Friday, September 3, 2021

ஆப்கானிஸ்தானை ஆளப்போகும் அதிகாரம் மிக்க தலைவர்கள்

தலிபான்களின்  ஆட்சி  எப்படி  இருக்கும்  என்ப‌தை   உலகம் ஏற்கெனவே  அறிந்துள்ளது. இப்போது  இரண்டாவது  முறையாக  ஆட்சி  அமைக்கும்  சந்தர்ப்பத்தை  தலிபான்கள்  ஏற்படுத்தியுள்ளனர். முதல்  முறை  தலிபான்கள்  ஆட்சி  அமைத்த்போது  ஏற்பட்ட  வடுக்களையும், வலிகளையும்  ஆப்கான்  மக்கள் மற‌க்கவில்லை. சர்வ  அதிகாரம்  உள்ள  சர்வாதிகார  ஆட்சியில்  வாழ  விருப்பம் இல்லாதவர்கள் நாட்டைவிட்டு  வெளியேறிவிட்டார்கள். இன்னும்  பலர்  வெளியேறுவதற்கு  சந்தர்ப்பத்தை  எதிர்ப்பாத்து  காத்திருக்கின்றனர்.

ஆப்கானில்   தங்கி இருந்த வெளிநாட்டுப்படைகள் வெளியேறிய  நிலையில் புதிய  அரசாங்கம் ஒன்றை  அமைப்பதில்  தலிபான்கள்  தீவிரம்  காட்டி வருகின்றனர். ஜனநாயகம்  எனச் சொல்லிக்கொள்ளும் அனைத்து  நாடுகளிலும் சகல அதிகாரங்களும் ஜனாதிபதியிடம் அல்லது  பிரதமரிடம்  குவிந்துள்ளன. வானளாவிய அதிகாரங்களாலும் அரசியல்  அதிகாரப்  போட்டியாலும் பல  நாடுகள்  சீரழிந்தமை  வரலாற்றில்  பதியப்பட்டுள்ளன.

தலிபான்கலின் ஆட்சியில்  அப்படி  எல்லாம் நடக்க  சந்தர்ப்பம் இல்லை. ஈரானைப்  போன்று பிரதமருக்கும்  ஜனாதிபதிக்கும்  மேலான சுப்ரீம் லீடர் எனப்படும் உயர் தலைவர்  ஒருவரை தலிபான்கள் நியமிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.  அதேபோல  முல்லா ஹிபத்துல்லா அகுந்த்சாதா‍வை உயர்  தலைவராக  நியமிக்க தலிபான்கள்  முடிவு   செய்ததாக  தகவல்கள்  வெளியாகி  உள்ளன.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள, ஹூவாட்ட‌ நகரில் 1961-ம் ஆண்டில் பிறந்த ஹிபத்துல்லா அகுந்த்சாதா. 1980களில்  பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு  குடும்பத்துடன் குடியேறினார் ஹிபத்துல்லா.பழமைவாத முஜாஹிதின் அமைப்பின் மீதும் அதீத நம்பிக்கை கொண்டவராவார். இஸ்லாமிய மத வழிபாட்டு அறிஞர்கள் குழுவுக்கு தலைமை வகித்து வந்த ஹிபத்துல்லா, 1980-களில் ரஷ்ய படைகளை எதிர்த்தார். தலிபான் அமைப்பில் 1994-ல் இணைந்தார்.

தலிபான்களுக்கு  பல  குழுக்கள்  உதவி  செய்கின்றன. அந்தக் குழுக்களில்  உள்ள தலைவர்களுக்கும்  அரசில்  பங்களிக்க  சந்தர்ப்பம்  வழங்கப்படும்  என  எதிர்பார்க்கப்படுகிறது. வேறு  வேறு  பெயர்களில்  செயற்பட்டாலும்  அவைகளின் கொள்கைகள் அனைத்தும் ஒரே  நோக்குடையவை.

ஆப்கானின் அடுத்த அதிபர் அப்துல் கானி பராதர்தான்' எனச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தலிபன்கள் அமைப்பைத் தொடங்கிய நால்வரில் இவரும் ஒருவர். மறைந்த தலிபன் தலைவர் முல்லா ஒமரின் சகோதரியைத்தான் முல்லா பராதர் மணந்திருக்கிறார். முல்லா பராதர் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு எப்போதும் ஆதரவாக இருந்தவர்.

முல்லா ஒமர் உயிருடன் இருந்தபோது தலிபான்களின் நிதி திரட்டல், இராணுவ விவகாரங்களைக் கண்காணித்தவர் பராதர். ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக மிகத் தீவிரமான தாக்குதல்களை பராதர்   நிகழ்த்தியுள்ளார்.

தலிபன்களின் உச்சபட்ச தலைவர் மெளலவி ஹிபத்துல்லா அகுந்த்ஸடா.  (Mawlawi Hibatullah Akhunzaட)   எந்தவொரு விஷயத்திலும் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பவர். 2016-ம் ஆண்டு, அமெரிக்கர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில்  அப்போதைய தலிபான்கள் தலைவர் அக்தர் மன்சூர் உயிரிழந்தார். அவர் உயிரிழப்பதற்கு முன்பாக எழுதிய உயிலில், ஹிபத்துல்லாவை தனது வாரிசாக அறிவித்திருந்ததாகத் தெரிகிறது. இதனால், மன்சூரின் மறைவுக்குப் பின்னர் தலிபான்களின் தலைவரானார் ஹிபத்துல்லா.

இஸ்லாமிய அறிஞரான இவர், ஆப்கானின் கந்தஹார் பகுதியைச் சேர்ந்தவர். ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணகர்த்தா  ஹிபத்துல்லா,  இவர் இஸ்லாமிய மதம் சார்ந்து பல்வேறு புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

தலிபான் உருவாவதற்கு முன்பாகவே, ஹிபத்துல்லா பல்வேறு கிளர்ச்சிகளில் முக்கிய  பங்காற்றியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. 1980-களில் சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான ஆப்கான் கிளர்ச்சியில் பங்கு வகித்தவர் ஹிபத்துல்லா. போர் வீரனாக அறியப்படுவதைவிட, மத அறிஞராகவே அறியப்படுகிறார் இவர்.

விசுவாசிகளின் தலைவர்' என தாலிபன்களால் புகழப்படும்  மௌலவி ஹிபத்துல்லா அகுந்த்ஸடா. ஆண்டுக்கு ஓரிரு முறை மட்டும் வெளியில் தலைகாட்டுவாராம். சுமார் 60 வயதாகும் இவர், ஒரு மர்ம மனிதராகவே வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

தலிபான் நிறுவனர் முல்லா ஒமரின் மகன்தான் முல்லா முகமது யக்கூப். தலிபான்  இராணுவப் படையின் தளபதியான இவர், பல்வேறு தாக்குதல்களை முன்னின்று நடத்தியிருக்கிறார்.2016-ல் அக்தர் மன்சூர் மறைவுக்குப் பிறகு, முல்லா ஒமரின் மகன் என்ற முறையில் இவர்தான் தலிபான்களின் தலைவராக்கப்படவிருந்ததாகவும், ஆனால், அப்போது மிகவும் சிறு வயதில் இருப்பதால் ஹிபத்துல்லாவை தலைவராக முல்லா யக்கூப்பே முன்மொழிந்ததாகவும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது.

முல்லா யக்கூப்புக்கு 30-லிருந்து 35 வயதுக்குள்ளாக இருக்குமெனக் கூறப்படுகிறது. தற்போது தலிபான்களின் துணைத் தலைவராகச் செயல்பட்டு வரும் இவர், பல்வேறு நடவடிக்கைகளை ஆப்கானிஸ்தானுக்கு உள்ளிருந்தே செய்து கொண்டிருந்ததாகத் தெரிகிறது.

முஜாஹிதீன் அமைப்பில் முக்கியத் தலைவராக இருந்த ஜலாலுதீன் ஹக்கானியின் மகன்தான் சிராஜுதீன் ஹக்கானி. தற்போது தலிபான்   அமைப்பின் துணைத் தலைவராக இருக்கும் இவர், ஹக்கானி பிரிவின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். தலிபான்களின் நிதி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இராணுவப் பொருள்களைப் பாதுகாப்பதற்குமான பிரிவுதான் ஹக்கானி.

2008-ம் ஆண்டு காபூலில் உள்ள ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஒரு அமெரிக்கர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் சிராஜுதீன் ஹக்கானி முக்கிய பங்கு வகித்ததால்  அமெரிக்கா இவரை வெகு காலமாகத் தேடி வந்தது.

2008-ம் ஆண்டில், ஆப்கான் அதிபராக இருந்த ஹமீது கர்சாயை கொல்ல தலிபான்களால் திட்டமிடப்பட்டது. அந்த திட்டமிடலில் முக்கியப் பங்காற்றியவர் சிராஜுதீன் ஹக்கானி.தற்போது இவருக்கு 47-லிருந்து 55 வயதுக்குள்ளாக  

ஆப்கானிஸ்தானில், 2001-ம் ஆண்டுக்கு முன்பான தலிபான்  ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் முகமது அப்பாஸ். 10 ஆண்டுகளுக்கு மேலாக கட்டாரின்ரின் டோஹாவில் வாழ்ந்து வந்த முகமது அப்பாஸ், 2015-ல் அங்கிருக்கும் தலிபான்   அலுவலகத்துக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆப்கன் அரசுடன் நடந்த பல்வேறு பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டிருக்கிறார் இவர். பல்வேறு நாடுகளில் நடந்த கூட்டங்களுக்கு, தலிபான்களின் பிரதிநிதியாகவும் சென்றிருக்கிறார்

தலிபான்கள் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் அப்துல் ஹக்கானி. இவர் தலிபானின் நிழல் தலைமை நீதிபதியாக இருந்திருக்கிறார். மத அறிஞர்களின் கவுன்சிலுக்கு தலைவராகச் செயல்பட்டிருக்கிறார். தற்போதைய தலிபான்   தலைவர் ஹிபத்துல்லாவின் மிகுந்த நம்பிக்கைக்குரியவர்.

  ஆப்கனில்தலிபான்கள்,  ஆட்சி முறையாக அமைக்கப்படும் போதுதான் இவர்களில் யார் யாருக்கு என்னென்ன பொறுப்புகள் வழங்கப்படும் என்பது தெரியவரும்.

No comments: