இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., சீசன் கொரோனா பரவல் காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கின்றன. துபாயில் நடந்த லீக் போட்டியில் சென்னை, 'நடப்பு சாம்பியன்' மும்பை அணிகள் மோதின. மும்பை அணியில் ரெகுலர் கப்டன் ரோகித் சர்மா, 'ஆல்-ரவுண்டர்' ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. பொலாட் அணியை வழிநடத்தினார். அன்மோல்பிரீத் சிங் அறிமுக வாய்ப்பு பெற்றார்.
ருதுராஜ் கெய்க்வாட்டின் அற்புதமான துடுப்பாட்டம், ஜடேஜாவின் ஒத்துழைப்பு, பிராவோவின் அதிரடி, சஹர், பிராவோ ஆகியோரின் நெருக்கடி தரும் பந்துவீச்சு ஆகியவற்றால் சென்னை அணி வெற்றி பெற்றது. மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா இருவரும் இல்லாததும் தோல்விக்குக் காரணம்.
மும்பைக்கு எதிரான வெற்றியின் வெற்றி மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. 8 போட்டிகளில் 6 வெற்றி, 2 தோல்விகள் என 12 புள்ளிகளுடன் சென்னை உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இதுபாதுகாப்பானது அல்ல. ராஜஸ்தான் ரோயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் 6 புள்ளிகளுடன் முறையே 5 ஆவது, 6 ஆவது இடங்களில் உள்ளன. இவை இரண்டுஅணிகளும் நாளைய போட்டியில் விளையாடுகின்றன. வெற்றி பெறும் அணி 8 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்துக்கு முன்னேறும். தோல்வியடையும் அணி அதிக ஓட்ட சராசரியைப் பெற்றால் மும்பையைப் பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடத்துக்கு முன்னேறும்.தோல்வியடையும் அணி அதிக ஓட்ட சராசரியைப் பெற்றால் மும்பையைப் பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடத்துக்கு முன்னேறும்.ருதுராஜ் கெய்க்வாட்,டுபிளசி ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் இறங்கினர். டுபிளிசி, மொயீன் அலி ஆகிய இருவரும் ஒட்டம் எடுகாது ஆட்டமிழந்தனர். மில்னே வீசிய பந்து தாக்கியதில் இடது முழங்கையில் காயமடைந்த அம்பதி ராயுடு (0*) 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் வெளியேறினார். 7 ஓட்டங்கள் எடுத்த நிலையில் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது சென்னை. அடுத்து வந்த ரெய்னா (4), கப்டன் தோனி (3) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்துக்குச் சென்றனர்.
ஐந்தாவது ஓவரின் கடைசிப் பந்தில் டோனி ஆட்டமிழந்தார்.
அப்போது சென்னை அணி நான்கு விக்கெறக்லை இழந்து 24 ஓட்டங்கள் எடுத்தபோது ஜடேஜாஉள்ளே புகுந்தார்.ஓவரில் இணைந்த்
ருதுராஜ்,
ரவிந்திர
ஜடேஜா
ஜோடி
விக்கெட்
சரிவிலிருந்து
அணியை
மீட்டது.
பொலாட்டின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய
ருதுராஜ்,
அரைசதம்
கடந்தார்.
26 ஓட்டங்கள்
எடுத்த
ஜடேஜா
பும்ராவின்
பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ருதுராஜ்,
ரவிந்திர
ஜடேஜா
ஜோடி
ஐந்தாவது
விக்கெட்டில்
81 ஓட்டங்கள்
எடுத்தது.
முதல் இரண்டு ஓவர்களில் சென்னை
அணியை
துவம்சம்
செய்த
பவுல்டின்
19 ஆவது ஓவரை ருதுராஜ்ஜும், பிராவோவும் 23 ஓட்டங்கள் எடுத்து
துவம்சம்
செய்தனர்.
பிராவோ
இரன்டு
சிக்ஸர்களைப்
பறக்க
விட்டார்.
8 பந்துகளில்
23 ஓட்டங்கள் எடுத்த
பிராவோ ஆட்டமிழந்தார்.
சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்கள் எடுத்தது. ருதுராஜ் (88 ஓட்டங்கள், 4 சிக்சர், 9 பவுண்டரி), ஷர்துல் தாகூர் (1) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.மும்பை சார்பில் பவுல்ட், மில்னே, பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெற்களை வீழ்த்தினர்.
சென்னை அணியால்
100 ஓட்டங்களை எட்ட
முடியாது
என
அனைவரும்
எதிர்
பார்த்திருந்த
வேளை
156 ஓட்டங்கள்
எடுத்தது.
சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு குயின்டன் டி காக் (17), அன்மோல்பிரீத் சிங் (16) ஆகியோர் சுமாரான துவக்கம் தந்தனர். சூர்யகுமார் யாதவ் (3), இஷான் கிஷான் (11) ,கப்டன் போலார்டு (15), குர்னால் பாண்ட்யா (4) ஆகியோர் ஆட்டமிழந்த போதே தோல்வியும் எழுதப்பட்டு விட்டது. அடுத்து களம் இறங்கியவர்களும் நிலைக்கவில்லை. மில்னே (15), ராகுல் சகார் (0) அடுத்து களம் இறங்கியவர்களும் நிலைக்கவில்லை.
பொறுப்பாக ஆடிய சவுரப் திவாரி அரைசதமடித்தார்.மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 136 ஓட்டங்கள் எடுத்து, 20 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சவுரப் திவாரி (50), பும்ரா (1) ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை சார்பில் பிராவோ 3, தீபக் சகார் 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை ருதுராஜ் வென்றார்
சிஎஸ்கே அணி பேட்டிங் துடுப்பெடுத்தாடும்போது 24 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியதால் நிச்சயம் சென்னை அணியின் நிலைமை அதோகதிதான் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் விதமாக மீண்டும் சிறப்பாக விளையாடி வெற்றி வரை சென்றது ரசிகர்களுக்கு உண்மையில் இரு விருந்தாகவே அமைந்தது எனலாம்.
பும்ரா 100 ஆவது
போட்டியில் விளையாடினார். நூறு ஐபிஎல் போட்டிகளில்
விளையாடிய ஆறாவது வீரராக பும்ரா உள்ளார்.
88 ஓட்டங்கள் அடித்த ருதுராஜ் மும்பைக்கு
எதிராக
அதிக ஓட்டம் எடுத்த சென்னை
வீரராவார்.
முன்னதாக
2013 டில்லியில்
மைக்கல்
ஹஸி அடித்த 86 ஓட்டங்களே
அதிக
பட்சமாக
இருந்தது.
முதல் சுற்றில் இதேபோன்று மும்பை அணி தத்தளித்தபோது பொலார்ட் அற்புதமான இன்னி்ங்ஸை ஆடி 218 ஓட்டங்களை விரட்டி வெற்றி பெற வைத்தார்.
No comments:
Post a Comment