Saturday, September 4, 2021

பாலியல் புகாரில் சிக்கிய தமிழக பா.ஜ. க தலைவர்கள்

லைமைப்  பதவியின்  போட்டியால் தமிழக பாரதீய  ஜனதாக்  கட்சித்  தலைவர்கள் மீது   பாலியல்  புகார்  தெரிவிக்கப்பட்டுள்ளது.பதவி  ஆசையால் ஒரு தலைவர் மீது  இன்னொரு தலைவர்  பகிரங்கமாகக்  குற்றம் சாட்டுகிறார். இவர்களின் அதிகாரப்  போட்டியால் பகடைக்  காயான சிலர்  கட்சியை  விட்டு  நீக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில்  காலூன்ற  பாரதீய  ஜனதாக் கட்சி செய்த   முயற்சிகள் எவையும்  வெற்றியளிக்கவில்லை. தமிழிசை செளந்தர்ராஜன் தமிழக  பாரதீய  ஜனதாக் கட்சித் தலைவராக இருந்தபோது  தமிழகத்தில்  தாமரை  மலரும் என  சூழுரைத்தார். அவருடைய  தலைமையில் தாமரை  மலரவில்லை. அண்ணா  திராவிட முன்னேற்றக்  கழகத் தலைமையின்  பலபவீனத்தைப்  பயன்படுத்தி கடந்த  சட்டமன்றத் தேர்தலில்  பாரதீய ஜனதாக் கட்சி  உறுப்பினர்கள்  நால்வர்  வெற்றி   பெற்றனர். அந்த   வெற்ரிக்கு  அன்றைய  தமிழக  பாரதீய  ஜனதாக்  கட்சித்  தலைவர்  எல். முருகன் தான் என கருதிய மேலிடம் அவரை  அமைச்சராக்கியது. முருகன்  அமைச்சரானதும்,  தமிழக  பாரதீய  ஜனத்தாத்  தலைவராக  அண்ணாமலை  நியமிக்கப்பட்டார்.

  தமிழக பாஜக தலைவர்கள் மீதான பாலியல் புகார்கள்தான் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை  ஏற்படுத்தியுள்ளன. பாரதீய  அனதாக் கட்சியில்  தமிழக தலைமைப் பீடமான கமலாலயத்தைச் சுற்றி அரசல் புரசலாக இருந்த பாலியல் புகார்கள் தற்போது வீடியோவாகவும் ஆடியோவாகவும் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. தமிழக  பாரதீய  ஜனதாக் கட்சியில்  மாநிலப்  பொதுச்  செயலாளரான கே.டி. ராகவன் பற்றிய  சர்ச்சைக்குரிய  வீடியோ  வெளியானதால் அவர்  னது  பதவியை  இராஜினாமாச் செய்தார். ராகவனை  ஒரங்கட்டுவதற்காக  தமிழக  பாரதீய  ஜனதாக் கட்சித்  தலைவர்  அண்ணாமலையின்  சதி என்ற  செய்தி  வெளியானது.

கே.டி.ராகவன் வீடியோ சர்ச்சை முடிவுக்கு வருவதற்குள், அண்ணாமலை குறித்த ஒலிநாடாக்கள்  வெளியாகி இருப்பது தமிழக பாரதிய ஜனதாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இது அண்ணாமலைக்கு எதிராகப் பின்னப்பட்ட சதி என முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறார்.

 ஹெச்.ராஜா, கே.டிராகவன்  போன்ற  மூத்த  தலைவர்கள்   இருக்கையில் முருகனும், அண்ணாமலையும்  முன்னிறுத்தப்பட்டார்கள். ஊழல்  இல்லாத  ஆட்சி  அமைக்கப்  போகிறோம் என  சத்தியப் பிரமாணம்  செய்த  பாரதீய  ஜனதாக்  கட்சி தமிழகத்தில்  காலூன்றுவதற்காக  அண்ணா  திராவிட   முன்னேற்றக் கழகத்தை கைப்பாவையாக்கியது. அண்ணா திராவிட   முன்னேற்றக்  கழகம் எதிர்  திராவிட  முன்னேற்றக்  கழகம்  என்ற  அரசியல்  இருப்பை  மாற்றி  திராவிட   முன்னேற்றக்  கழகத்துக்கு  போட்டியான  கட்சியாக  பாரதீய  ஜனதாக்  கட்சியை  வளர்ப்பதற்கு  மோடியும்,  அமித்ஷாவும்  முயற்சி   செய்த்கிறார்கள். அவர்கலின்  எதிர்  பார்ப்புக்கு  இடைஞ்சலாக  தமிழக  பாரதீய  ஜனதாக்  கட்சித்  தலைவர்கள் செயற்படுகிறார்கள்.

பெண்கள்  விவகாரத்தில்  பாரதீய ஜனதாக் கட்சி  நிர்வாகிகள் சிக்கிய  விவகாரம்  பற்றிய  புகார்கள்  டெல்லிவரை  சென்றுள்ளன. ஒருவரைப்  பற்றி   நூற்றுக்கும்  அதிகமான  புகார்கள் சென்றுள்ளன. இது  தொடர்பாக  விசாரித்த பாரதீய  ஜனதாக் கட்சி மேலிடப்  பொறுப்பாளர் சி.டி.ரவி எச்சரித்ததாக நாளிதழ்  ஒன்றில்  செய்தி  வெளியானது. தலைவர்கள் யாரும்  நட்சத்திர  ஹோட்டலில் ரூம் எடுத்து  தங்கக் கூடாது. பெண்களை  அழைத்து  கும்மாளம் அடிக்கக்கூடாது.  மீறினால்  கடும்  நடவடிக்கை  எடுக்கப்படும் என ரவி  கடுமை காட்டியதாகவும்  பரபரபான செய்தி வெளியானது. கட்சிக்குள் நடைபெற்ற  இரகசிய  சம்பவங்கள்  பகிரங்கமாக  வெளியானதற்கு  கே.டி.ராகவன் காரணமாக இருக்கலாம் என சந்தேகம்  ஏற்பட்டது.

பாஜகவின் மூத்த தலைவர்களில்நேர்மையானவர்   என  பெயரெடுத்தவர்  வழக்கறிஞரான கேடி ராகவன், இவர் தான் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். , தனியார் செய்தி நிறுவனத்தில் பணியாற்றுபவரும், பாஜக உறுப்பினருமான மதன் ரவிச்சந்திரன் என்பவர்,  தனது யூடியூப்  னலில் கேடி ராகவன் பற்றிய சர்ச்சைக்குரி்ய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், கே.டி ராகவன் பாஜகவின் மகளிர் அணியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் செல்போனில்     பேசுவது போன்ற  வீடீயோகாட்சிகள் இடம் பெற்றுள்ளன.

சட்டையின்றி வீட்டில் கேடி ராகவன் இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் ஆபாசமான செய்கைகளிலும் ஈடுபடுவது போன்ற காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன. வீடியோவை வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலோடு தான்  வெளியிடப்பட்டதாகத்   தெரிவித்தார்.  அண்ணாமலை  அதனை  மறுத்துள்ளார்.   மதன்  கட்சியில்  இருந்து  வெளியேற்றப் பட்டுள்ளார்.

  மதன் இயக்கிய  "மதன் டயறி" எனும்  யூடியூப் தளம் முடக்கப்பட்டுளது. இவை எல்லாவற்றையும்  இவை எல்லாம் தற்செயலான  நிகழ்வுகளாகத் தெரியவில்லை. இவற்றின்  பின்னால் பலமான கைகள் இருகும் என்பதில் சந்தேகமில்லை.  மதன் ரவிச்சந்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார்.   மதன் கூறுகையில், அண்ணாமலையை சந்தித்து, இப்படி ஒரு பாலியல் வீடியோ இருப்பதாகவும், எனவே பாஜக கட்சிக்குள் யாருக்கும் தெரியாமல், அதை விசாரணை நடத்த வேண்டும் என்று தான் வற்புறுத்தியதாகவும், ஆனால், அண்ணாமலைதான், இது நமது கட்சிக்கார பொண்ணு. இந்த பெண்ணுக்கு உடனே நீதி தேவை. எனவே வீடியோவை போட்டு விடுங்கள் என்று கூறினார் என்றும் மதன் குற்றம்சாட்டியுள்ளார்.   அப்படி  ஒரு வீடியோவை மதன்   தன்னிடம்  காட்டவில்லை  என்று அண்ணாமலை கூறியிருந்தார்

  மாவட்ட பாஜக தலைவர் ஒருவர் , மகளிர் அணித் தலைவராக இருந்த ஒரு பெண்ணிடம் 5 லட்சம் ரூபாய் பறி்த்துக் கொண்டு, அவரைப் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக செய்திகள் வெளியாகின.பாதிக்கப்பட்ட பெண்ணே, செய்தியாளர்களை சந்தித்து பேட்டிகளும் அளித்திருந்தார் அப்போது பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த எல். முருகன் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தவில்லை என்றும் கலிவரதனைக் காப்பாற்ற முயல்கிறார் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஊழல்,பாலியல்  துன்புறுத்தல்  என்பன  சில அரசியல்  கட்சிகளுக்குள் நடைபெறுவது   வெளிச்சத்துக்கு  வெளிவரத்  தொடங்கிவிட்டன. இந்த  நிலையில் ராகவனின்  பிரச்சினையை  பாரதீய  ஜனதாக்  கட்சி எப்படி சமாளிக்கப்போகிறது  அரசியல்  களம் எதிர்பார்த்து  காத்துக்கொண்டிருக்கிறது.

No comments: