ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பிரிவத்த வீதிக்கு அருகாமையில் நேற்று இரவு 8 மணியளவில் முறுகைப் போராட்டம் நடைபெற்றது.
பாதுகாப்புத் தடைகளை அகற்றி உள்ளேஎல்ல முயன்றவர்களை
அங்கிருந்த பாதுகாப்புப் பிரிவினர் அதடுத்து நிறுத்தினர். போராட்டக்கரர்கலுக்கும் ஆர்ப்பாட்டக்
காரர்கLuக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. நிலமையைக் கட்டுபடுத்துவதற்காக அதிரடிப்படையினர்
வரவழைக்கப்பட்டனர்.
போராட்டம் காரணமாக மஹரகம - மிரிஹான வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.எரிபொருள் தட்டுப்பாடு, மின்சாரத் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விலையேற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி
ஏற்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் இல்லம் முற்றுகையிடப்பட்டு பெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த
போராட்டத்தின் போது இராணுவ வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. பலர் காயமடைந்த நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அரசாங்கத்தில் உள்ள
முக்கிய அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதியதின் இல்லம்
முற்றுகையிடப்பட்டு சற்றுமுன்னர் ஊரடங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது.கொழும்பு மிரிஹான பிரதேசத்தில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்
வீடு அமைந்துள்ள பகுதியில் அவரது வீட்டுக்கு செல்லும் வழியை முற்றுகையிட்டுள்ள எதிர்ப்பாளர்கள்
மீது தண்ணீர் தாரை தாக்குதல் மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.எதிர்ப்பில்
ஈடுபட்டுள்ளவர்கள், பொலிஸாரின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
சமையல் எரிவாயு மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டு
நடவடிக்கை எடுக்குமாறு கோரி இவர்கள் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இலங்கையில்
ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் மத்தியியில் அரசாங்கம் தொடர்பாக பெரும்
கொந்தளிப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் வீட்டுக்கு அருகில் கொழும்பின் பல
பகுதிகளை சேர்ந்த மக்கள் பலர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனாதிபதியின் நுகேகொடை மிரிஹான இல்லத்திற்கு எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் இலங்கையில் வராலாற்றில் ஜனாதிபதி ஒருவரின் வீட்டுக்கு அருகில் நடைபெறாத ஆர்ப்பாட்டமாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. வெளியிட்டுள்ளார்.
முதலில் போராட்டம் நடைபெற்ற நுகேகொடை பொலிஸ்
பிரிவில் உடனடியாக ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் இதனையடுத்து கொழும்பு
வடக்கு தெற்கு பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதேவேளை கொழும்பு
- கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள களனியிலும் காலி வீதியில் அமைந்துள்ள பிரதான நகரமான
கல்கிஸ்சையிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார
நெருக்கடி காரணமாக நிலவும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, அத்தியவசிய
பொருட்களின் விலையேற்றங்கள் வறிய மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது மக்கள் கிளர்ச்சியாக உருவெடுக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கூறியிருந்தார்.அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் தற்போது நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களை காணக் கூடியதாக இருக்கின்றது.
இரண்டு தசாப்தங்ளுக்கு முன்னர் ஜே.வி.பியின்
புரட்சி காலம் மற்றும் விடுதலைப் புலிகளின் போராட்டம் காலம் ஆகியவற்றின் போது நாட்டில்
நடைமுறையில் இருந்த அவசரகாலச் சட்டம் , ஊரடங்குச் சட்டம் என்பன தற்போதைய தலைமுறைக்கு
புதியவையாக இருந்தாலும் பொருளாதார நெருக்கடியானது அவர்களுக்கு அந்த அனுபவத்தை பெற்றுக்கொடுத்துள்ளது
என்பதே உண்மை. நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக
தெரிவிக்கப்பட்டிருந்தது.
மிரிஹான, பங்கிரிவத்த மாவத்தைக்கு அருகில்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தை முற்றுகையிட்டு நேற்று இரவு ஆர்ப்பாட்டம் ஒன்று
முன்னெடுக்கப்பட்டது.
நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார்
நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதலை மேற்கொண்ட பின்னர் பாதுகாப்பு படையினருக்கும்
போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பெண் ஒருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில்
பொலிஸ் பஸ் ஒன்றும், ஜீப் ஒன்றும், முச்சக்கரவண்டி ஒன்றும் , 2 டிராஃபிக் மோட்டார்
சைக்கிள்கள் மற்றும் இராணுவ பஸ் ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டன.
சம்பவத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர்
உட்பட 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இரவு போராட்டம் நடந்த பகுதிகளில் தர்போது
அமைதி திரும்பியுள்ளது. நாட்டின் சில பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ்
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. , கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய
கொழும்பு மற்றும் நுகேகொடை பொலிஸ் பிரிவுகளுக்கு இவ்வாறு மறு அறிவித்தல் வரை பொலிஸ்
ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.மேலும்,
கல்கிஸ்ஸ மற்றும் களனி பொலிஸ் பிரிவுகளுக்கும் பொலிஸ் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக
அவர் தெரிவித்தார்.
நுகேகொட ஜூபிலி தூண் பகுதிக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு இடையில் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள் குழுவொன்று வன்முறைச் சூழலை ஏற்படுத்தியமை தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
இரும்புக் ஆயுதங்கள் மற்றும் பொல்லுகளுடன்
ஆயுதம் ஏந்திய குழுவினர், ஆர்ப்பாட்டக்காரர்களைத் தூண்டிவிட்டு, மிரிஹான பங்கிரிவத்தையில்
உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியதாக அந்த
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறையில் ஈடுபட்டவர்களில் பலர் கைது
செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படைவாதிகள்
என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் அரபு வசந்தத்தை உருவாக்குவோம்
என கோசமிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
கலவரக்காரர்கள் திட்டமிட்ட வகையில் சமூக
ஊடகங்களைப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தியுள்ளமை
கைது செய்யப்பட்ட நபர்கள் மூலம் தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் மூலம் பல குழுக்களால் ஏப்ரல்
3 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்ட பொதுப் போராட்டங்களில் தாங்கள் பங்கேற்கவில்லை என்று
பல அரசியல் கட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.பொதுமக்களின் சீற்றம், தற்போதைய அரசாங்கத்திற்கு
ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் நாட்டின் பல நகரங்களில் வெகுஜனப் போராட்டங்களை நடத்துவதற்கு
வழிவகுத்தது.
No comments:
Post a Comment