Tuesday, September 28, 2021

ஹமில்டனின் 100 ஆவது வெற்றி


 

பர்முலா  -1  கார் பந்தயத்தில் 100 ஆவது வெற்றியப் பெற்று  லூயிஸ் ஹமில்டன் புதிய சாதனையைப் படைத்துள்ளார். மழைக்கு இடையே ரஷ்யாவில் நடந்த பர்முலா-1 கார் பந்தயத்தில் மெர்சிடஸ் அணியின் வீரர் லூயில் ஹமில்டன் தனது 100வது வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தார். மேலும் பார்முலா-1 கார் பந்தயத்தில் நூறு கிராண்ட் பிரிக்ஸ் தொடர்களை வென்ற ஒரே வீரர் என்ற என்ற பெருமையப் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை மேக்ஸ் வெர்ஸ்டாப்பனும், முன்றாவது இடத்தை பெராரி அணியின் வீரர் கார்லோஸ் சயின்சும் தக்க வைத்தனர்.

ஹமில்டன் தனது ஓவர் டேக்கிங் திறன்கள், மூலோபாய சிந்தனை மற்றும் மழையில் ஓட்டுநர் திறன்களை பயன்படுத்தி  போராடி மேக்ஸ் வெர்ஸ்டாப்பனிடம் இருந்து சாம்பியன்ஷிப் முன்னிலை பெற்றார்.

பந்தயத்தில் மழை தாமதமாகத் தொடங்கியபோது ஹமில்டன் முன்னணிக்காக லாண்டோ நோரிஸைத் துரத்திக் கொண்டிருந்தார். ஹமில்டன் இடைநிலை டயர்களை நிறுத்துவதற்கான தனது அணியின் ஆலோசனையை கவனித்தார் . 

"100 அடைய நீண்ட நேரம் எடுத்துள்ளது, சில சமயங்களில், அது வரும் என்று எனக்குத் தெரியவில்லை" என்று ஹமில்டன் கூறினார். இந்த சீசனில் ஹமில்டனின் ஐந்தாவது வெற்றி மற்றும் ஜூலை மாதம் பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸுக்குப் பிறகு அவரது முதல் வெற்றி இதுவாகும்.


No comments: