ரோயல் சலஞ்சஸ் பெங்களூரு அணி கடந்த 2011ஆம் ஆண்டிலிருந்து ஐபிஎல் ரி20யின் ஒரு போட்டியில் பசுமைச் சூழலை வலியுறுத்தி பச்சை நிற சீருடையில் களம் இறங்கி விளையாடுவார்கள். பூமியை வெப்பமயமாக்கலில் இருந்து காப்போம், ஆரோக்கியமாக வைத்திருப்போம் என்ற பிரச்சாரத்துக்காக பச்சை நிற சீருடையை அணிவார்கள்.
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடிய போட்டியில் பெங்களூரு அணி நீல நிற சீருடையில் களம் இறங்கியது. கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா பாதிப்புகளுக்கு எதிராக முன்களப்பணியாளர்களின் சேவையை கெளரவிப்பதற்காக நீல நிற சீருடையை அணிந்ததாக பெங்களூரு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பெங்களூரு அணி
டுவிட்டரில், “நாங்கள் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸர்,
பவுண்டரி, வீழ்த்தும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும்
அனுசரணையாளர்கள் நன்கொடை வழங்குவார்கள்.
அந்த நன்கொடைகள் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ” எனத் தெரிவித்துள்ளது.
பெங்களூரு வீரர்களின் நீல நிற சீருடைகள் ஏலம் விடப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகை ஏழைகளுக்கும், விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுக்கும் தடுப்பூசி செலுத்த உதவியாக வழங்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment