Monday, September 27, 2021

ரோஹித் சர்மாவுக்கு செக் வைத்த விராட் கோலி

ரோய சலஞ்பேங்களூருவுக்கு எதிரான ஐபிஎல்  போட்டியில் மும்பை இந்தியன்ஸ்தோவியடைந்ததால்  பிளே ஃஓவ் சுற்றுக்கு செல்வது சிக்கலாகி உள்ளது. 10 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகளைப் பெற்றிருந்த மும்பை இந்த‌த் தோல்வியின் மூலம்  ஏழாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

கொல்கட்டா, பஞ்சாப்,ராஜஸ்தான் அகிய  அணிகள் 8 புள்ளிகளிளுட‌ன் முறையே 4 ஆவது, 5ஆவது, 7 ஆவது இடங்களில் உள்ளன.இன்றைய  போட்டியில்  ராஜஸ்தானும், ஹைதராபாத்தும்  மோதுகின்றன. ஹதராபாத் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் எதுவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. ராஜஸ்தான் வெற்றி பெற்றால்   10 புள்ளிகளுடன் நான்காவது  இடத்துக்கு முன்னேறிவிடும். இதேவேளை மும்பையின்  நில‌மை மேலும் சிக்கலாகிவிடும். கொல்கட்டா +0.322 புள்ளிகளிப் பெற்றுள்ளதால்  அடுத்தடுத்து பெறும்  வெற்றிகள் மூலம் மூன்றாவது இடத்துக்கு முன்னெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


இன்றைய  போட்டியும் நாலைய போட்டிகளும் 8 புள்ளிகளைப்  பெற்ற கொல்கட்டா,பஞ்சாப், மும்பை, ராஜஸ்தான் ஆகியவற்றின் பிளே ஓவ் இடத்தை உறுதிப்படுத்தும் போட்டிகளாக அமையப் போகின்றன.

மும்பையின் நட்சத்திர வீரர்கள் ஆட்டமிழக்க பண்டய்யாவும், பொலாட்டும் களத்தில்  இருந்தனர். 16 ஆவது ஓவரை வீசிய ஹர்சஹ்ல் படேல் முதல் மூன்று பந்துகளில்  ஹர்திக் பண்டைய்யா, பொல்லார்ட், ராகுல் சாஹர் ஆகிய  மூவரையும் ஆட்டமிழக்கச்செய்து பெங்களூருவின் வெற்றியை உறுதி செய்தார்.பெங்களூரு அணியில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய மூன்றாவது வீரர் எனும் பெருமையை ஹர்ஷல் பெற்றுள்ளார். 

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா ஓவரில் பவுண்டரி அடித்த விராட் கோலி அதன்மூலம் ரி20 யில் 10,000 ஓட்டங்களைக் கடந்த வீரரார். 312 ரி20  போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி இந்த சாதனையை நிகழ்த்திய  முதலாஅவ்த் இந்திய வீரராவார்.

 இதற்கு முன்னதாக   நான்கு வீரர்கள்ரி20 போட்டியில்  ஓட்டங்களுடன் முதலிடத்தில் உள்ளார். ‍  பொல்லாட் 11195 ஓட்டங்களுடனும், சோயப் மாலிக் 10808 ஓட்டங்களுடனும், வார்னர் 10019 ஓட்டங்களுடனும்   உள்ளனர்.    மும்பைக்கு எதிரான் போட்டியில்  விராட் கோலி அடித்த 51 ஓட்டங்கள் மூலம் ரி20யில் 10004 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

 

 

No comments: