Tuesday, September 28, 2021

நான்கு பந்துகளில் விளையாட்டை மாற்றிய ஜ‌டேஜா

அபுதாபியில் நடைபெற்ற .பி.எல் தொடரின் 38-வது போட்டியில் கொல்கட்டாவுக்கு எதிராக  விளையாடிய  சென்னை வீரர் ஜடேஜா 19 ஆவது ஓவரில் இரண்டு சிக்ஸர், இரண்டு பவுண்டரிகள் அடித்து வெற்றிக்கு அடித்தளமிட்டார். கடைசி ஓவரில் நான்கு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சென்னை விளையாடிய போது சுனில் நரேனின் பந்டு வீச்சில் இரண்டு விக்கெற்கள் விழுந்தன. ஒரு பந்தில் ஒரு ஓட்டம் எடுத்தால் வெற்றி. இல்லையேல் சூப்பர் ஓவர் என்ற நிலையில் தீபக் சாஹர் ஒரு ஓட்டம் எடுத்து சென்னையின் வெற்றியை  உறுதிப்படுத்தினார்.

டோனி ஆட்டம் இழந்த பினர், கொல்கட்டாவின் ஆதிக்கம் அதிகரித்தது.   அப்போது   ஜடேஜாவும், ஷர்துல் தாகூரும் களத்தில் இருந்தனர். 19வது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். அப்போது   12 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்தால் சென்னை  வெற்றி  பெறும் நிலை இருந்தது. பிரசித் வீசிய முதல் இரு பந்துகளில் தலா 2  ஓட்டங்கள் எடுக்கப்பட ரசிகர்கள் பதற்றப்பட்டார்கள்., மூன்றாவது பந்தில்  பட்டாசு போல ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் ஜடேஜா. அதற்கு அடுத்த பந்தில்,   ஒரு மெகா சிக்ஸரை பறக்கவிட்டார். கடைசி இரண்டு பந்துகளையும்  பவுண்டரிக்கு தெறிக்கவிட அந்த ஓவரில் மட்டும் 22 ஓட்டங்கள் விளாசப்பட்டது. 1,1,6,6,4,4.  கேம் சேஞ்சர் என்பதை  ஜடேஜா  மீண்டும் ஒரு முறை நிரூபித்தார்.கடைசி ஓவரில் வெற்றிக்கு 4 ஓட்டங்கள் மட்டும் தேவைப்பட்ட நிலையில், சுனில் நரைன் ஓவரில் 2 விக்கெட்டுகள் விழுந்ரதன. கடைசி பந்தில் தீபக் சாஹர்  ஒரு ஓட்டம் அடித்து அணியை வெற்றிப் பெற வைத்தார்.

நாணயச் சுழற்சியில் வென்ற கொல்கட்டா அணி முதலில் துடுப்படுத்தாடி , 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் எடுத்தது.

  கொல்கட்டா அணியின்   தொடக்க வீரர்களாக சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர்  ஆகியோர் களமிறங்கினர். கில் 9 ஓட்டங்களிலும், வெங்கடேஷ் ஐயர் 18 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ப்டன் இயான் மோர்கனும் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்

அதிகபட்சமாக திரிபாதி 45 ஓட்டங்களும், நிதிஷ் ராணா 37 ஓட்டங்களும் எடுத்தனர். இறுதிக் கட்டத்தில் ரஸல் 20 ஓட்டங்ளும், தினேஷ் கார்த்திக் 26   ஓட்டங்களும் எடுக்க கொல்கட்டாஅணி 20 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ஓட்டங்களைக் குவித்தது.

172 ஓட்டங்கள் என்ற வெற்றி  இலக்குடன் சென்னை களம் இறங்கியது.வழக்கம் போல் ருதுராஜ் கெய்க்வாட், டு பிளசிஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

வழக்கம் போல் எதிரணியின் பந்துகளை   அடித்து விளாசத் தொடங்கினர்.  குறிப்பாக, கொல்கத்தா அணியின் பலமான மிஸ்ட்ரி ஸ்பின்னர்களான சுனில் நரேன் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஓவர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டார்கள். அதிலும், 2 ஓவர்கள் வீசிய சுனில் நரைன் ஓவரில் 25 ஓட்டங்கள் விளாசப்பட்டது. எகானமி 12.50. எனினும், ரஸல் ஓவரில் எட்ஜ் ஆன ருதுராஜ் 28 பந்துகளில் 40 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில், 2 பவுண்டரிகளும் 3 சிக்ஸர்களும் அடங்கும்.  , டு பிளசிஸ் 30 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்திருந்த போது பிரசித் ஓவரில் ஆட்டமிழந்தார்.. டு பிளசிஸ் சிக்ஸர்கள் அடிக்கவில்லை என்றாலும் 7 பவுண்டரிகளை விளாசியிருந்தார்


இருவரும்  முதல் விக்கெட்டுக்கு 74 ஓட்டங்கள் சேர்த்தனர். சென்னை அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரியத் தொடங்கியது. மொயீன் அலி 32 ஓட்டங்களிலும், அம்பதி ராயுடு 10 ஓட்டங்களிலும், சுரேஷ் ரெய்னா 10 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க‌, போட்டி மெல்ல மெல்ல கொல்கட்டா வசம் சென்றது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டோனி, வருண் சக்கரவர்த்தி ஓவரில் ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார். ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில், 3ல் வருண் சக்கரவர்த்தி ஓவரில் டோனி ஆட்டமிழந்தார்.

கொல்கட்டா க்கம் சென்ற வெற்றியை, மீண்டும் ஒருமுறை கேம் சேஞ்சராக விளையாடி அணியை வெற்றி பெற வைத்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. இதே 2021 சீசனில், இந்தியாவில் நடந்த முதல் போட்டியில், பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நேரத்தில், இந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்த "Purple Cஅப்" வீரரான ஹர்ஷல் படேல் வீசிய ஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் விளாசி சென்னை அணியின் வெற்றிக்கு "Game Changer"-ஆக திகழ்ந்தார். இப்போது மீண்டும், தோற்க வேண்டிய ஒரு ஆட்டத்தில் இருந்து சென்னை அணியை காப்பாற்றி மீண்டும் தான் ஒரு மேட்ச் வின்னர் என்பதை நிரூபித்துள்ளார் "சர் ரவீந்திர ஜடேஜா

No comments: