பஞ்சாப்புக்கு எதிரான
போட்டியில்
கடைசி
ஓவரில்
ராஜஸ்தானின்
கார்த்திக்
தியாகி
ஹீரோவானார்.
கடைசி
ஓவரில் வெற்றிக்கு நான்கு
ஓட்டங்கள்
மட்டும்
தேவை.
20வது ஓவரை
தியாகி
வீச
வந்தபோது
கையில் 8விக்கெட்கள். ஏதன்
மர்க்ரம்
25 ஓட்டங்களுடனும்
, நிகோலஸ்
பூரன்
32 ஓட்டங்களுடனும்
களத்தில்
இருந்தனர்.
அப்படியும்,
கார்த்திக்
தியாகியின்
பந்தை வீச்சை அவர்களால் கணிக்கமுடியவில்லை.
20 ஆவது ஓவரை வீச கார்த்திக் தியாகி
தயாரானார். அவர் அச்சுறுத்தும் அதிவேகப்
பந்து
வீச்சாளர்
அல்ல.
முதல்
பந்தில்
வெற்ரியா
இரண்டாவது
பந்தில்
வெற்றியா
என
ரசிகர்கள்
பந்தயம்
கட்டினார்கள்>
முதல் பந்தைச் சந்தித்த மர்கம் ஓட்டம் எடுக்கவில்லை. அடுத்த பந்தில் மர்க்ரம் ஒரு ஓட்டம் எடுத்தார். 3-வது பந்துக்கு முகம் கொடுத்த பூரன், சஞ்சு சாம்சனிடம் பிடிகொடுத்து வெளிறேினார். இதனால் 3 பந்துகளில் 3 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. 4-வது பந்தை எதிர்கொண்ட ஹோடாவால் ஓட்டம் எடுக்க முடியவில்லை. 5-வது பந்தில் ஹோடாவும் சஞ்சு சாம்சனிடம்பிடி கொடுத்து வெளியேறினார். இதனால் கடைசி பந்தில் 3 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நெருக்கடி உருவானது. கடைசி பந்தை ஃபேபியன் ஆலன் எதிர்கொண்டார். ஆனால் கடைசி பந்தையும் சிறப்பாக வீசிய கார்த்திக் தியாகி ஓட்டம் கொடுக்காமல் கட்டுப்படுத்தினார். கடைசி ஓவரில் ஒரே ஒரு ஓட்டம் மட்டும் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார் கார்த்திக் தியாகி. இதனால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இரண்டு ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2021 தொடரின்
32-வது
லீக்
போட்டியில்
புள்ளிப்பட்டியலில்
7-வது
இடத்தில்
இருக்கும்
பஞ்சாப்
அணியும்
6-வது
இடத்தில்
இருக்கும்
ராஜஸ்தான்
அணியும்
மோதின.
நாணயச்
சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின்
கப்டன்
கே.எல்.ராகுல்
முதலில்
பந்துவீச்சை
தேர்வு
செய்தார்.
பஞ்சாப்
அணியில்
அதிரடி
ஆட்டக்காரர்
கிறிஸ்
கெய்ல்
இடம்பெறவில்லை.
ராஜஸ்தான் அணி துவக்கம் முதலே அதிரடி காட்டியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால், லீவிஸ் ஆகிய இருவரும் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்தனர். இதனால், பவர்பிளே முடிவில் அந்த அணி ஒரு விக்கெட்டை இழந்து 57 ஓட்டங்கள் எடுத்திருந்தது. முதல் 10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்களை இழந்து 94 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
சிறப்பான ஆட்டத்தை
வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 36 பந்துகளில்
49 ஓட்டங்கள்
எடுத்து
ஆட்டமிழந்தார்.
மஹிபால்
லோம்ரோர்
அதிரடியாக
ஆடி
17 பந்துகளில்
43 ஓட்டங்கள்
குவித்தார்.
பஞ்சாப்
200 ஓட்டங்களை
எட்டும்
என
எதிர்
பார்த்த
நிலையில்
ராஜஸ்தான்
வீரர்கலின்
சிரப்பான
பந்து
வீச்சால்
அனைத்து
விக்கெட்களையும்
இழந்து
185 ஓட்டங்கள்
எடுத்தது.
பஞ்சாப் அணி தரப்பில் சிறப்பாக
பந்து
வீசிய அர்ஷ்தீப் சிங்
5 விக்கெட்களையும்
, முகமது ஷமி
3 விக்கெட்களையும்
வீழ்த்தினர்
186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் கப்டன் கே.எல்.ராகுல் ,மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி தங்களது சிறப்பான ஆட்டத்தால் அணியின் ஓட்ட விகிதம் உயர்ந்தது. அதிரடி காட்டிய மயங்க் அகர்வால் 34 பந்துகளில் 50 ஓட்டங்களை அடித்தார். மற்றொரு முனையில் சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் 33 பந்துகளில் 49 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து மயங்க் அகர்வாலும் 67 (43) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக அய்டன் மார்கிராம், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியின் அதிரடி காரணமாக அணியின் வெற்றியை நோக்கி சென்றது பஞ்சாப். இந்த சீசனில் ஒரே ஒரு வெற்றியைப் பெற்ற பஞ்சாப் இரண்டாவது வெற்றியைப் பெறும் நிலை ஏற்பட்டது.
கடைசி ஓவரை வீசிய கார்த்திக்
தியாகி
பஞ்சாப்பின் வெற்றியைப் பறித்துவிட்டார்.
ஆட்டநாயகன்
விருது
கார்த்திக்
தியாகிக்கு
வழங்கப்பட்டது.
கடைசி
ஓவரை ஐபிஎல் ரசிகர்கள் மறக்கமாட்டார்கள்.
No comments:
Post a Comment