Thursday, September 23, 2021

ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஜோடியின் ஆட்டத்தால் வெற்றி பெற்ற‌ டில்லி


 ஹைதரபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக துபாயில் நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் 8 விக்கெற் வித்தியாசத்தால் வெற்றி பெற்றது.நாணயச்  சுழற்சியில் வெற்றி ஹைதராபாத் அணி கப்டன்  கேன் வில்லியம்சன் துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார்

ஹைதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்களை இழந்து  134 ஓட்டங்கள் எடுத்தது. டில்லி அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 139 எடுத்தது.

  டேவிட் வார்னர், விரிதிமன் சகா ஆகியோர்  ஹைதராபாத் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களம் இறங்கினர். முதலாவது  ஓவரிலேயே நடக்கக் கூடாத எல்லம் நடந்து முடிந்து விட்டது. டேவிட் வானர் ஓட்டம் எடுக்காது  ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய வில்லியம்சன் பவுண்டரி அடித்தார். டெல்லி அணி தனது டி.ஆர்.எஸ்ஸை  இழந்தது.

விரிதிமன் சகா (18), ப்டன் கேன் வில்லியம்சன் (18)  மணிஷ் பாண்டே (17)  கேதர் ஜாதவ் (3), ஜேசன் ஹோல்டர் (10)   அப்துல் சமத் (28), ரஷித் கான் (22) , சந்தீப் சர்மா (0), புவனேஷ்வர் குமார் (5) ஆட்டம் இழக்கவில்லை.   அப்துல் சமது ரஷீட் கான் தவிர  வேறு எந்த ஒரு வீரரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை. 



ஹைதராபாத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்களை இழந்து  134 ஓட்டங்கள் எடுத்தது.  டெல்லி அணி சார்பாக   ரபாடா 3 விக்கெட்டுகளையும், நோர்க்கியா, அக்சர் படேல் ஆகியோர் தலா  2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

135 என்ற எட்டக்கூடிய இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தது.  கலீல் அகமது வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய பிரித்வி (11), அதே ஓவரில் ஆட்டமிழந்தார்.தவானுட ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி  சேர்ந்தாவ் இவர்கள் இருவரும் டில்லியின் வெற்றிக்கான இலக்கை இலகுவாக்கினர். இரண்டாவது விக்கெட்டில் இவர்கள் இருவரும் 52 ஓட்டங்கள் சேர்த்த போது ரஷித் கான் 'சுழலில்' தவான் (42) சிக்கினார்.   

சந்தீப் சர்மா வீசிய 14வது ஓவரில் 2 பவுண்டரி அடித்தார் ஸ்ரேயாஸ். புவனேஷ்வர் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ப்டன் ரிஷாப் பன்ட், கலீல் அகமது வீசிய 17வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். ஹோல்டர் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஸ்ரேயாஸ் வெற்றியை உறுதி செய்தார்.



ரி20 உலகக் கிண்ண தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷிகர் தவானுக்கு   வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோன்று ஷ்ரேயாஸ் ஐயரும் ரிசர்வ் வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளதால் நேரடியாக இந்திய அணியின் வாய்ப்பு இவருக்கும் மறுக்கப்பட்டது.இந்த கோபத்தை அப்படியே வெளிப்படுத்திய இவர்கள் இருவரும் சன்ரைசர்ஸ் அணியை வெளுத்து வாங்கினார்கள் என்றே சொல்லலாம். ஏனெனில் 37 பந்துகளை சந்தித்த தவான் 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 42 ஓட்டங்ள் அடித்து அசத்தினார். அதே போன்று இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷ்ரேயாஸ் ஐயர் 41 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி 2 சிக்சருடன் 47 ஓட்டங்கள் அடித்து அசத்தினார்.

பவர்பிளே முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 32 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. முதல் 10 ஓவர்களில் ஹைதராபாத் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 61 ஓட்டங்கள்  எடுத்தது.

டில்லி அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 139 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் (47), ரிஷாப் பன்ட் (35) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் சார்பில் கலீல் அகமது, ரஷித் கான்  ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி கப்பிடல்ஸ் அணி 7 வெற்றிகள், 2 தோல்வி என 14 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. சன்ரைசர்ஸ் அணி 8 போட்டிகளில் ஒரு வெற்றி, 7 தோல்விகள் என 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது. குறைந்தபட்சம் 6 வெற்றிகளைப் பெற்றால்மட்டுமே சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியும் என்பதால் ஏறக்குறைய போட்டித் தொடரிலிருந்து சன்ரைசர்ஸ் வெளியேறும் நிலைக்கு வந்துவிட்டது.


4 ஓவர்கள் வீசி 12 ஓட்டங்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆன்ரிச் நார்ஜே ஆட்டநாயகன் விருது பெற்றார். நார்ஜே வீசிய ஒரு பந்து மட்டுமே 128 கி.மீவேகத்தில் ஸ்லோ பாலாக களத்தில் விழுந்தது, மற்ற அனைத்துப் பந்துகளுமே சராசரியாக 140 கி.மீ. வேகத்தில் வீசப்பட்டன. அதிகபட்சமாக 150 கி.மீ வேகத்தில் பந்துவீசி சன்ரைசர்ஸ் வீரர்களை நார்ஜே திணறவிட்டார்.நார்ஜேவுக்கு துணையாக காகிசோ ரபாடாவின் பந்துவீச்சும் சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களை வதக்கி எடுத்தது. ரபாடாவின் துல்லியமான லைன் லென்த், பாடிலைன் பந்துவீச்சு, பவுன்ஸர் போன்றவற்றை சமாளிக்க முடியாமல் சன்ரைசர்ஸ் வீரர்கள்  விக்கெட்டுகளை இழந்தனர்.

ரபாடா 4 ஓவர்கள் வீசி 37 ஓட்டங் கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரு தென் ஆப்பிரிக்க வீரர்களும் சேர்ந்து 5 விக்கெட்டுகளை சாய்த்தனர். ரவிச்சந்திர அஸ்வின் 2.5 ஓவர்கள் வீசி 22 ஓட்டங்கள் கொடுத்தார்.

டேவிட் வார்னர்   இந்த தொடரின் ஆரம்பத்தில் சன் ரைசர்ஸ் அணி தொடர்ச்சியாக தோல்வி அடையவே தனது ப்டன் பொறுப்பை விட்டுக் கொடுத்தார். அதுமட்டுமின்றி அணியிலிருந்தும் ஒரு சில போட்டிகள் வெளியில் அமர வைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் துவங்கியுள்ள இந்த இரண்டாவது பாதியில் அவருக்கு கிடைத்த வாய்ப்பை மீண்டும் ஒரு முறை தவற விட்டுள்ளார்.   மூன்று பந்துகளை சந்தித்த வார்னர் முதல் ஓவரிலேயே ஓட்டம்  எதுவும் அடிக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதற்கு முன்னர் 2016ஆம் ஆண்டு வார்னர் டக் அவுட் ஆகியிருந்தார். அதனைத்தொடர்ந்து நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் டக் அவுட்டாகியுள்ளார்.

No comments: