Thursday, September 23, 2021

ஐபிஎல் இல் களம் இறங்கும் அயல் நாட்டு வீரர்கள்

கிரிக்கெட் வீரர்களின் கனவுகளில் ஐபிஎல் போட்டியும்  ஒன்று. ஐபிஎல் ஏலத்தில் விலை போனால் பணமும் வசதிகளும் கூடுதலாகச் சேரும். ஏலத்துக்கு பெயரைப் பதிந்தும் விலை போகாத  வீரர்களும் உள்ளனர். கொரோனாவால்  ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெறுகிறது. புதிய அயல் நாட்டு வீரர்கள் சிலர் ஐபிஎல் இல் இடம் பிடித்துள்ளனர்.கிரிக்கெட் ரசிகர்களால் அறியப்படாத அயல் நாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் இடம் பிடித்துள்ளனர்.

டிம் டேவிட்

   சிங்கப்பூரைச் சேர்ந்த டிம் டேவிட் என்ற வீரரை ரோயல் சலஞ்ச்  பெங்களூரு அணியில் இணைந்துள்ளார்.  இவர் உலக கிரிக்கெட்டில் பிசியாக இருக்கும் இவர் சகலதுறை வீரர்.  வேறு வேறு நாடுகளில் 8 தொடர்களில் ஆடி அசத்தியுள்ளார். கரீபியன் பிரீமியர் லீகில் வெற்றிகரமாக ஆடியவர், பவர் ஹிட்டர் ஆன இவர் ஆர்சிபி அணியில் இருக்கிறார்.

லியாம் லிவிங்ஸ்டன்

 இங்கிலாந்தின் அதிரடி வீரர் லியாம் லிவிங்ஸ்டன், பிக்பாஷ், பாகிஸ்தான் சூப்பர் லீக் இப்போது ராஜஸ்தான் ரோயல்ஸ் பிக் ஹிட்டர்களில் இவரும் ஒருவர்  காட்டடி வீரர் ஆன வீரர் பந்து வீச்சிலும் சூரர். ஆஃப் ஸ்பின் லெக் ஸ்பின் இரண்டும் கை வந்த கலை. ராஜஸ்தான் ரோயல்ஸ் மேலே எழும்ப இவரது பங்களிப்பை பெரிதும் நம்பியிருக்கிறது.

 நேதன் எல்லிஸ்

அவுஸ்திரேலியாவுக்காக அறிமுகமான முதல் போட்டியிலேயே ஹட்ரிக் சாதனை புரிந்தவர் நேதன் எல்லிஸ். துல்லிய யார்க்கர், ஏமாற்று ஸ்லோ பந்துகளில் வல்லவர்.  பஞ்சாப் இவரை சேர்த்துள்ளது.

வனிந்து ஹசரங்க

 ஹசரங்க லெக் ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர் எனவே  ஆர்சிபியில் செகல் இடத்தை இவர் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லெக்ஸ்பின் ஆல்ரவுண்டரான வனிந்து ஹசரங்க 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால், 2017 -ம் ஆண்டு இலங்கை அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஸிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமான ஹசரங்கா தனது முதல் போட்டியிலேயே ஹட்ரிக் எடுத்து அசத்தியிருந்தார். முதல் போட்டியிலேயே முத்திரை பதித்ததால் தொடர்ந்து இலங்கை அணியில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், தொடக்கத்தில் சர்வதேச வீரர்களுக்கு எதிராக பந்துவீசுவதற்கு ஹசரங்கா கொஞ்சம் தடுமாறவே செய்தார். ஒரு சாதாரண பந்துவீச்சாளராக சராசரியாகவே பந்து வீசிக்கொண்டிருந்தார். மேலும், இலங்கை அணியுமே இவரை ஒரு முழு நேர பந்துவீச்சாளராகக் கருதயிருக்கவில்லை. அதனாலயே சில போட்டிகளில் முழுமையாக அவருக்கான ஓவர்களே கொடுக்கப்படவில்லை. ஒரு கட்டத்திற்கு பிறகு ஹசரங்காவும் தன்னை மெருகேற்றிக் கொண்டு கிடைக்கிற வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தத் தொடங்கினார். 

கிளென் பிலிப்ஸ்

ராஜஸ்தான் ரோயல்ஸ் அனியில் உள்ள  கிளென் பிலிப்ஸ் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் அதிரடி துடுப்பாட்ட வீரர்

 பென் ட்வார்ஷுயிஸ் 

அவுஸ்திரேலிய  வீரரான பென் ட்வார்ஷுயிஸ் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் டெல்லி ப்பிடல்ஸ்  அணியில் விளையாடுகிறார்.

ஜார்ஜ் கார்ட்டன்


  சகலதுறை வீரரான ஜார்ஜ் கார்ட்டன்  ரோயல் சலஞ்ச் பெங்களூருவில் சேர்ந்துள்ளார்.

No comments: