Monday, April 18, 2022

எதிரிகளை நண்பராக்கிய ஐபிஎல்


  2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஐபிஎல் தொடர் இன்று பல பரிணாமங்களை கொண்டுவந்து கிரிக்கெட்டின் அடிப்படை இலக்கணத்தையே மாற்றும் அளவுக்கு தன்னைத்தானே மெருகேற்றி கொண்டு வளர்ந்து வருகிறது. அதிலும் மன்கட் போன்ற பல அடிப்படை விதிமுறைகளை மாற்றி அமைக்கும் அளவுக்கு இந்த ஐபிஎல் தொடர் வலுவானதாக உள்ளது.

  சர்வதேச கிரிக்கெட்டில் தங்கள் நாட்டுக்காக விளையாடும்போது சண்டை போட்டுக் கொண்ட வீரர்கள் நாளடைவில் காலத்தின் சுழற்சியால் இந்த ஐபிஎல் தொடரின் உதவியால் நண்பர்களாக மாறிய கதைகளும் உள்ளது. எதிரியும் நண்பனும்: ஏதோ ஒரு காரணத்துக்காக சண்டை போட்டுக் கொண்ட அந்த வீரர்களை நண்பர்களாக மாற்றி ஒன்றாக ஒரே அணியில் கட்டிப்பிடித்து வெற்றியை கொண்டாடும் அளவுக்கு மாற்றங்களை நிகழ்த்தும் வல்லமை இந்த ஐபிஎல் தொடருக்கு மட்டுமே உள்ளது.

  1. ஹர்பஜன்சைமன்ஸ்:

  2008-ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய மண்ணில் நடந்த பார்டர்கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரு சைமண்ட்சை குரங்கு என இந்திய வீரர் ஹர்பஜன் சிங் திட்டியதாக எழுப்பப்பட்ட புகார் உலக அளவில் மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. அதன் காரணமாக இந்திய வீரர் ஹர்பஜனுக்கு ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்ட நிலையில் அதற்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்ததால்   அது விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன் காரணமாக எலியும் பூனையுமாக மாறிய அந்த ஜோடி ஐபிஎல் தொடரில் மும்பை , டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய அணிகளுக்காக மீண்டும் எதிரிகளாக விளையாடியது.

அந்த நிலையில் 2011-ஆம் ஹர்பஜன் சிங் இடம் பெற்றிருந்த மும்பை இந்தியன்ஸ் ஆண்ட்ரு சைமண்ட்சை வாங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன்பின் நாட்டுக்காக விளையாடியபோது போட்டுக்கொண்ட சண்டையை மறந்த இந்த ஜோடி ஒன்றாக ஒரே அணியில் விளையாடியதைப் பார்க்க முடியும் என ரசிகர்கள் கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார்கள். - 1. ஹர்பஜன்சைமன்ஸ்:

  2008-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த பார்டர்கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரு சைமண்ட்சை குரங்கு என இந்திய வீரர் ஹர்பஜன் சிங் திட்டியதாக எழுப்பப்பட்ட புகார் உலக அளவில் மிகப் பெரிய சர்ச்சையாக வெடித்தது. அதன் காரணமாக இந்திய வீரர் ஹர்பஜனுக்கு ஒரு போட்டியில் தடை விதிக்கப்பட்ட நிலையில் அதற்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி அது விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன் காரணமாக எலியும் பூனையுமாக மாறிய அந்த ஜோடி ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் ஆகிய அணிகளுக்காக மீண்டும் எதிரிகளாக விளையாடியது. அந்த நிலையில் 2011-ஆம் ஹர்பஜன் சிங் இடம் பெற்றிருந்த மும்பை இந்தியன்ஸ் ஆண்ட்ரு சைமண்ட்சை வாங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதன்பின் நாட்டுக்காக விளையாடியபோது போட்டுக்கொண்ட சண்டையை மறந்த இந்த ஜோடி ஒன்றாக ஒரே அணியில் விளையாடியதைப் பார்க்க முடியும் என ரசிகர்கள் கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

2. ஹர்பஜன் – பொண்டிங்:

 அதே மங்கிகேட் சர்ச்சையின் போது தனது அணி வீரர் சைமன்சை திட்டிய ஹர்பஜன் சிங்கை தடை செய்ய வேண்டும் என்று அவுஸ்திரேலிய ப்டனாக இருந்த ரிக்கி பொண்டிங் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அத்துடன் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது விக்கெட்டை அதிகமுறை எடுத்த  சாதனை படைத்த ஹர்பஜன் சிங்கை நாட்டுக்காக விளையாடும் போதெல்லாம் அவர் ஒரு எதிரியாக பாவித்து வந்தார். அந்த நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு அதேபோல மும்பை இந்தியன்ஸ்க்காக இவர்கள் ஒன்றாக விளையாடுவார்கள் என்று பல ரசிகர்களும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அந்த தருணத்தை சாத்தியமாக்கி காட்டிய ஐபிஎல் ஒரு போட்டியில் ஹர்பஜன் வீசிய பந்தில் கிடைத்த கேட்ச்சை ஸ்லிப் பகுதியில் சூப்பர் மேனை போல ரிக்கி பொண்டிங் தாவிப் பிடித்ததை பார்த்த ஹர்பஜன் அவரை கட்டிப்பிடித்து பழைய பகையை மறந்து நண்பர்களாக மாறியது என்றும் மறக்க முடியாது. 

- 3. வார்னர்பேர்ஸ்டோ:

 அனல் பறக்கும் ஆஷஸ் தொடரில் தங்களது நாட்டுக்காக விளையாடியபோது  அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் ஒரு கட்டத்தில் கடுமையாக ஸ்லெட்ஜிங் செய்துகொண்டு எதிரிகளாக இருந்தனர். ஆனால் 2019-ஆம் ஆண்டு இவர்களை ஹைதராபாத் அணியில் இணைத்த ஐபிஎல் ஒரே அணியில் விளையாட வைத்தது. அதன் காரணமாக பழையதை மறந்த இந்த ஜோடி அதுவும் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கி எதிரணிகளைப் பந்தாடி வெற்றிகளைக் குவித்தது. கடந்த 2021 வரை ஒன்றாக விளையாடிய இந்த ஜோடி ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஓட்டங்களைப் பதிவு செய்த ஓப்பனிங் ஜோடி (185  ஓட்டங்கள்) என்ற சாதனையும் படைத்துள்ளது. 

- 4. அஷ்வின்பட்லர்:

மேற்கண்ட ஜோடிகள் சர்வதேச கிரிக்கெட்டில் சண்டை போட்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் ஜோடி சேர்ந்ததால் என்றால் இந்தியாவின் அஷ்வின், இங்கிலாந்தின் பட்லர் ஆகியோர் ஐபிஎல் தொடரில் சண்டை போட்டு அதே ஐபிஎல் தொடரால் தற்போது இணைந்துள்ளனர். கடந்த 2019-ஆம் ஆண்டு பஞ்சாப் அணியின் ப்டனாக இருந்த அஷ்வின் ராஜஸ்தானுக்கு விளையாடிய பட்லரை மன்கட் செய்ததை பற்றி பெரிதாக கூற வேண்டியதில்லை. அதனால் எதிரும் புதிருமாக இருந்த இவர்கள் அவர்களே எதிர்பாராத வண்ணம் இம்முறை ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் சங்கடமான நிலை ஏற்பட்டது. இருப்பினும் பழையதை மனதில் வைத்துக் கொள்ளாத இந்த ஜோடி தற்போது ராஜஸ்தானுகாக ஒன்றாக சிரித்த முகத்துடன் விளையாடுவது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. குறிப்பாக குஜராத்துக்கு எதிரான 24-ஆவது லீக் போட்டியில் தொடக்க வீரராக ஜோஸ் பட்டிலர் களமிறங்க யாருமே எதிர்பாராத வண்ணம் 3-வது இடத்தில் அஷ்வின் களமிறங்கியதால் இந்த ஜோடி ஒன்றாக பேட்டிங் செய்யும் என கனவிலும் நினைக்காத ரசிகர்களும் நேரில் பார்த்து மகிழ்ந்தனர்.

. 5. பண்டியாஹூடா:

கடந்த 2021இல் உள்ளூர் கிரிக்கெட்டில் பரோடா அணிக்காக விளையாட இருந்தபோது அதன் க‌ப்டன் க்ருனால் பாண்டியா தன்னை கெட்ட வார்த்தைகளால் திட்டியதாக அதே அணியைச் சேர்ந்த இளம் வீரர் தீபக் ஹூடா குற்றம் சாட்டியது ரசிகர்களை அதிர வைத்தது. அதன்பின் பரோடா அணியில் தடை செய்யப்பட்ட ஹூடா ராஜஸ்தானுக்கு குடி பெயர்ந்து இந்திய அணிக்காக விளையாடும் அளவுக்கு உயர்ந்தார். அந்த நிலையில் இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ அணி நிர்வாகம் ஏலத்தின் போது அவர்களை ஜோடியாக வாங்கியது ரசிகர்களை வியக்க வைத்தது. அதன்பின் ஐபிஎல் தொடரின்போது இவர்கள் சண்டை போட்டுக் கொள்வார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு முதல் போட்டியிலேயே ஒரு விக்கெட் விழுந்தபோது கட்டிப்பிடித்து கொண்டாடிய இந்த ஜோடி ஆச்சரியத்தை கொடுத்து தற்போது ஒன்றாக அண்ணன் தம்பியை போல விளையாடி வருகிறது.

No comments: