Sunday, September 19, 2021

கப்டன் சுமையை இறக்குகிறார் கோலி

  இந்திய கிறிக்கெற் அணியின் டெஸ்ட்,  50 ஓவர் , ரி20  ஆகியவற்றின்  கப்டனான கோலி ரி20 அணி கப்டன் பதவியைத் துறக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

கிங் கோலி ரி20 கப்டன் பதவியை உதறுகிறார் என்பதை அவரது ரசிகர்களால் ஜீரணிக்க முடியவில்லை. கோலிக்கென்று ரசிகர் ப‌ட்டாள‌ம் உள்ளது. கண்மூடித் திறப்பதற்குள்  50 ஓட்டங்கள், மின்னல் வேகத்தில் 100  ஓட்டங்கள் என்பது கோலியின்  அடையாளம். கோலியின் ரசிகர்கள் மட்டுமல்லாது கிறிக்கெற் ரசிகர்களும்மும் கோலியின் விளையாட்டு  பிடிக்கும்.

ரி 20 பதவியைத் துறப்பது பற்றி கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். வேலைப் பளு அதிகமாக உள்ளது. எனவே இந்திய அணியை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வழிநடத்த எனக்கு சற்று வேலை குறைப்புத் தேவைப்படுவதாக நினைக்கிறேன். அதன் பொருட்டு ஒக்டோபர் மாதம் துபாயில் நடக்கும் ரி20 உலகக் கிண்ணத் தொடருடன் ரி20 க‌ப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன். நான் க‌ப்டன் பதவியிலிருந்து விலகினாலும் ஒரு துடுப்பாட்ட வீரனாக ரி20 அணிக்கு எனது பங்களிப்பை முழுமையாக கொடுப்பேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அண்மைக் காலமாக கோலியின் துடுப்பாட்டம் சோர்வடைந்துள்ளது. 50  போட்டிகளில் விளையாடியும் கோலியால் 50 ஓட்டங்கலை எட்ட முடியவில்லை.  அவருக்கு எதிரான விமர்சனங்கள் அதிகளவில் முன் வைக்கப்பட்டன. ஆனால், இந்திய  அணி தொடர்  வெற்றிகளைக் குவித்து வருகிறது.  உலக கிறிக்கெற்றில் மூன்று வடிவங்களிலும் 50 ஓட்டங்களுக்கு  மேல் சராசரி வைத்திருப்பவர் கோலி மட்டும்தான். ஆகையால் தலைமைப் பதவி  அவரது துடுப்பாட்டத்தைப் பாதிக்கவில்லை.

வெளிவிவகாரங்கள்தான் அவரது இந்த முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இது உடனடியாக நடந்ததல்ல பல மாத  நிகழ்வுகளின் பின்னணி இருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. கோலியின் அறிவிக்குப் பின்னர் பலவகையான மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்திய  அணியில் தொடர்ந்து இருக்க  வேன்டும் என்ற  ஆக்ரோசத்தில் இளம் வீரர்கள் விளையாடுவதுதான் வெற்றிகுக் காரண‌ம் எனவும் சொல்லப்படுகிறது.

கோலிக்கும் ரோஹித் சர்மாவிக்கும் இடையே நல்லுறவு இல்லை.  இருவருக்குமிடையேயான பனிப் போர் நிலவிவருகிறது.

ரோஹித் சர்மாவை  அணியில் இருந்து தூக்குமாறும்,, ஷிக‌ர் தவான் அணிக்கு அவசியம் என கோலி அடம் பிடித்ததாகவும் செய்தி வெளியாகி உள்ளது. தனக்கு அடுத்த நிலையில் இருப்பவரை கோலி ஓரம் கட்டுவது அனைவரும் அறிந்ததே. ரகானே,  அஸ்வின்  ஆகியோரை  விளையாடும் அணிக்குள் எடுக்காது  வெளியில் இருத்தியமை இதற்கு உதாரணம்.

ரோஹித்துக்கு  34 வயதாகி விட்டது எனவே அவரை துணை கப்டன் பொறுப்பிலிருந்து தூக்கி விட்டு கே.எல்.ராகுலை நியமிக்கக் கோலி கோரியாதாகவும் ரி20-யிலும் தனக்கு துணையாக ரிஷப் பந்தை துணைக் க‌ப்டனாக நியமிக்குமாறும் கோலி நிர்பந்தித்துள்ளார் என  பிடிஐ செய்தி ஏஜென்சியின் தகவல் தெரிவிக்கிறது.  ரி20 உலகக்கிண்ணத்தை வெல்லவில்லை என்றால் தன்னிடம் இருந்துகப்டன் பதவி பறிக்கப்படும் என்பது கோலிக்குத் தெரியும். அதிருப்திக ளை அதிகம் சம்பாதித்ததால் ஒரு நாள் அணி கப்டன் பதவியும் பறிபோகும் அபாயம் உள்ளது.

2019  ஆம் ஆண்டு உலகக் கிண்ணப்  போட்டியில்  4ம் நிலையில் யாரையும் நிரந்தரமாக விளையாட விடாமல் வீரர்களை மாற்றியமை அப்போது சர்ச்சையானது.   உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் வேண்டுமென்றே இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாடியமையும் விமர்சனத்துக்குள்ளானது.உலகின்  முதல் நிலை ஸ்பின்னரான அஸ்வினை வேன்டுமென்ரா புறக்கணித்தது  போன்றவற்றை கோலிக்கு எதிராகப் பட்டியலிடலாம்.

டோனியின் அறை 24 மணி நேரமும் சக வீரர்களுக்காக திறந்திருக்கும். வீரர்கள் அவர் அறையில் என்ன வேண்டுமானால் செய்யலாம், கிறிக்கெற் பற்றியும் பேசலாம். உணவு அருந்தலாம். ஆனால் மைதானத்துக்கு வெளியே கோலியைப் பிடிக்க முடியாது. தொடர்பில் இருக்க மாட்டார். ரோகித் சர்மாவிடம் டோனியின் சாயல்கள் வேறு வகையில் உள்ளன.

ஜூனியர் வீரர்களை உணவுக்காக வெளியே அழைத்துச் செல்வார் ரோகித் சர்மா. அவர்கள் சரியாக ஆடாத போது தட்டிக்கொடுத்து அவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு ஊக்குவிப்பார். ஜூனியர் பிளேயர்களைப் பொறுத்தவரை கோலி மிகவும் பலவீனமாகக் கையாண்டுள்ளார். அவர்கள் சரியாக ஆடாத போது உதவமாட்டார், அணியை விட்டுத் தூக்கி விடுவார்.

 ரிஷப் பந்த் சரியாக ஆடுவதில்லை என்று பத்திரிகையாளர்களிடம் கூறினார் கோலி.   உமேஷ் யாதவ் அனுபவம் உள்ள வீரர்.  உள்நாட்டு மட்டைப் பிட்ச்களில் அவர்தான் ஓடும் குதிரை, ஆனால் வெளிநாடுகளில் யாராவது காயமடைந்தால்தான் உமேஷுக்கு அணியில் இடம். கேப்டனின் உதவி தேவைப்படும் போது வீரர்களுக்காக அங்கு கோலி நிற்கமாட்டார் என்று கூறியதாக பிடிஐ செய்தி கூறுகிறது

  கோலியின் தலைமையில்    45 ரி20 போட்டிகளில் விளையாடிய இந்திய  அணி  27 போட்டிகளில் வென்றுள்ளது.  இது 60% ஆகும்.    கோலி 311 போட்டிகளில் 9,929 ஓட்டங்களை எட்டியுள்ளார், இந்த ஐபிஎல் தொடரில் 10,000 ஓட்ட‌ மைல்கல்லை எட்டுவார்.  கோலி 5 சதங்கள் 72 அரைசதங்களுடன் மொத்தமாக 41.71 என்று சராசரி வைத்துள்ளார்

  தென்.ஆபிரிக்கா,நியூஸிலாந்து,அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய  நாடுகளில் ரி20 தொடரை வென்ற  ஆசிய கப்டன் கோலி மட்டும்தான். இலங்கை,அயர்லாந்து, மேற்கு  இந்தியத் தீவுகள் ஆகியா நாடுகளில் நடந்த ரி20 தொடர்களிலும்கோலி  தலைமையிலான இந்திய  அணி வெற்றி பெற்றது.


ஐபிஎல் தொடரில் கோலியின் தலைமையிலான அணி இது வரை சம்பியனாகவில்லை. ஐசிசி யின் கிண்ணங்கள் எவையும் கோலியின் வசமாகவில்லை. டோனிக்குப் பின்னர் கோலி சாதனை செய்வார் என இந்திய கிறிக்கெற் நிர்வாகம் எதிர்பார்த்தது. அவர்கலின் எதிர்பார்ப்பு ஏமாற்றமானது. புதியதொரு தலைமையைதேடும் நிலை இந்திய  கிறிக்கெற்றுக்கு  ஏற்பட்டுள்ளது.

No comments: