இரண்டு கைகளாலும் விளையாடுபவர்களைப் பார்த்திருக்கிறோம்.ஒற்றைக் கையுடனும், ஒரு காலுடனும் விளையாடியவர்களைப் பார்த்திருக்கிறோம். இரண்டு கால்கள் இல்லாத போதிலும் விளையாடுபவர்களைப் பார்த்திருக்கிறோம். இரண்டு கைகளும் இல்லாத இப்ராஹிம் கமாடோ அனைவரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார். கால்விரல்களைப் பயன்படுத்தி பந்தை பரிமாறும் வீரர்.
டோக்கியோ 2020 பாராலிம்பிக் போட்டிகளில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கொரியா குடியரசின் பார்க் ஹாங்குயுக்கு எதிரான போட்டியில் (11-6, 11-4, 11-9) நேரான ஆட்டங்களில் தோற்கடிக்கப்பட்டார். இப்ராஹிம் கமாடோ தோல்வியடைந்தாலும், அங்கிருந்தவர்கள் அவரை உற்சாகப்படுத்தினார்கள். அந்தப் போட்டியைப் பதிவு செய்த அனைத்து கமராக்களும் இப்ராஹிம் கமடாவை பிரத்தியேகமாக உலகுக்கு தெரியப்படுத்தின. இதன் காரணமாக அவர் , இணையத்தில் வைரலாகி, ஃபாக்ஸ் நியூஸ், டெய்லி மெயில் மற்றும் பிசினஸ் இன்சைடர் போன்ற பல உலகளாவிய தளங்களில் இடம்பெற்றார்.
பத்து வயதானபோது விபத்தில் தனது இரண்டு கைகளையும் இழந்த ஹமாடோ, ஒரு வருடமாக வீட்டை விட்டு வெளியேறவில்லை.ஊரில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து உதைபந்து விளையாடினார். பின்னர் ரேபிள் டெனிஸ் பக்கம் கவனத்தைத் திருப்பினார்.தனது வாயால் மட்டையை கட்டுப்படுதி பார்வையாளர்களை திகைக்க வைத்தார்.
2014 ஆம் ஆண்டில் சிஎன்என்னிடம் பேசுகையில், விபத்துக்குப் பிறகு விளையாட்டைத் தொடர்ந்து விளையாடுவது எவ்வளவு கடினம் என்பதை ஹமாடோ நினைவு கூர்ந்தார். "நான் தினசரி மூன்று வருடங்கள் தொடர்ந்து கடினமாக பயிற்சி செய்ய வேண்டியிருந்தது. ஆரம்பத்தில், நான் விளையாடுவதைப் பார்த்து மக்கள் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் என்னை மிகவும் ஊக்குவித்தனர் ஆதரித்தனர், மேலும் எனது விருப்பம், விடாமுயற்சி மற்றும் உறுதியால் அவர்கள் மிகவும் பெருமைப்படுகிறார்கள், ”என்று அவர் கூறினார்.
ஹமாடோ வின் பயணம் 2014 இல் தொடங்கியது, அப்போது துபாயில் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் விளையாட்டு கண்டுபிடிப்பு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அந்த ஆண்டின் சிறந்த அரபு விளையாட்டு வீரருக்கான விருது வழங்கப்பட்டது, பின்னர் அவரை 2015 ஆப்பிரிக்க சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வெல்லத் தூண்டியது.
2016
ஆம் ஆண்டு ஆப்பிரிக்க சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது தகுதி பெற்ற பிறகு அவர் தனது முதல்
பாரா ஒலிம்பிக்கில் ரியோவை அடைந்தபோது, இறுதி திருப்புமுனை அவருக்கு வந்தது. அவர் ஒற்றையர் பிரிவில் 11 வது இடத்தையும் அணிகளின்
நிகழ்வில் ஒன்பதாவது இடத்தையும் பெற்றார்.
No comments:
Post a Comment