Friday, September 17, 2021

ஒலிம்பிக் போட்டியை நடத்த உக்ரேன் ஆர்வம்

 ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான‌ முறையான பேச்சுவார்த்தையில் நுழைய  உக்ரேன் விரும்புகிறது என்று ஐஓசி திங்களன்று கூறியது.

சுவிட்ஸ‌ர்லாந்தில் உள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைமையகத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு அதிகாரிகளை விரைவில் அனுப்புவதாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.

  ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாட்டைத் தேர்வு செய்வதற்கான வதற்கான  வாக்கெடுப்பு  2030 ஆம் ஆண்டு  நடைபெற உள்ளது. அப்போது உக்ரேன் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2022 ஆம் ஆன்டு ஒலிப்மிக் போட்டியை நடத்துவதற்காக போட்டியில் கலந்துகொள்ள உக்ரேன் முயற்சி செய்தது.  அண்டை நாடான ரஷ்யாவுடனான மோதல்களுக்கு மத்தியில் அரசியல் மற்றும் பாதுகாப்பு குழப்பத்தை காரணம் காட்டி 2014 இல் கியேவ் விலகினார்

No comments: