Tuesday, September 21, 2021

கொல்கட்டாவுக்கு எதிரான போட்டியில் மோசமாகத் தோற்றது பெங்களூரு

 ருண் சக்கரவர்த்திரஸலின் ஆகிய இரண்டு பந்து வீச்சாளர்களிடம் பெங்களூருவின் அதிரடி வீரர்கள் அனைவரும் சரணடைந்தனர். பெங்களூரு அணியின் ஸ்ரீகர் பரத், ஹசரங்கா ஆகிய  இருவரும் .பி.எல்., அரங்கில் அறிமுகம் ஆகினர். கோல்கட்டா அணியில் வெங்கடேஷ் ஐயர் அறிமுகம் ஆனார்.

 அபுதாபியில்உள்ள ஷேக் சையது ஸ்டேடியத்தில்   நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 32-வதுலீக் ஆட்டத்தில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 9 விக்கெற் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.பெங்களூரு முதல் விளையாடிய போது இரண்டு  போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்தது. கொல்கட்டா  இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு முதலில் துடுப்பெடுத்தாடியது. நாணயச் சுழற்சியில் மட்டுமே கோலி  வெற்றி பெற்றார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய  ரோயல் லஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19 ஓவர்களில்  சகல விக்கெற்களையும் இழந்து 92 ஓட்டங்கள் எடுத்தது. 93 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து  94 ஓட்டங்கள் சேர்த்து 9 விக்கெற் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர்களான  விராட் கோலி (5) , டி வில்லியர்ஸ் (0) மேக்ஸ்வெல் (10) ஆகியோர் அடுத்தடுத்து  வெளியேறி ஏமாற்றமளித்தனர். பின்வரிசை வீரர்கள் கைகொடுப்பார்கள் என  ரசிகர்கள் எதிர்பார்தனர். அவர்கலும் வந்த வேஅக்த்தில் திரும்ப  100 ஓட்டங்களைத் தாண்ட முடியாமல் தோல்வியடைந்தது பெங்களூரு.

9வது ஓவரை வீசிய ரசல், இரட்டை அடி கொடுத்தார். முதல் பந்தில் பரத்தை (16) வெளியேற்றினார். 4வது பந்தில் அபாயகரமான டிவிலியர்ஸின்  (0), விக்கெற் பறந்தது.

மறுபக்கம் தன் பங்கிற்கு சுழலில் மிரட்டினார் வருண். தனது இரண்டாவது ஓவரின் 4 வது பந்தில் மேக்ஸ்வெல்லை (10) ஆட்டமிழக்கச் செய்த வருண், அடுத்த பந்தில் ஹசரங்காவை 'டக்' அவுட்டாக்கினார். ஒரு கட்டத்தில் 51/2 என்ற நிலையில் இருந்த பெங்களூரு, அடுத்து 15 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழக்க, 66/7 என்ற மோசமான நிலைக்கு சென்றது. தொடர்ந்து சச்சின் பேபி (7), ஜேமிசன் (4), சிராஜ் (8) ஆட்டமிழந்தனர்.

19 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்த  பெங்களூரு 92 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களுரு அணியின் சார்பில் அதிகபட்சமாக தேவ்தத் பட்டிக்கல் 22 ஓட்டங்கள் எடுத்தார். கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ஆண்ட்ரே ரஸ்ஸல், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பெர்குசன் 2 விக்கெட்களை சாய்த்தார்.

93 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் சார்பில் சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர்  களமிறங்கினர். காயத்தில் இருந்து  மீண்ட சுப்மன் கில்லும், அறிமுக வீரரான வ்ட்ங்கடேஷ் ஐயரும் தமது பணியை சிறப்பாகச் செய்தனர். சுப்மன் கில் 48 (34) ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய  ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு  வேலை வைக்காது வெங்கடேஷ் ஐயர், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்

 அதிரடி காட்டிய வெங்கடேஷ் ஐயர் 41 (27) ஓட்டங்களும், ஆண்ட்ரே ரஸ்ஸ ஓட்டம் எதுவும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கொல்கத்தா அணி 10 ஒவர்களில் 1 விக்கெட்டை இழந்து 94 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூரு அணி சார்பில்   சாஹல் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றிபெற்றது

கோலிக்கு இது  200வது ஐபிஎல் போட்டியாகும். பெங்களூர் அணி சார்பாக 200 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர். இதுவரை 5 சதங்களுடன் 6081 ஓட்டங்கள் குவித்த இவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராகவும் திகழ்கிறார். ‍  ஐபிஎல் போட்டிகளில் 200 போட்டிகளில் விளையாடியுள்ள 5 ஆவது வீரர் இவர்தான். இவருக்கு முன்னதாக டோனி 212 போட்டிகளிலும், ரோகித்சர்மா 207 போட்டிகளிலும், தினேஷ் கார்த்திக் 203 போட்டிகளிலும், சுரேஷ் ரெய்னா 201 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.

  ஒரே ஒரு ஐபிஎல் அணிக்காக 200 போட்டிகளில் விளையாடிய முதல் ஐபிஎல் வீரர் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். இதுவரை தான் ஆரம்பித்த காலத்திலிருந்து ஆர்.சி.பி. அணிக்காக விளையாடி வரும் கோலி   தனது 200வது போட்டியை விளையாடியது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்வி என 6 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் 5-வது இடத்துக்கு முன்னேறியது. முதல்சுற்றில் சிறப்பான வெற்றிகளை ஆர்சிபி பெற்றதால் 10 புள்ளிகளுடன் தொடர்ந்து 3-வது இடத்தில் நீடிக்கிறது. ஆனால், ஆர்சிபி அணியின் நிகர ரன்ரேட் மோசமாக இருப்பதால், அடுத்தடுத்துவரும் போட்டிகளில் பிற அணிகள் பெறும் வெற்றி பாதிக்கக் கூடும்.

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதலில் துடுப்பெடுத்தாடி சேர்த்த மிகக் குறைவான 3-வது ஸ்கோர் இதுவாகும். இந்திய ரி20 க‌ப்டன், ஆர்சிபி க‌ப்டன் ஆகிய இரு பதவிகளையும் இழக்கும் விராட் கோலியின் துடுப்பாட்டம் மிக மோசமாக் இருந்தது. 


ஆர்சிபி வீரர்கள்  மொத்தம் 62 டாட்பந்துகளை விட்டுள்ளனர். ஏற்ககுறைய 10 ஓவர்களை அடிக்காமல் மெய்டன் கொடுத்ததற்கு சமமாகும்.

கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் பந்துவீச்சாளர்கள்தான்.   4 ஓவர்கள் வீசி 13 ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், 15 டாட்பந்துகளையும்வீசிய வருண் சக்கரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஆன்ட்ரூ ரஸலின் பந்துவீச்சும் குறிப்பிடத்தகுந்தது, 3 ஓவர்கள் வீசிய ரஸல் 9 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதில் 10 டாட் பந்துகள் அடங்கும். அதிலும் ரஸல் தான் வீசிய முதல் ஓவரிலேயே பரத் மற்றும் டிவில்லியர்ஸுக்கு யார்கர் வீசி ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்டு ஆட்டமிழக்கச் செய்தது ஆட்டத்தின் திருப்பமுனையாகும்.

  கொல்கத்தா அணியின் மற்ற பந்துவீச்சாளர்களான பிரசித் கிருஷ்ணா, பெர்குஷன், சுனில் நரேன் ஆகிய மூவரும் தங்கள் பணியைக் கச்சிதமாகச் செய்தனர். க‌ப்டன் கோலியை வெளியேற்றி முதல் சரிவை ஏற்படுத்தியது பிரசித் கிருஷ்ணாதான். தேவ்தத் படிக்கலை களத்தில் நின்றிருந்தால்கூட  ஓட்ட எண்ணிக்கை உயர்ந்திருத்திருக்கும். ஆனால், தேவ்தத்துக்கு பாடிலைனில் பந்துவீசி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம்கேட்ச்சாக மாற்றி பெர்குஷன் அடுத்த அதிர்ச்சி அளித்தார். இரு விக்கெட்டுகள் விரைவாக வீழ்ந்தபோதே ஆர்சிபி சரிவு தொடங்கியது


ப்டன் கோலி எடுத்த  தவறான முடிவு தற்போது பெங்களூர் அணியை பெரிய சிக்கலில் தள்ளியுள்ளது.   அபுதாபி மைதானம்  பெரியது அதுமட்டுமின்றி சேஸிங்கிற்கு சாதகமான ஒரு மைதானம். இதனால் எப்போதும் இந்த மைதானத்தில் நாணயச் சுழற்சியில்  வெற்றி பெறும் அணி முதலில் பந்துவீசவே விருப்பப்படும்ஆனால் கோலி சமீபகாலமாக எடுக்கும் முடிவுகள் தவறாக செல்வது போன்று இம்முறையும் பேட்டிங்கை தேர்வு செய்து பெங்களூரு அணியை சிக்கலில் தள்ளியுள்ளார்.


 

 

No comments: