Tuesday, September 14, 2021

உலகக்கிண்ண உதைபந்தாட்ட போட்டி அட்டவணையை மாற்ற ஆலோசனை

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஆண்களுக்கான உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடத்துவதற்கான  ஆலோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற உதைபந்தாட்ட வீரர்களுடன்   ஆலோசனை செய்து பீபா திட்டத்தை வெளியிட்டதுஐரோப்பிய உதைபந்தாட்டச் சங்கம் இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்ததுஐரோப்பாவின் எதிர்ப்பையும் மீறி, ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஆண்கள் உலகக் கிண்ணப் போட்டியை  விளையாடுவதற்கான சர்வதேச கால்பந்தாட்டத்தை மறுவடிவமைப்பு செய்வதற்கான திட்டத்தை பீபா விவரித்தது.

உலகக் கிண்ணவெற்றியாளர்கள் உட்பட சுமார் 80 முன்னாள் சர்வதேச வீரர்கள் இரண்டு நாட்கள் பீபாவுடன் ஆலோசனை செய்ய கட்டாருக்குச்    சென்றனர். இரண்டு முறை போட்டிகளை நடத்துவதற்கு   ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.

புதிய திட்டத்தை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டோம்" என்று பிறேஸில் வீரர் ரொனால்டோ கூறினார், அவர் நான்கு உலகக் கிண்ணப்போட்டிகலில் விளையாடியவர். இரண்டு முறை கிண்ணம்  வென்ற  அணியில் இருந்தவர். பீபாவின் முன்மொழிவை "அற்புதம்" என்று விவரித்தார்.தென் அமெரிக்கர்கள் ஒரே பக்கத்தில் இருக்கிறார்கள்" என்று  ஐரோப்பிய உதைபந்தாட்டத் தலைவர் செஃபெரி தெரிவித்தார்.

ஜேர்மனியின் ஜர்கன் க்ளின்ஸ்மேன், பிறேஸிலின் ராபர்டோ கார்லோஸ், ஐவரி கோஸ்டின் டிடியர் ட்ரோக்பாடென்மார்க்கின் பீட்டர் ஷ்மெய்செல் போன்ற ஓய்வு பெற்ற வீரர்கள்  உட்பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

முன்னாள் ஆர்சனல் பயிற்சியாளரை கடந்த ஆண்டு ஃபிஃபா தனது உலகளாவிய வளர்ச்சி இயக்குநராக நியமித்ததிலிருந்து அர்சென் வெங்கர் இந்த திட்டத்தை வழிநடத்தினார்.2024 முதல் சர்வதேச விளையாட்டு அட்டவணையை வடிவமைக்கும் ஒட்டுமொத்த திட்டம் பற்றிய  விபரம் விரைவில் வெளியிடப்படும் .

 2018 ஆம் ஆண்டு முதல்  இந்த யோசனை முன்வைக்கப்பட்டதுஇது ஐரோப்பிய உதைபந்தாட்ட,கிளப், தேசிய அணி ஆகியவற்றின் போட்டிகளுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

ஐரோப்பாவிலும், தென் அமெரிக்காவிலும் உள்ள‌ 211 வாக்குகளில் 65 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளன, ஆப்பிரிக்காவின் 54 வாக்குகள்  இதற்கு ஆதரவாக இருக்கும் என  எதிர் பார்க்கப்படுகிறது.

  ஒலிம்பிக் விளையாட்டுகளிலிருந்து எதிர்ப்பை எதிர்பார்க்கலாம்,   வணிக வருவாயில் பில்லியன் கணக்கான டாலர்களை உறிஞ்சும் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும்.

ஒப்புதல் அளிக்கப்பட்டால், 2028 மற்றும் 2032-ஆம் ஆண்டு ஜூலை இறுதியில் தொடங்கும் கோடைகால ஒலிம்பிக்கில் மோதாமல் இருப்பதற்காக உலகக்கிண்ணப் போட்டி  ஒற்றைப்படை எண்ணிக்கையிலான வருடங்களுக்கு நகரும்.

அடுத்த ஆண்டு 211 உறுப்பினர் கூட்டமைப்புகளின் மாநாட்டால் அது அங்கீகரிக்கப்படும் என்றாலும், டிசம்பர் மாதத்தில் பீபா  ஒரு முடிவை எடுக்கும்.

No comments: