சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் நட்சத்திர உதைபந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம் பிடித்தார்.
அயர்லாந்துக்கு எதிரான உலகக்கிண்ண உதைபந்தாட்ட
தகுதிகாண் போட்டியில் இரன்டு கோல்கள் அடித்ததன் மூலம் 111
கோல்கள் அடித்து புதிய சாதனையை
எற்படுத்துயுள்ளார் ரொனால்டோ. அவர் அவர் 89 மற்றும் 96-வது நிமிடத்தில் கோல்
அடித்தார். இந்த இரன்டு கோல்கள் மூலம் ரொனால்டோ சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்தவர்
என்ற சாதனையை படைத்தார். 36 வயதான அவர் 180 ஆட்டங்களில் விளையாடி 111 கோல்கள் அடித்துள்ளார்.
ஈரானை சேர்ந்த அலிடாய் 149 போட்டிகளில் விளையாடி 109 கோல்கள் அடித்து முதல் இடத்தில் இருந்தார். இந்தப் போட்டியில் ஒரு கோல் அடித்தால் புதிய சாதனையை படைப்பார் என்ற எதிர் பார்ப்பு இருந்தது. ஆனால், ரொனால்டி இரன்டு கோல்கள் அடித்த் அசத்தியுள்ளார். ரொனால்டோ சமீபத்தில்தான் யுவென்டஸ் கிளப்பிலிருந்து மான்செஸ்டர் யுனைடெட்டுக்கு மீண்டும் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
1993 ஆம் ஆண்டுக்கும் 2006 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஈரானுக்காக விளையாடிய அலி டேய் 149 போட்டிகளில் 109 கோல்கள் அடித்தார். உலகம் போற்றும் வீரரான
பீலே 77 கோல்கள் அடித்துள்ளார்.
1.
கிறிஸ்டியானோ ரொனால்டோ (போத்துகல்): 111 கோல்கள்
2.
அலி டேய் (ஈரான்): 109 கோல்கள்
3.
மொக்தார் தஹாரி (மலேசியா): 86 கோல்கள்
4.
ஃபெரென்க் புஸ்கஸ் (ஹங்கேரி): 84 கோல்கள்
5.
குனிஷிகே காமமோடோ (ஜப்பான்): 80 கோல்கள்
6.
காட்ஃப்ரே சித்தலு (ஸாம்பியா): 79 கோல்கள்
7.
உசேன் சயீத் (ஈராக்): 78 கோல்கள்
8.
பேலே (பிறேஸில்): 77 கோல்கள்
9.
சாண்டர் கோசிஸ் (ஹங்கேரி): 75 கோல்கள்
10.
பஷார் அப்துல்லா (குவைத்): 75 கோல்கள்
இந்தப் பட்டியலில் போத்துகலையும், பிறேஸிலையும் தவிர ஏனைய வீரர்கள் இன்றைய ரசிகர்களுக்குப் புதியவர்கள்
போத்துகலில் நடக்கும் போட்டியில் ரொனால்டோ புதிய சாதனை படைப்பார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ரசிகர்கள் எதிர் பார்த்த சந்தர்ப்பம் பெனல்ரி வாய்பு மூலம் வந்தது. ரொனால்டோவின் சாதனையை கொண்டாட ரசிகர்கள் ஆவலாக இருந்த போது அயர்லாந்து கோல் கீப்பர் ரொனால்டோ அடித்த பந்தைத் தடுத்தார். போலந்து ரசிகர்கள் தைர்ச்சியில் உரைந்து அமைதியானார்கள். அந்த அமைதியை அயர்லாந்து வீரர்களும் ரசிகர்களும் உடைத்தனர்.அயர்லாந்து வீரர்கள் கோல்கீப்பரை தூக்கிக் கொண்டாடினர்.
அலி டேய் ஈரானுக்காக 111 கோல்கள் அடித்தது சாதனையாக உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் வட. கொரியாவுக்கு எதிராக ஈரான் விளையாடிய போது அலி டேய் இரண்டு கோல்கள் அடித்தார். வட.கொரிய வீரர் நடுவரைத் தாக்கியதால் போட்டி கைவிடப்பட்டு 3 0 கோல் கணக்கில் ஈரான் வென்றதாக அறிவிக்கப்பட்டது. வட.கொரியாவுக்கு ஒரு வருட தடை விதிக்கப்பட்டது. அந்தப் போட்டியில் அடிக்கப்பட்ட கோல்கள் கணக்கில் எடுக்கப்படவில்லை. அந்தப் போட்டியில் அலி டேய் அடித்த இரண்டு கோல்கள் கணக்கில் சேர்க்கப்படவில்லை அவறரையும் சேர்த்தால் அலி டேய் அடித்த கோல்களின் கணக்கு 111 ஆக உயர்ந்திருக்கும்.
2004 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் திகதி கிறீஸுக்கு எதிராக போத்துகல் அணியில் அறிமுகமான ரொனால்டோ 90+3 ஆவது நிமிடத்தில் முதலாவது கோலை அடித்தார்.2021 ஆம் ஆண்டு செப்ரெம்பர் முதலாம் திகதி 90+3 நிமிடத்தில் 110 ஆவது கோலை அடித்து சாதனை படைத்தார். 90+6 ஆவது நிமிடத்தில் 111 ஆவது கோல் அடித்தார்.
ரொனால்டோ அடித்த
கோல்களின் விபரம்
1–10 நிமிடங்களில் : 10 கோல்கள் (3 பெனால்ரி)
11–20
நிமிடங்களில் : 3கோல்கள்
21–30 நிமிடங்களில் : 14 கோல்கள் (3 நிமிடங்களில்)
31–40 நிமிடங்களில் : 10 கோல்கள் (3 நிமிடங்களில்)
46–55 நிமிடங்களில் : 9 கோல்கள்
56–65
நிமிடங்களில் : 15 கோல்கள் (1 நிமிடங்களில்)
66–75
நிமிடங்களில் : 8 கோல்கள் (1 நிமிடங்களில்)
76–85நிமிடங்களில்
: 19 கோல்கள் (2 நிமிடங்களில்)
இடது காலால் : 25 கோல்கள்
வலதுகாலால்
: 59 கோல்கள்
தலையால்
: 27 கோல்கள்
நேரடி கிக் மூலம் : 10 கோல்கள்
பெனால்ரி:
14 கோல்கள்
கோணர்கிக்
உட்பட ஏனைய மூலம் : 87 கோல்கள்
45 நாடுகளுக்கு எதிராக ரொனால்டோ கோல்கள் அடித்துள்ளார். தகுதிகாண் போட்டிகளில் 64 கோல்கள்,நட்புறவுப் போட்டிகளில் 19, ஐரோப்பிய சம்பியன்ஷிப் போட்டிகளில் 14, உலகக்கிண்ண போட்டிகளில் 7 நஷனல் லீக் 5 ,கொன்பிறடேசன் கப் 2 கோல்கள் அடித்துள்ளார்.
ரொனால்டோவின் சாதனையை இன்னும் அதிகமாக வாய்ப்பு உள்ளது.கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சர்வதேச சாதனையை முறியடிக்கும் சாதனையைக் கொண்டாடும் சிறப்பு பதிப்பான மெர்குரியல் சூப்பர்ஃபிளைகை நைக் வெளியிடுகிறது.
ரொனால்டோ விளையாடிய முதன்மை நாடுகளில் 110 வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கு சிஆர் 110 உதைபந்தாட்ட காலணி வழங்கப்படுமென அறிவித்துள்ளது
No comments:
Post a Comment