துபாயில் நடந்த
ஐபிஎல்
போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு
எதிரான
போட்டியில்
பெங்களூரு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி
பெற்றது.
.நானயச் சுழற்சியில் வென்ற பெங்களூரு கப்டன்
கோஹ்லி
களத்
தடுப்பைத்
தேர்வு
செய்தார்.
ராஜஸ்தான் அணி
20 ஓவர்களில்
9 விக்கெட்களை
இழந்து
149 ஓட்டங்கள்
எடுத்தது
ராஜஸ்தான் அணிக்கு
எவின்
லீவிஸ்,
யாஷஸ்வி
ஜெய்ஸ்வால்
ஜோடி
சிறப்பான
துவக்கம்
தந்தது.
ஜார்ஜ்
கார்டன்
வீசிய
4வது
ஓவரில்
2 சிக்சர்,
ஒரு
பவுண்டரி
விளாசினார்
லீவிஸ்.
முதல்
விக்கெட்டுக்கு
77 ஓட்டங்கள்
சேர்த்த
போது
கிறிஸ்டியன்
பந்தில்
ஜெய்ஸ்வால்
(31) ஆட்டமிழந்தார்.
ஹர்ஷல்
படேல்
பந்தை
பவுண்டரிக்கு
அனுப்பிய
லீவிஸ்,
31 பந்தில்
அரைசதம்
கடந்தார்.
அபாரமாக
ஆடிய
இவர்,
37 பந்தில்
58 ஓட்டங்கள்
குவித்தார்.
சகால் 'சுழலில்' மகிபால் லாம்ரர் (3), லிவிங்ஸ்டன் (6) சிக்கினர். ஷபாஸ் அகமது பந்தில் கப்டன் சஞ்சு சாம்சன் (19), ராகுல் டிவாட்டியா (2) வெளியேறினர். ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் ரியான் பராக் (9), கிறிஸ் மோரிஸ் (14), சேட்டன் சக்காரியா (2) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்கள் எடுத்தது. கார்த்திக் தியாகி (1) ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு சார்பில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜஸ்தான் 170 ஓட்டங்கள் எடுக்கும் என எதிர்பார்த்த நிலையில் சாஹல்,படேல் ஆகியோரின் பந்து வீச்சுஓட்ட எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியது.
150 எனும் வெற்ரி இலக்குடன் களம்
இறங்கியது பெங்களூரு. கப்டன்
விராத்
கோஹ்லி,
தேவ்தத்
படிக்கல்
ஜோடி
நல்ல
துவக்கம்
தந்தது.
முதல்
விக்கெட்டுக்கு
48 ஓட்டங்கள் சேர்த்த போது
முஷ்தபிஜுர்
ரஹ்மான்
பந்தில்
படிக்கல்
(22) விக்கெற்றைப்
பறிகொடுத்தார்..
கோஹ்லி
(25) 'ரன்-அவுட்'
ஆனார்.
பின்
இணைந்த
ஸ்ரீகர்
பரத்,
மேக்ஸ்வெல்
ஜோடி
பொறுப்பாக
ஆடியது.
மூன்றாவது
விக்கெட்டுக்கு
69 ஓட்டங்கள்
சேர்த்த
போது
முஷ்தபிஜுர்
பந்தில்
பரத்
(44) ஆட்டமிழந்தார்.
மோரிஸ் வீசிய
17வது
ஓவரில்
ஒரு
சிக்சர்,
3 பவுண்டரி
விளாசிய
மேக்ஸ்வெல்
அரைசதம்
அடித்தார்.
ரியான்
பராக்
பந்தை
பவுண்டரிக்கு
விரட்டிய
டிவிலியர்ஸ்
வெற்றியை
உறுதி
செய்தார்.
பெங்களூரு
அணி
17.1 ஓவர்களில்
3 விக்கெட்களை
இழந்து
153 ஓட்டங்கள் எடுத்து வெற்றி
பெற்றது.
மேக்ஸ்வெல்
(50), டிவிலியர்ஸ்
(4) ஆகியோர்
ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான்
சார்பில்
முஷ்தபிஜுர்
2 விக்கெட்களைவீழ்த்தினார்.
பெங்களூரு நிலை இதன் மூலம் 7 வெற்றிகளுடன் பெங்களூரு அணி 14 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தை பிடித்து தனது நிலையை உறுதிப் படுத்தியுள்ளது. பெங்களூரு அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ளன. இதில் எதாவது ஒரு போட்டியில் பெங்களூரு அணி வென்றால் கூட ப்ளே ஆப்-இல் அந்த அணியின் இடம் உறுதியாகும். பெங்களூரு அணியின் நெட் ரன்ரேட் -0.2 சற்று மோசமாக இருந்தாலும் கூட புள்ளிப் பட்டியலில் சிறப்பாக உள்ளதால் அந்த அணி எளிதில் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.
ராஜஸ்தான் நிலை
மறுபுறம்
ராஜஸ்தான்
அணி
இப்போது
இக்கட்டான
நிலையில்
உள்ளது.
11 போட்டிகளில்
விளையாடியுள்ள
ராஜஸ்தான்
அணி,
4 போட்டிகளில்
மட்டுமே
வென்றுள்ளது.
7 போட்டிகளில்
ராஜஸ்தான்
அணி
தோல்வியை
தழுவியுள்ளது.
அந்த
அணியின்
நெட்
ரன்
ரேடும்
-0.468 என்று மிக மோசமாக உள்ளது.
ராஜஸ்தான்
அணி
அடுத்து
வரும்
மூன்று
போட்டிகளில்
மிகப்
பெரியளவில்
வென்றால்
மட்டுமே
அடுத்துச்
சுற்று
குறித்து
நினைத்துக்
கூட
பார்க்க
முடியும்.
இது
மட்டுமின்றி
பிற
ஆட்டத்தின்
முடிவுகளும்
ராஜஸ்தான்
அணிக்குச்
சாதகமாக
அமைய
வேண்டும்.
அப்போது
தான்
ப்ளே
ஆப்
சுற்றுக்கு
ராஜஸ்தான்
அணியால்
செல்ல
முடியும்.
No comments:
Post a Comment