துபாயில் நடந்த எதிரான ஐபிஎல்
போட்டியில் விளையாடிய கோலி ரி20யில்
10,000 ஓட்டங்கள் அடித்த முதலாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.ஜஸ்பிரித்
பும்ரா ஓவரில் பவுண்டரி அடித்த விராட் கோலி அதன்மூலம் ரி20 கிரிக்கெட்டில் 10 ஆயிரம்
ரன்களை கடந்தார்.
312 ரி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி இந்த சாதனையை
நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக நான்கு வீரர்கள் ரி20யில் 10,000
ஓட்டங்களக் கடந்தனர்.
கிறிஸ் கெய்ல் 14,275 ஓட்டங்களுடன்
முதலிடத்தில் உள்ளார். பொல்லார்ட்
11,195 ஓட்டங்களுடனும், சோயப் மாலிக் 10,808 ஓட்டங்களுடனும், வார்னர் 10,019 ஓட்டங்களுடனும்
உள்ளனர். விராட் கோலி 51 ஓட்டங்கள் மூலம் ரி20 யில்20 10,004 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
இந்த ஐந்து வீரர்களை தொடர்ந்து
ரோஹித் மற்றும் ஆரோன் பின்ச் ஆகியோர் 10 ஆயிரம் ரன்களை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர்.
No comments:
Post a Comment