லிவிங்ஸ்டன் நிலைக்கவில்லை 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.  ஷாருகான், ராகுல் சஹர்  ஆகிய இருவரும் டக் அவுட்டாகி வெளியேறினர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய ரபாடா கடைசி நேரத்தில் வாணவேடிக்கை காட்டினார்.அதிரடியாக விளையாடிய அவர் 16 பந்துகளில் 25 ஓட்டங்கள் அடித்தார். பஞ்சாப் அணி 18.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து  137 ஓட்டங்கள் எடுத்தது.

137ஓட்டங்கள் என்ற இலக்குடன் கொல்கட்டா  களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய ரகானே 12 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஐபிஎல் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 4 ஆயிரம் ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.

அவரை தொடர்ந்து களமிறங்கி சிறப்பாக விளையாட தொடங்கிய அணியின் ப்டன் ஷ்ரேயஸ் அய்யர் 15 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ராகுல் சஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய நிதிஷ் ராணா அதே ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.9 ஓவர்களில்  4 விக்கெட்களை இழந்து  4 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது கொல்கட்டா .

ஆனால் ஆட்டத்தின் 12-வது ஓவரை வீச வந்த ஓடின் ஸ்மித் 30 ஓட்டங்களை வாரி வழங்கினார். அந்த ஓவரில் அதிரடி காட்டிய கொல்கத்தா வீரர்கள் ரஸல் - பில்லிங்ஸ் சிக்சர் மழை பொழிந்தனர்.

அதிரடியாக விளையாடிய ரஸல் 26 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் கொல்கத்தா அணி 14.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 141ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

 கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஸல் 31 பந்துகளில் 70 ஓட்டங்கள் குவித்தார்.

No comments: