Monday, September 6, 2021

இந்தியாவுக்கு எதிரான அரசியல் வலையில் இணையுமா ஆப்கானிஸ்தான்.

 ஆசியாக் கண்டத்தில்  மிக  நீளமான  பதற்றை எல்லையைக்   கொண்டது  இந்தியா. இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா,பாகிஸ்தான் ஆகியவற்றின் எல்லைகள் எப்ப‌வுமே ப‌தற்றமானவையாக உள்ளன. திபெத்தினொரு பகுதிய  சினாவும், காஷ்மீரின்  ஒரு  பகுதியை  பாகிஸ்தானும்  ஆக்கிரமித்ததால் அவையும் பதற்றமான எல்லைகளான உள்ளன.இந்தியாவின் எல்லை  நாடுகளான நேபாளம்,திபெத் ஆகிய நாடுகளிலும் சீனா கால் பதித்துள்ளது. இலங்கைக்கும் சீனாவுக்கும் உள்ள நட்பையும்,இந்திய  இலங்கை அரசியல் உறவையும்  பற்றி  சொல்லித் தெரிய  வேண்டியதில்லை. இந்தக்  கூட்டணியில்   ஆப்கானிஸ்தானும்  இணைந்து விடுமோ என்ற சந்தேகம்  ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள்  ஆட்சி செய்தபோது இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இருந்தது. ஆப்கான்  மீதான‌ அமெரிக்காவின் படையெடுப்பால் தலிபான்கள் வெளியேற்றப்பட்டனர். கடந்த  ஆண்டுகளாக சுமுகமாக இருந்த  ஆப்கான், இந்திய  எல்லையில்  பதற்ற‌ம் ஏற்படும்   சூழ்நிலை  உண்டாகியுள்ளது.  தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் சமீபத்தில் முழுமையாக வெளியேறின. இதையடுத்து தலிபான்களின் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் வந்துள்ளது.

தாலிபான் தலைவர்கலில் ஒருவரான அனஸ் ஹக்கானி,   சி.என்.என் நியூஸ் 18-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில்   "காஷ்மீர் விவகாரத்தில் தலையிடமாட்டோம், இந்தியாவுடன் சுமுகமாக உறவையே வேண்டுகிறோம்" என தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியிருக்கும் தலிபான்கள், உலக நாடுகளுடன் உறவை பேணுவதில் அக்கறை கொண்டிருப்பதாக காட்டிக்கொள்கின்றனர். குறிப்பாக ஆசிய பிராந்தியத்தில், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் தங்களின் நட்பை பலப்படுத்துவதில் அக்கறை கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.  த‌லிபான்கள் வேண்டுகோளை ஏற்று கட்டார் நாட்டின் தலைநகரான டோஹாவில் உள்ள இந்திய தூதரகத்தில் த‌லிபான் பிரதிநிதியை வரவழைத்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது  இந்தியா.

இந்த பேச்சுவார்த்தையின் போது ஆப்கன் மண்ணை தீவிரவாதத்துக்காகவும், இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்காகவும் பயன்படுத்தக் கூடாது என இந்தியா தனது நிலைப்பாட்டை தலிபான்களிடம் எடுத்துரைத்திருக்கிறது.தலிபான்களால் தலையிடி வராது என‌ இந்தியா தன்னை ஆசுவாசப்படுத்துவதற்கிடையில் அல்-  குவைதாவின் அறைகூவல் அச்சுறுத்தலை  ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியவுடன், சர்வதேச பயங்கரவாத அமைப்புப்  பட்டியலில்  உள்ள‌ அல் - குவைதா வெளியிட்ட அறிக்கையில், 'உலகில் அடுத்தவர்கள் ஆதிக்கத்தில் உள்ள இஸ்லாமிய நிலங்களை மீட்க 'ஜிகாத்' எனப்படும் புனிதப் போர் நடத்த வேண்டும்' என கூறியிருந்தது. இஸ்லாமிய நிலங்கள் என அவர்கள் குறிப்பிட்டிருந்த பகுதிகளில் இந்தியாவின் பகுதியான ஜம்மு  - காஷ்மீரும் இடம் பெற்றிருந்தது.

இந்நிலையில், மேற்காசியாவில் கட்டார் நாட்டின் தலைநகர் டோஹாவில் தலிபான் செய்தி தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் பிபிசி உருது‍   தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: "உலக நாடுகளுக்கு நாங்கள் தெரிவிப்பது என்னவென்றால் முஸ்லிம்களை உங்கள் சொந்த மக்களாக கருதுங்கள். உங்கள் சட்டப்படி அனைத்தையும் பெற முஸ்லிம்களுக்கும் உரிமை உள்ளது. நாங்களும் முஸ்லிம் என்பதால் காஷ்மீர் உட்பட உலகளவில் முஸ்லிம்கள் எங்கு வசித்தாலும் அவர்களின் பிரச்னைக்கு ஆதரவாக குரல்கொடுப்போம். அதே சமயம் எந்த நாட்டிற்கு எதிராகவும் ஆயுதம் ஏந்தி போராட மாட்டோம்"  எனத்  தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தனக்கு  மிகவும் நெருக்கமான, நட்புறவு நாடாக இருக்கும்  என்ற  நம்பிக்கையில்  இந்தியா, அங்கு பல அபிவிருத்திகளுக்கு  பணத்தை  அள்ளிக் கொடுத்தது. நவீன  பாராளுமன்றம் அமைத்ததில்  பெரும்  பங்கு  இந்தியாவினுடையது. விமான நிலையங்கள், சாலைகள் என்னவற்றின்  அபிவிருத்தியில் பாகிஸ்தான் உள்ளே நுழைந்து விடக்கூடாது  என்பதே  இந்தியாவின்  இதன் நோக்கம்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் இருந்தபோது பக்ராம் விமானப் படை தளமே முக்கிய தளமாக இருந்தது. தற்போது அந்த விமானப் படை தளத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா நிச்சயம் முயற்சிக்கும்.இந்தப் பகுதி பாகிஸ்தானுக்கு அருகில் உள்ளது. இலங்கையில்  தெற்கேஅம்பாந்தோட்டையில்  இருந்து  வடக்கில்  உள்ள  தீவுகள்  வரை  சீனா  கால் பதித்துள்ளது. இதனால்   சிக்கல்கள்  அதிகரிக்கும் என  இந்தியா நம்புகிறது.

ஆப்கானிஸ்தான் உடனான நட்புறவை மேம்படுத்தப் பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்து வந்தது. ஆனால் கடந்த ஒரு வருடமாக இதன் அளவீட்டைக் குறைத்தது

ஆப்கானிஸ்தான் நாட்டின் முதலீட்டைக் குறைத்த இந்திய அரசு, ஏப்ரல் மாதம் ஹெராட், ஜலாலாபாத் பகுதியில் செயல்பட்டு வந்த இந்திய அரசின் திட்டங்களை மூடிவிட்டு இந்திய அதிகாரிகளைத் திரும்ப அழைத்தது. கடந்த  ஓகஸ்ட் மாதம் கந்தகார், மசார் ஆகிய பகுதியில் இருந்த இந்திய தூதரகத்தை மூடியது. இதனால் காபூல் நகரத்தில் இருக்கும் தூதரகம் மட்டும் இயங்கி வந்தது. இப்போது  அதுவும்  மூடப்பட்டு  விட்டது.

  ஆப்கானிஸ்தானை  த‌லிபான்கள் கைப்பற்றியதால், இந்தியா - ஆப்கானிஸ்தான் மத்தியில் செய்யப்பட்ட வர்த்தக‌ ஒப்பந்தம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் இந்தியாவின் ஏற்றுமதி ,இறக்குமதி  வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா   ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியா செய்த முதலீடுகள் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களைச் சந்தைப்படுத்த புதிய வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் தற்போது ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றியதால் இல்லாமல்  போய்விட்டது.

ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான ஏற்றுமதிகள் விமானம் மூலமாகவே செய்யப்படுக்கிறது. இந்த நிலையை மாற்றவே இந்தியா ஆப்கானிஸ்தானில் சாபஹார் துறைமுகத்தைக் கட்டமைக்க முதலீடு செய்தது. ஏ  ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு உலர்ந்த திராட்சை, வால்நட், பாதாம், அத்தி, பைன் நட், பிஸ்தா, உலர்ந்த ஆப்பிரிகாட் மற்றும் பழங்களான ஆப்பிரிகாட், செர்ரி, தர்பூசணி மற்றும் சில மருத்துவக் குணம் நிறைந்த மூலிகைகள் இறக்குமதி செய்யப்படுகிறது.  இதேபோல் இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு தேயிலை,கோப்பி மிளகு, பருத்தி மற்றும் இதர வர்த்தகப் பொருட்களும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.  இவை  அனைத்தும்  தற்போது   முடக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தன் படைகளை திரும்பப் பெற்றுள்ளது.இது குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் துாதர் நிக்கி ஹாலே கருத்துத்  தெரிவிக்கையில்,



"ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை திரும்பப் பெற்றதன் வாயிலாக பெரும் வரலாற்று தவறை ஜனாதிபதி ஜோ பைடன் செய்துஉள்ளார். படைகளை திரும்பப் பெற்றதால் போர் முடிந்துவிட்டதாக கூறுகிறார். ஆனால் இனிதான் நிலைமை மோசமாகப் போகிறது.இனி இந்த உலகம் மிகப் பெரும் ஆபத்தை சந்திக்க உள்ளது. உலகெங்கும் உள்ள பயங்கரவாதிகள் இனி வலுப் பெறுவர்.படைகளை திரும்பப் பெற்றதன் வாயிலாக அமெரிக்க இராணுவ வீரர்களின் நம்பிக்கையை பைடன் இழந்துள்ளார். வீரர்களின் திறமையை அவர் குறைத்து மதிப்பிட்டு உள்ளார். இதனால் வீரர்களுடன் அவர்களுடைய குடும்பத்தாரும் அதிருப்தியில் உள்ளனர்.சர்வதேச அரங்கில் நம் நாட்டுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளார். இதனால் அமெரிக்க மக்களின் நம்பிக்கையையும் பைடன் இழந்துள்ளார்" எனத்   தெரிவித்துள்ளார்.

  சீனா, பாகிஸ்தான் எல்லைகளின் கேட்கும் குண்டுச் சத்தங்களால்  அப்பகுதி மக்கள் தூக்கத்தையும்,நிம்தியையும் இழந்துள்ளனர். திபெத்தின் ஒரு பகுதியை  சீனாவும்,  காஷ்மீரின் நிலப் பகுதியை  பாகிஸ்தானும்  கைப்பற்றியதால் அந்த  எல்லைகள் கடுமையான  கண்காணிப்பில் உள்ளன.  உலகின் சனத்தொகையைக்  கொண்ட  முதல் இரு  நாடுகளாக சீனாவும், இந்தியாவும்  உள்ளன. ஆசியாவில் பலமான   படைகளைக்  கொண்ட  இரு நாட்டு  எல்லைகளிலும்   முட்டலும் மோதலும் சர்வசாதாரணமாக உள்ளன.ஆப்கான்  இந்திய  எல்லையிலும் இனிமேல்  குண்டுச் சத்தங்கள் கேட்கும்  நிலை  உருவாகப்போகிறது. இதனை இராஜதந்திர ரீதியாகச்  செயற்படுத்த வேண்டிய  நிலையில்  இந்திய  உள்ளது.

No comments: