Thursday, September 30, 2021

டெல்லியை வீழ்த்தியதால் நம்பிக்கையுடன் இருக்கிறது கொல்கட்டா

ஷார்ஜாவில் நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் கொல்ட்டா நைட் ரைடர்ஸ் அபாரமாக ஆடி டெல்லி ப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது, இதன் மூலம் 10 புள்ளிகளுடன் கொல்ட்டாதா அணி 4ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.கொல்ட்டா அணி 5-வது வெற்றியை பெற்றது.

14-வது .பி.எல். கிரிக்கெட் தொடரில்  சார்ஜாவில் நடந்த 41-வது லீக் ஆட்டத்தில்   கொல்ட்டாதா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி ப்பிட்டல்சை எதிர்கொண்டது. டெல்லி அணியில் பிரித்வி ஷா நீக்கப்பட்டு ஸ்டீவன் சுமித் வாய்ப்பு பெற்றார். நாணயச் சுழற்சியில் ஜெயித்த கொல்ட்டாதா ப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி 20 ஓவர் முடிவில்   9 விக்கெட்டுக்கு 127 ஓட்டங்கள் எடுத்தது. கொல்கட்டா அணி 18.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து  130 ஓட்டங்கள் கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

டெல்லி அணியில், ஷிகர் தவானும், ஸ்டீவன் சுமித்தும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.    முதல் விக்கெட்டுக்கு 35 ஓட்டங்கள் எடுத்தனர். தவான் 24 ஓட்டங்கள் எடுத்தபோது பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்ததுடுப்பாட்ட வீரர்கள் வேகம் குறைந்த  மந்தமான  ஆடுகளத்தில் திணறினர். மறுசீரமைப்பு செய்யப்பட்ட இந்த சார்ஜா ஆடுகளத்தில் சுனில் நரினும், வருண் சக்ரவர்த்தியும் தங்களது சுழல் ஜாலத்தால் டெல்லியின் ஓட்ட வேகத்துக்கு முட்டுக்கட்டை போட்டனர். நரினின் சுழலை கணிக்க முடியாமல் ஸ்ரேயாஸ் அய்யர் (1  ) விக்கெற்றைப் பறிகொடுத்தார். ஸ்டீவன் ஸ்மித்  39 ஓட்டங்கள் (34 பந்து, 4 பவுண்டரி) எடுத்த நிலையில் வெளியேறினார். மத்திய வரிசையில் ப்டன் ரிஷாப் பண்டை தவிர்த்து வேறு யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்களை இழந்து 127 ஓட்டங்கள் அடித்தது. 39 ஓட்டங்கள் எடுத்த  ரிஷாப் பண்ட்      கடைசி ஓவரில் ரன்-அவுட் ஆனார். கொல்கத்தா தரப்பில் சுனில் நரின், வெங்கடேஷ் அய்யர், லோக்கி பெர்குசன்  ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

127 என்ற இலகுவான வெற்றி இலக்குடன் களம் இறங்கிய கொல்கட்டா சுலபமாக வெற்றி பெறவில்லை. கொல்ட்டாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் வெங்கடேஷ் அய்யர் (14 ), சுப்மான் கில் (30 ) ஓரளவு நன்றாக ஆடினர். அதன் பிறகு திரிபாதி (9  ), ப்டன் மோர்கன் (0), தினேஷ் கார்த்திக் (12  ) ஆகியோரேமாற்றினார்கள்.  5 விக்கெற்களை இழந்து 96 ஓட்டங்களை இழந்து தவித்த நிலையில், நிதிஷ் ராணாவுடன், சுனில் நரின் இணைந்தார். 16-வது ஓவரில் ரபடாவின் பந்துவீச்சில் நரின் 2 சிக்சரும், ஒரு பவுண்டரியும் ஓடவிட்டு நெருக்கடியை தணித்தார். நரின் 21 ஓட்டங்களில் (10 பந்து) ஆட்டமிழந்தார். இறுதியில் ராணா பந்தை பவுண்டரிக்கு விரட்டியடித்து வெற்றிக்கனியை பறித்தார்.

கொல்ட்டாதா அணி 18.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 130 ஓட்டங்கள் சேர்த்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிதிஷ் ராணா 36 ஓட்டங்களுடன் (27 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். டெல்லி தரப்பில் அவேஷ்கான் 3 விக்கெட்டும், அஸ்வின், ரபடா, நோர்டியா, லலித் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆல்-ரவுண்டராக அசத்திய சுனில் நரின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

11-வது ஆட்டத்தில் ஆடி 5-வது வெற்றியை ருசித்த கொல்கத்தா அணி அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. டெல்லி அணிக்கு இது 3-வது தோல்வியாகும். சென்னையுடன் முதலிடத்துக்கு போட்டியிட்ட டெல்லி பின் தங்கி விட்டது.


 

 

 

 

No comments: