சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கப்டன் மகேந்திர
சிங் தோனி ஐபிஎல் வரலாற்றில் தினேஷ் கார்த்திக்கின்
முக்கியமான ஒரு சாதனையை தகர்த்துள்ளார். கொல்கத்தாவுக்கு
எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் அடுத்த
பந்தைப் பிடித்து கச் பிடித்த விக்கெட் கீப்பர்
என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக ஐபிஎல் வரலாற்றில்
விக்கெட் கீப்பராக 115 கச்களுடன் தினேஷ் கார்த்திக் முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில்
விக்கெட் கீப்பராக டோனி தினேஷ் கார்த்திக்கின்
கச்சைப் பிடித்ததன் மூலம் 116 கச்களுடன் அதிக கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற
சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
ஹேசல்வுட் வீசிய பந்தினை அடிக்க முயன்ற தினேஷ் கார்த்திக்
எட்ஜாக அதனை தோனி லாவகமாக பிடித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை ஐபிஎல்
வரலாற்றில் தோனி 116 கச்கள் மற்றும் 39 ஸ்டம்பிங்களுடன் 155 விக்கெட்டுகள் விழுவதற்கு
காரணமாக இருந்துள்ளார்.
அவருக்கு அடுத்து தினேஷ் கார்த்திக்
115கச்கள் மற்றும் 31 ஸ்டம்பிங்களுடன் என 146 விக்கெட்டுகள் விழ காரணமாக இருந்திருக்கிறார்.
இருவருக்கு பின்னர் ராபின் உத்தப்பா, பார்த்திவ் படேல், விருத்திமான் சாஹா ஆகியோர் உள்ளனர்.
No comments:
Post a Comment