Friday, September 17, 2021

முகமது சலாவின் 100 ஆவது கோல்

இங்கிலிஷ் இங்கிலாந்து பிரிமியர் லீக்  போட்டியில் லிவர்பூல் வீரர் முகமது சாலா 100 ஆவது கோலை  அடித்துள்ளார். இங்கிலாந்து பிரிமியர் லீக் போட்டியில் 100 கோல் அடித்த 30 ஆவது வீரர் முகமது சாலா. இதேவேளை விரைவாக 100 கோலடித்த ஐந்தாவது வீரராக முகமது சாலா விளங்குகிறார்.


ஆலன் ஷியரர் (124),  ஹாரி கேன் (141),  செர்ஜியோ அகுவெரோ (147) , தியரி ஹென்றி  (160) ஆகியோர் ஆகியோர் முதல் நான்கு இடங்கலில் உள்ளனர். 162 போட்டிகளில் விளையாடிய எகிப்திய   முகமது சாலா 100 கோல்கள் அடித்தார். முகமது சாலா தனது முதல் பிரீமியர் லீக் கோலை செல்சியாவுக்காக அடித்தார்.லீட்ஸ்  அணிக்கு எதிரான் போட்டியில் 20 ஆவது நிமிடத்தில் முகமது சாலா 100 ஆவது கோலை அடித்தார்.





No comments: