ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் விரைவில் புதிய ஆட்சி உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர். அனைத்து ஆப்கானிஸ்தான் மாகாணங்களுக்கும் கவர்னர்கள், அதிகாரிகள் ஆகியோரை நியமித்து வருகின்றனர். பதவியேற்பு நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளனர். அவர்களது ஷரியா சட்டம் மூலமாக ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய ஆட்சி நடைபெறும். இந்த சட்டங்களை முறையாகக் கடைபிடிக்க பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த இருபது ஆண்டு காலமாக
அமெரிக்க அரசின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தானில்
ஜனாதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டை ஆட்சி செய்து
வந்துள்ளனர்.அவர்கள் அமெரிக்காவின்
கைப்பொம்மைகளாகச் செயற்பட்டதாக தலிபான்கள் கருதுகின்றனர்.
இந்த
முறை தாலிபான்களின் ஆட்சி மாறுபட்டு இருக்கும்
என்று ஆப்கானைக் கைப்பற்றியதும் உறுதியளித்தனர்.
இந்த முறை பெண்கள்
உரிமை பாதுகாக்கப்படும் என்றும் பெண்கள் பள்ளி,
கல்லூரி செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் செய்தியாளர்கள்
சந்திப்பில் தலிபான்கள் தெரிவித்தனர்.
ஆனால், அவர்கள் சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாகவே இருக்கிறது. முதலில் புர்கா அணியாமல் ஆண் துணை இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என அறிவித்த தலிபான்கள், ஆண்- பெண் இருபாலர் படிக்கும் கல்வி முறைக்கு தடை விதித்துக்கனர்.
தலிபான்களின்
கட்டுப்பாட்டில் ஆப்கான்
சென்றதும் தொலைக்காட்சியில் பெண்கள் அகற்றப்பட்டார்கள்.
ஆண்கள் செய்தி வாசித்தார்கள்.
மேற்கத்தைய கோட்
உடை மாறி
ஆப்கானின் தேசிய உடை அணிந்த ஆண்கள் தோன்றினார்கள்.
இருபது வருடங்கள்
சுதந்திரத்தை அனுபவித்த ஆப்கான்
பெண்கள் ஓரிரவுக்குள் அதனை
இழக்க விரும்பவில்லை. தங்கள் உரிமைகளைப் பெறுவதற்காக போராட்டங்களை
நடத்துகின்றனர். பெண்களின் இந்தப் போராட்டம் தலிபான்களுக்கு
புதியதாக உள்ளது.
சிறைக்கைதிகளை தலிபான்கள் விடுதலை செய்ததால் ஆப்கானிஸ்தானில் உள்ள 250 பெண் நீதிபதிகள் அச்சத்தில் உள்ளனர். தமது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை எனக்கூறிய பெண்நீதிபதிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இன்னொரு புறத்தில் விபசாரம் செய்த பெண்கைன் பட்டியலை தலிபான்கள் தயாரிப்பதாகச் செய்தி வெளியாகி உள்ளது.
தலிபான்களின் ஆட்சிக்கு எதிராகத் தலைநகர் காபூலில் போராட்டம் நடத்திய பெண் சமூக ஆர்வலர் ஒருவர் மீது தாலிபான்கள் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தலிபான்கள் ஆட்சியில் பெண்கள் உரிமை மறுக்கப்படும் என்பதால், தலிபான்களுக்கு எதிராக சில பெண்கள் தலைநகர் காபூலில் தொடர் போராட்டம் நடத்தி னர். இரண்டாம் நாள் நடைபெற்ற போராட்டத்தில் தான் தலிபான்கள் பெண் சமூக ஆர்வலர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. தலிபான்களால் தாக்கப்பட்டவர் நர்கிஸ் சதாத் என்ற பெண்கள் உரிமை ஆர்வலர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
தலிபான்களுக்கு
எதிராகப் போராட்டம் நடத்திய பெண்கள், ஜனாதிபதி
மாளிகை நோக்கி ஊர்வலம் சென்றனர்.அதைத் தடுத்த தலிபான்கள்
அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக்
குண்டுகளை வீசியதாகவும், அதைத் தொடர்ந்து போராட்டம்
வன்முறையாக மாறியதாகவும் டோலோ செய்தி நிறுவனம்
குறிப்பிட்டுள்ளது. இது குறித்த வீடியோக்களும்
இணையத்தில் வெளியாகியுள்ளன. முன்னதாக வியாழக்கிழமை ஹெராட் என்ற இடத்தில்
தலிபானின் புதிய அரசில் பெண்களுக்கு
உரியப் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்பதை
வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். தங்களை
வேலைக்கு செல்ல அனுமதி வேண்டும்
என சில பெண்கள் தைரியமாக
சாலையில் வந்து போராடியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் முன்னைய
அரசாங்கத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கபட்டவர்களை தலிபான்கள் விடுதலை செய்துள்ளனர்.தடை ச்ய்யப்பட்ட
பயங்கரவாத குழுக்களில் உள்ளவர்களும் விடுதலை
செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.ஆப்கான் சிறையில் இருந்த தலிபான்களும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். குற்றவாளிகள்
சிலருக்கு அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை தாபான்கள்
வழங்கி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான்
நீதிமன்றத்தில் நீதிபதிகளாகப் பதவி வகித்த பெண்கள் பலர் தற்போது இதனால் அச்சுறுத்தலுக்கு
உள்ளாகி உள்ளனர். தங்களால் ஒரு காலத்தில் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தற்போது தாபான்கள் ஆதரவுடன் வெளியில் சுதந்திரமாக உலா
வருகின்றனர்.
ஏற்கனவே
ஆப்கானிஸ்தானில் நீதித்துறையில் பணிபுரியும் பெண்களை பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல்
நடத்தி உள்ளனர். ஜனவரி மாதம் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டன்ர். இப்போது நாடு முழுவதும்
கைதிகள் தலிபான் அமைப்பால் விடுதலை செய்யப்பட்டிருப்பதால், பெண் நீதிபதிகளின் உயிருக்கு
ஆபத்து இருப்பதாக நாட்டை விட்டு வெளியேறிய பெண் நீதிபதி ஒருவர் கூறி உள்ளார்.
‘காபூலில் எனது வீட்டிற்கு தலிபான் அமைப்பைச் சேர்ந்த நான்கைந்து
பேர் சென்று என்னைப் பற்றி விசாரித்துள்ளனர். இங்கிருந்த பெண் நீதிபதி எங்கே? என்று
கேட்டுள்ளனர். அவர்கள் என்னால் சிறையில் அடைக்கப்பட்டவர்கள். இதேபோல் ஆப்கானிஸ்தானில்
தற்போது இருக்கும் பெண் நீதிபதிகளிடம் தொடர்பில் இருக்கிறேன். அவர்கள், தங்களை மீட்காவிட்டால்
உயிருக்கு நேரடி ஆபத்து இருப்பதாக என்னிடம் கூறுகின்றனர்’ என அந்த நீதிபதி தெரிவித்துள்ளார்.
சர்வதேச பெண் நீதிபதிகள் சங்கத்தில் உள்ள சக நீதிபதிகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்பினரின் உதவியுடன் சமீபத்தில் வெளியேறிய ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகளில் இவரும் ஒருவர். மற்ற நீதிபதிகளும் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளனர். அவர்களை வெளியேற்றுவதற்காக மனித உரிமை ஆர்வலர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே விபசாரத்தில் ஈடுபட்டு வந்த ஆப்கானிஸ்தான் பெண்கள் யார் யார் என கண்டறியும் பணியில் தலிபான்கள் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காகவே விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த பெண்களின் பட்டியல் தயாரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது
விபச்சாரத்தில்
ஈடுபட்ட பெண்களுக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் எனவும் அதற்காக தான் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு
வருவதாகவும் சொல்லப்படுகிறது, முந்தைய (1996-2001) தலிபான்கள் ஆட்சியில் விபசாரம் அல்லது
குடும்ப உறவுகளுக்கு மாறான உறவு வைத்துக் கொள்ளும் பெண்களுக்கு பொது இடத்தில் தலிபான்கள் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர்.
தங்காது உரிமைகளைப்
பெற ஆப்கானிஸ்தானியப் பெண்கள்
போராடத் துணிந்து விட்டனர்.ஆப்கானிஸ்தான்
பெண்களில் இந்தப் போராட்டங்களை தலிபான்கள்
எப்படிக் கட்டுப்படுத்தப் போகிறார்கள் என்பதே உலக அரசியலின் முன்னால் உள்ள பிரதான கேள்வி.
ரமணி
No comments:
Post a Comment