தமிழகத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது. இதனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிர்ச்சியடைந்துள்ளது. இந்திய நாடாளுமன்றத் தேர்தல், தமிழக சட்ட மன்றத் தேர்தல்களின் போது பாட்டாளி மக்கள் கட்சியின் உபயத்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நன்மையடைந்தது.
தமிழக
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப்
போட்டியிடுவதற்காக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாடாளி
மக்கள் கட்சி தேர்தலில்
போட்டியிட விரும்பிய கட்சி
உறுப்பினர்களிடம் இருந்து வேட்பு மனுக்களைப்
பெறத் தொடங்கியுள்ளது. இப்போது நடைபெற உள்ள தேர்தலுக்காக
கூட்டணியில் இருந்து வெளியேறினாலும் மத்தியில்
பாரதீய ஜனதாக் கூட்டணியில் நீடிப்பதாக
பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் தேவை இல்லை. பாரதீய
ஜனதாக் கட்சியின் தயவு தேவை எனப்தை
சொல்லாமல் சொல்லியுள்ளது
பாட்டாளி மக்கள் கட்சி.
தினகரனின்
தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த விஜயகாந்தின்
கட்சியும் கூட்டணியில்
இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய திகதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டன.
தமிழக
சட்ட மன்றத் தேர்தலில், அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, பாரதீய
ஜனதாக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற
கட்சிகள் உள்ளன. திராவிட
முன்னேற்றக் கழ்கத்தின் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்
கழகம்,கம்யூனிஸ்ட் கட்சி ,மாக்ஸிஸ் கட்சி,
விடுதலைச் சிறுத்தைகள் போன்ற
கட்சிகள் இடம்
பெற்றிருந்தன. தினகரனின் கட்சி, வியஜகாந்தின் கட்சி,
முஸ்லிம் முஸ்லிம் அமைப்புகள் கூட்ட ணி சேர்ந்தன.
எதிர்க்கட்சிகள் கூட்டணி முறிந்த நிலையில்,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி
மட்டும் அப்படியே தொடர்கிறது.
அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு
பாட்டாளி மக்கள் கட்சியின் பங்களிப்பு முக்கையமானது.
அக் கட்சியின் வெளியேற்றம் வெளியேற்றம் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகத்துக்கு மிகப்
பெரிய இழப்பு.
பாட்டாளி
மக்கள் கட்சியும், வியஜகாந்தின்
கட்சியும் தனித்துப் போட்டியிடப்போவதாக அரிவித்து வேட்பு
மனுக்களைப் பெறத்தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வட
மாவட்டங்களில் உள்ள
வன்னியர் சமுதாய வாக்குகள் கணிசமாக
பிரிய வாய்ப்பு உள்ளது. இதனால் எந்த
அணிக்கு சாதகம், பாதகம் என்ற
கேள்வியும் எழுந்துள்ளது.
இந்திய
நாடாளுமன்ற, தமிழக சட்டசபை தேர்தல்களின்
போது அண்ணா திராவிட முன்னேற்றக்
கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு
மேல் சபை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவி வழங்கப்பட்டது. எம்பி பதவி பெற்ற
பின் கூட்டணியில் இருந்து பாட்டாளி மகள்
கட்சி வெளியேறியதால் அண்ணா
திராவிட முன்னேற்றக்
கழகத்தின் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், அதனை வெளிக்காட்டாத அண்ணா
திராவிட முன்னேற்றக்
கழகத் தலைவர்கள் தம் வாய் வீரத்தைக்
காட்டுகிறார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக்
கழக்த்தின் தயவு இல்லாமல் பாட்டாளி
மகள் கட்சியால் வெற்றி பெறுவது இலகுவானதல்ல.
இரண்டு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டால் வெற்றி
வாய்ப்பு அதிகம். இரண்டு
கட்சிகலும் தனித் தனியாகப் போட்டியிட்டால்
வாக்குகள் பிரிந்து விடும் அபாயம் உள்ளது.
கூட்டணியில் இருந்து பாட்டாளி மகள் கட்சி வெளியேறியதால் தமக்கு செல்வாக்கு உள்ள திருப்பூர், தென்காசி மாவட்டங்களில், கூடுதல் இடங்களை கேட்க முடிவு பாட்டாளி மக்கள் கட்சி செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
திராவிட முன்னேற்றக்
கழகத்தில் உள்ள காங்கிரஸ் அணியில், காங்கிரசுக்கு ஓட்டு வங்கி உள்ள திருநெல்வேலி,
தென்காசி ஆகிய மாவட்டங்களில், இடங்களை
எதிர்பார்க்கிறது.
தமிழக
சட்டசபை தேர்தலின் போதும் இந்திய
நாடாளுமன்றத் தேர்தலின் போதும் பாட்டாளி
மக்கள் கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் அதிக முக்கியத்துவம் கொடுத்தது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மகள் கட்சிக்கு ஏழு
தொகுதிக ளையும், பாரதீய
ஜனதாக் கட்சிக்கு ஐந்து இடங்களையும் அண்ணா
திராவிட முன்னேற்றக்
கழகம் கொடுத்தது.
தமிழக
சட்டசபைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகளையும்,
பாரதீய ஜனதாக் கட்சிக்கு 20 தொகுதிகளையும் அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகம் கொடுத்தது. பாட்டாளி
மக்கள் கட்சியுடன் முதலில் பேச்சு வார்த்தை
நடத்தி ஒப்பந்தம்
கையெழுத்தான பின்னர் தான் மற்றைய
கட்சிகளுடன் அண்ணா திராவிட முன்னேற்றக்
கழகம் பேச்சுவார்த்தை நடத்தியது.
பாடாளி
மக்கள் கட்சிக்குக் கொடுத்த முக்கியத்துவம் ஏனைய
கட்சிகளுக்குக் கொடுக்கப்படவில்லை. திராவிட முன்னேற்றக் கழகக்
கூட்டணிக் கட்சிகளுக்கு எதிரான வாக்குகளை பாட்டாளி
மக்கள் கட்சி கைப்பற்றுவதே அதற்கான
முக்கிய காரணம்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
ஆட்சியில் இருந்தபோது நடந்த இடைத் தேர்தல்களில்
பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு
வங்கிதான் ஆட்சியைக் காப்பாற்ற உதவியது.
தமிழக
சட்ட சபைத் தேர்தலின்
பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்பாடு
மாற்றமடைந்துள்ளது. அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம் எதிர்ப்புத் தெரிவிக்கும்
போது அதற்கு
உடன் படவில்லை.
பாட்டாளி மக்கள் கட்சியைத் திருப்திப்படுத்துவதற்காக வன்னிய மக்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காக சொந்தக் கட்சியினரின் விமர்சனங்களையும் எதிர்கொண்டார். தேர்தலின்போது மற்ற சமூகத்தவர்களின் வாக்குகள் இடம் மாறின. வன்னியர்கலுக்கான இட ஒதுக்கீடும் தேர்தல் தோல்விக்குக் காரணம் என விமர்சிக்கப்பட்டது.
வன்னியர்களுக்கான் 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை முன்னைய ஆட்சியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்தது. அது தொடர்பான அரசானையை திராவிட முன்னேற்றக் கழகம் பிறப்பித்தது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வன்னிய மக்கள் அடர்த்தியாக உள்ளனர். அரசாணையின் மூலம் அதற்கான பலன்களை திராவிட முன்னேற்றக் கழகமும், பாட்டாளி மக்கள் கட்சியும் அறுவடை செய்ய நினைக்கிறது.நாடாளுமன்றத்
தேர்தலுக்குப் பிறகு நடந்த உள்ளாட்சித்
தேர்தலில் பல இடங்களில் பாட்டாளி
மக்கள் கட்சிக்கு எதிராக அண்ணா திராவிட
முன்னேற்றக் கழகம் வேட்பாளர்களை நிறுத்தியது. கேட்ட
இடங்களையும் கொடுக்கவில்லை.
பாட்டாளிமக்கள் கட்சியின் வெளியேற்றத்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. வியயகாந்தின் வெளியேற்றம் தினகரனுக்கு எந்தப் பாதிப்பையும் ஏறப்டுத்தாது
No comments:
Post a Comment