Saturday, September 25, 2021

முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக களம் இறக்கப்பட்ட ஆளுநர் ரவி


 மோடியின் மாயாயால மந்திரங்கள் அனைத்தையும் புறம் தள்ளி மக்கள் சேவையை முன்னிறுத்தி தமிழகத்தை ஆட்சி செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.ஸ்டாலின் ஆட்சிபீடம் ஏறியதும், மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்தார். ஒன்றிய அரசு எனும் வார்த்தைப் பிரயோகத்தை  டில்லி அரசால் ஜீரணிக்க  முடியவில்லை. மாநில அரசுகளுக்கு கொடுக்க வேண்டிய உரிமைகளையும், சலுகைகளையும் மத்திய அரசு முடக்கியுள்ளது எனும் பிரசாரம் மக்கள் மத்தியில் வலுவாகப் பதிந்துள்ளது.

மோடி அரசின் கொள்கைகள், மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்கள் அனைத்தையும் ஸ்டாலின் கடுமையாக எதிர்க்கிறார். அண்ணா திராவிட   முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் மோடி நினைத்த அனைத்தும் தமிழகத்தில் நடந்தன. அரசியல் ரீதியாக  மோடிக்கு எதிராக  ஸ்டாலின் செயற்படுகிறார். இந்நிலையில், அவர் தமிழக கவர்னர் பதவியில் இருந்த பன்வரிலால் விடுவிக்கப்பட்டு, பஞ்சாப் மாநில கவர்னராக   நியமிக்கப்பட்டார். நாகாலாந்து மாநில கவர்னராக உள்ள ஆர்.என்.ரவி, [69] தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பன்வாரிலால் புரோஹித்,    2017 ஒக்டோபரில் தமிழக கவர்னராக  பதவியேற்றார். நான்கு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அவர் மாற்றப்படுவார் என தகவல் பரவியது. கடந்த மாதம் 31 ஆம் திகதி, பஞ்சாப் மாநில கவர்னர் பதவியும், சண்டிகர் யூனியன் பிரதேச துணை நிலை கவர்னர் பொறுப்பும், அவருக்கு கூடுதலாக வழங்கப்பட்டது.

என்.ஆர்.ரவி, பீஹார் மாநில தலைநகர் பாட்னாவில், 1952 ஏப்., 3 ஆம் திகதி பிறந்தவர். இவரது முழுப் பெயர் ரவீந்திர நாராயண ரவி. இயற்பியலில் முதுகலை பட்டம் பெற்றவர். சில காலம் பத்திரிகை துறையில் பணியாற்றினார்.   1976ல் .பி.எஸ்., தேர்ச்சி பெற்றார்; கேரள மாநிலத்தில் பணி ஒதுக்கப்பட்டது. அங்கு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, எஸ்.பி., உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றினார். அதன்பின், மத்திய பணிக்கு மாற்றலாகி சென்றார்

  மத்திய புலனாய்வுத் துறை பணியில், ஊழல் மாபியாக்களுக்கு எதிராக சிறப்பாக பணியாற்றினார். மத்திய உளவுத்துறை பிரிவிலும் சிறப்பாக பணியாற்றினார். கடந்த 2014 முதல் கூட்டு புலனாய்வுக் குழு தலைவராக இருந்தார். நாகாலாந்தில் உள்ள ஆயுத குழுக்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே, 2015ல் ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணமாகஇருந்தார். பயங்கரவாத ஒழிப்பு மற்றும் அது தொடர்பான உளவுத் தகவல்களை சேகரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.கடந்த 2019 ஜூலை 20ல், நாகாலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டார். தற்போது, தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டுஉள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த இந்திய குடியுரிமை திருத்த சட்டம், வேளாண் சட்டங்கள் ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.  நீட் தேர்வு பற்றிய தமிழக அரசின் ஆய்வு மத்திய அரசை அசைத்துள்ளது. நீட் தேர்வு தேவை இல்லை. அதனை  எதிர்நோக்கும் மாணவர்கள் அடையும்துயரங்கள் பற் றிய விரிவான அறிக்கை பாமரர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏறப்டுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், பாதுகாப்புத் துறையில் இருந்து ஒருவர் கவர்னராக வருவது, பல தரப்பினரிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி வெளிப்படையாக தன் அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளார்.


 என்.ஆர்.ரவி ,.கிரண்பேடி போல் செயல்படுவாரோ என அச்சம் அடைந்துள்ளனர். கண்டிப்பான  பொலிஸ் அதிகாரியான கிரண் பேடி புதுச்சேரி மாநில் ஆளுநராகக் கடமையாற்றிய போது  அங்கு நடைபெற்ற களேபரங்கள் நாடறிந்ததே. தமிழக ஆளுநராக பன்வரிலால் இருந்தபோது ஆய்வு செய்கிறேன் எனப் புறப்பட்டார். அன்றைய ஆட்சிபீடத்தில் இருந்த அண்ணா திராவிட  முன்னேற்றக் கழ்கத்தைத் தவிர அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும் கூட்டாக எதிர்ப்புத் தெரிவித்தன.

 தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி வெளிப்படையாக தன் அச்சத்தை வெளிப்படுத்தி உள்ளார். முன்னாள் போலீஸ் துறை அதிகாரியான கிரண்பேடியை புதுச்சேரி கவர்னராக நியமித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக நடத்திய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை, நாடே பார்த்து நகைத்தது.விளம்பரமே கூடாது என்று செயல்படும், நேர்மையான ஆட்சியை தந்து கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையில், ஆர்.என்.ரவியை கவர்னராக மத்திய அரசு நியமித்திருக்கிறதோ என சந்தேகப்படுகிறேன்.புதிய கவர்னர், தமிழகத்தில் ஜனநாயக படுகொலை நடத்துவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மத்திய அரசு முயன்றால், மக்களை திரட்டி, ஜனநாயக சக்திகள் போராட வேண்டிய சூழல் உருவாகும் என எச்சரிக்க விரும்புகிறேன் எனஅழகிரி கூறியுள்ளார்.

 முதல்வர் ஸ்டாலின், புதிய ஆளூநருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேநேரம், ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம்  இது தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. எதிர்க் கட்சித்தலைவரும் ஏனைய தலைவர்களும் ஆளுநர் என்.ஆர்.ரவிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநராக  பன்வாரிலால் பொறுப்பேற்றபோது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த முக ஸ்டாலினுக்கு உரிய மரியாதை தரப்படாத நிலையில், இன்றைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.முதல்வர் ஸ்டாலின், தான் பொறுப்பேற்றது முதல்  அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்துடன் நட்பு பாராட்டி வருகிறார்.. முதல்வராக பதவியேற்றபோது, முன்வரிசையில் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரையும்  உட்கார வைத்து தன்னுடைய நாகரீகத்தை வெளிப்படுத்தியிருந்தார் ஸ்டாலின்.

முழுக்க முழுக்கபொலிஸ் துறை பின்புலம் கொண்ட ஆர்.என்.ரவியை, நாகாலாந்து கவர்னராக மத்திய அரசு ஏற்கனவே நியமித்தது. தற்போது, அவர் தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டு இருப்பதில் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இடையூறு செய்வதற்காகவே, இது போன்ற நியமனங்களை மத்திய அரசு கடந்த காலங்களில் செய்திருக்கிறது. ஆளுநருக்கு மாநிலத்தில் எந்த அதிகாரமும் இல்லை. மாநில அரசு முரண்பட்டால் ஆட்சியைக் கலைக்கும் உரிமை ஆளுநருக்கு உண்டு.

2014  ஆம் ஆன்டு முதல் கூட்டு புலனாய்வுக் குழு தலைவராக என்.ஆர்.ரவி இருந்தார். நாகாலாந்தில் உள்ள ஆயுத குழுக்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே, 2015ல் ஒப்பந்தம் ஏற்பட முக்கிய காரணமாகஇருந்தார். பயங்கரவாத ஒழிப்பு மற்றும் அது தொடர்பான உளவுத் தகவல்களை சேகரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.கடந்த 2019 ஜூலை 2020 இல், நாகாலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டார்.  நாகாலந்து ஆயுதக் குழுக்களுக்கு ரவியைப் பிடிக்காது. சமாதானப் பேச்சுவார்த்தைஎனும்  போர்வையில் தமது வீரியத்தை ரவி குலைத்ததாக அவர்கள் முற்றம் சாட்டியுள்ளனர்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என கூறப்படுகிறது. இந்த சூழலில், பாதுகாப்புத் துறை, உளவுத் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஆர்.என்.ரவி, தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆர்என் ரவியின் நியமனம் காரணமாக பலதரப்பட்ட அரசியல் கேள்விகள், விவாதங்கள் நடக்க தொடங்கி உள்ளன. ஒரு காலத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடிபோல்போலவே இப்போது தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும் மத்திய அரசு ஆளுநர் மூலம் அழுத்தம் கொடுக்குமோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 1996 முதல் 1998 வரை தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்தவர் பி. சி. அலெக்சாண்டர். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போது பி. சி. அலெக்சாண்டர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். எம்ஜிஆர் மறைந்தபின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாக பிளவுபட்டபோது ஆளுநராக இருந்த பி.சிஅலெக்ஸாண்டர் வலுவான முதல்வர் போல் செயற்பட்டார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி எப்படி கருணாநிதிக்கு சவாலாக இருந்தாரோ  அதேபோன்று இன்றைய ஆளுநரான ரவியும் ஸ்டாலினுக்கு சவாலாக இருப்பார்.

புதிய ஆளுநர்  ஆர்.என். ரவி, ஓய்வு பெற்ற .பி.எஸ்., அதிகாரி. நாகாலாந்து கவர்னராக இருந்தவர். உளவுத்துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர். தென் மாநில அரசியலை நன்கு அறிந்தவர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின்சிஷ்யர். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாகியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை நன்கு கண்காணிக்கவே ரவியை பிரதமர் நியமித்துள்ளார் என்கின்றனர்.

தமிழகத்தில் பிரிவினைவாதம் தலைதுாக்காமல் இருக்கவும் இவர் நியமனம் உதவும் என சொல்லப்படுகிறது.அரசியல் ரீதியாக ஒரு விஷயம் அலசப்படுகிறது. 'ஆளுநர் ரவி நேர்மையானவர்; தேவையில்லாத அரசியல் விவகாரங்களில் தலையிட மாட்டார். இவரை கவர்னராக நியமித்ததன் மூலம் தி.மு.., அரசுடன், மத்திய அரசு சுமுகமாக செயல்பட வேண்டும் என பிரதமர் விரும்புகிறார்' என்பது தெரிகிறது என்கின்றனர் டில்லி பா.., தலைவர்கள்.

  புத்தகம் கொடுப்பதும்,வாங்குவதும் ஸ்டாலினின் கொளகை. தன்னைச் சந்திக்கும் தான் சந்திக்கும் அனைவருக்கும் ஸ்டாலின் புத்தகங்களைக் கொடுப்பார்.ஆளுநர் ரவிக்கு கொடுக்கப்பட்ட புத்தகங்களில் ஒன்று கீழடி தமிழர் நாகரிகம் தொடர்பானது, மற்றொன்று சென்னை வரலாறு தொடர்பானது.இரண்டுமே ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்களாகும். யாருக்கு புத்தகங்கள் கொடுத்தாலும் அதில் தமிழ் கலாச்சாரம் முன்னே வந்து நிற்குமாறு உள்ள புத்தகங்களை தேர்ந்தெடுத்து அவர் வழங்குவது கவனிக்கத்தக்க அம்சமாக இருக்கிறது.  புத்தக தேர்வு பின்னணியில் முதல்வர் மட்டுமே கிடையாதாம். அவரின் சிறப்பு செயலாளர் மற்றும் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளரான உதயசந்திரன் ஐஏஎஸ் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.அந்த இரண்டு புத்தகங்களும் ஆளுநருக்கு கொடுக்கப்பட்ட சைகையாகும்.

மூத்த அரசியல்வாதி கவர்னராக வருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில்   பிரதமர் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.அதேநேரம் அவரது நியமனம், தமிழகத்தில் அரசியல் ரீதியாகவும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே, மோதல் போக்கு உள்ளது. இந்த மோதல் போக்கு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

No comments: