Wednesday, September 29, 2021

பஞ்சாப்பை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறியது மும்பை

.பி.எல் தொடரின் 42-வது போட்டியில் மும்பை இஎதியன்ஸும்,பஞ்சாப் கிங்ஸும்  நாணயச் சுழற்சியில் வென்ற  மும்பை அணி கப்டன் பபந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் 20 ஓவர்கள் முடிவில்   6 விக்கெட்டுகளை இழந்துகு 135 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 136 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய    மும்பை இண்டியன்ஸ்  19 ஆவது  ஓவரில் 4 விக்கெற்களை இழந்து 137 ஓட்டங்கள் எடுத்து வெற்ரி பெற்றது.

  பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுலும் மந்தீப்பும் களமிறங்கினர். மந்தீப் 15 ஓட்டங்களிலும், அடுத்து களமிறங்கிய கெய்ல் ஒரு ஓட்டத்துடனும் வெலியேறினார். 21 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் கே.எல்.ராகுலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். மார்க்ரம் மட்டும் நிதானமாக ஆடி 42 ஓட்டங்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ஓட்டங்கள்   எடுத்தது. 136 என்ற எளிய இலக்குடன்  மும்பை அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் குயின்டன் டிகாக்கும் களமிறங்கினர்.

ரோஹித் சர்மா 8 ஓட்டங்ளில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். டிகாக்கும் 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் திவாரி நிதானமாக ஆடி ஓட்டங்களைக் குவித்தார். அவரும் 45 ஓட்டங்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, ஹர்திக் பாண்டியா, கைரன் பொல்லார்ட் இணை ஜோடி சேர்ந்தது.

 ஹர்திக் இந்தப் போட்டியில் அவரது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.30 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸ்ர்களுடன் 40 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். மறுபுறம் பொல்லார்ட் 15 ஓட்டங்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியது.

20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. 136 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப்  மும்பை இண்டியன்ஸ் 137/4 என்று 19வது

No comments: