Saturday, September 25, 2021

பெங்களூருவின் வெற்றியை பறித்த சென்னை

சார்ஜாவில் நடைபெற்ற ரி20  போட்டியின் 35-வது லீக் ஆட்டத்தில்  ரோயல் சலஞ்ச் பெங்களூருவுக்கு எதிராக விளையாடிய   சென்னை சூப்பர் கிங்க்ஸ் 6 விக்கெற் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிராவோவின் பந்து வீச்சி, சென்னை வீரர்களின் நிதானமான துடுப்பாட்டம் பெங்களூருவின் கனவை சிதைத்தது.

மணல் புயல் காரணமாக சற்று தாமதமாக போட்டி ஆரம்பமானது. நானயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணிக் கப்டன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில்  துடுப்பெடுத்தாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெற்களை இழந்து  156 ஓட்டங்கள்  சேர்த்தது. 157 ஓட்டங்கள் அடித்தால்  வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்களை இந்து 157 ஓட்டங்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.


முதல் 13 ஓவர்கள் வரை பெங்களூருவின் பக்கம் இருந்த வெற்றித் தேவதை 19 ஆவது 20 ஆவது ஓவர்களில் சென்னையின் பக்கம் சாயத்தொடங்கி விட்டார். 13 ஆவது  ஓவரில்  விக்கெற் இழப்பின்றி  11 ஓட்டங்கள் எடுத்த பெங்களூரு 200 ஓட்டங்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான கோலியும், படிக்கல்லும் ஆட்டமிழந்த பின்னர் கலம் இறங்கிய  அதிரடி வீரர்கள் அனைவரும் சென்னை வீரர்களிடம் சரணடைந்தானர்.   அடுத்த 7 ஓவர்களில் 6 விக்கெற்கலை இழந்த பெங்களூரு   45 ஓட்டங்கள் மட்டும் எடுத்தது. கடைசி 4 விக்கெற்களை 16 ஓட்டங்கள் எடுத்து இழந்ததுக்கும் இழந்தது பெங்களூரு.

பெங்களூரு 111 ஓட்டங்கள் எடுத்தபோது பிராவோவின் பந்து வீச்சில் 53  (53) ஓட்டங்கள் எடுத்த கோலி பிராவோவின் பந்து வீச்சில்  ஆட்டமிழந்தார்.

  டிவில்லியர்ஸ், படிக்கலுடன் சேர்ந்தார்.  டிவில்லியர்ஸ்(12), படிக்கல்(70 5பவுண்டரி, 3 சிக்ஸர் ) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.   மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸர் உள்ளி்ட்ட 11 ஓட்டங்கள் எடுத்துநிலையில் ஆட்டமிழந்தார்.அடுத்துவந்த டிம் டேவிட்(1) சஹர் பந்துவீச்சிலும், ஹர்ஸல் படேல்(3)   பிராவோ பந்துவீச்சிலும் விக்கெட்டை இழந்தனர். 140 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆர்சிபி அணி அடுத்த 16 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்கள் அடித்தது. பிராவோ 20 ஆவது  ஓவரில் இரண்டு  ஓட்டங்களைக் கொடுத்து விக்கெற்களை வீழ்த்தினார்.

157 ஓட்டங்கள் அடித்தால்  வெற்றி எனும் இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. கெய்க்வாட், டூப்பிளசிஸ் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இருவரும் எந்த விதமான சிரமும் இல்லாத வகையில் ஓட்டங்களைச் சேர்த்தனர்.   பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணி விக்கெற் இழப்பின்றி 59 ஓட்டங்கள் எடுத்தது

  38 ஓட்டங்கள் எடுத்த கெய்க்வாட்  ல் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 31 ஓட்டங்களில்  விக்கெட்டை பறிகொடுத்தார். மொயின் அலி, அம்பதி ராயுடு இருவரும் 3-வது விக்கெட்டுக்கு கூட்டணி அமைத்து அணியை வெற்றிக்குநகர்த்தினர். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 47 ஓட்டங்கள் சேர்த்தனர் 23 ஓட்டங்கள் சேர்த்த மொயின் அலி ஹர்ஸல் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஹர்ஸல் படேல்பந்துவீச்சில் ராயுடு 33 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.


சின்ன தல ரெய்னா, தல தோனி இருவரும் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ரெய்னா 17 ஓட்டங்களுடனும்,  டோனி 11 ஓட்டங்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 18.1 ஓவர்களில் சிஎஸ்கே அணி 4 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்கள் சேர்த்து வெற்றி பெற்றது. பெங்களூரு    தரப்பில் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 பெங்களூரு அணியின் துடுப்பாட்ட  வரிசையைக் சிதறடித்த பந்துவீச்சாளர் பிராவோவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பிராவோ 4 ஓவர்கள் வீசி 24  ஓட்டங்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.கடசி ஓவரில் ஓட்டங்களைக் கொடுத்து  இரண்டு விக்கெற்கலை வீழ்த்தினார் டோனி, ரெய்னா ஜோடி நீண்ட காலத்தின் பின்னர் போட்டியை முடித்துவைத்தனர். ஐபிஎல் தொடரில் இருவரும் சேஸிங்கில் 4-வது முறையாக ஆட்டத்தை முடித்து வைத்துள்ளனர்.

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 7-வது ஆட்டத்தில், 7-வது தோல்வியை பெங்களூரு சந்தித்துள்ளது. கடந்த போட்டியில் 92 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. 


இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலி்ல் முதலிடத்துக்கு முன்னேறியது. இதுவரை 9 போட்டிகளில் 7 வெற்றிகள், 2 தோல்விகள் என 14 புள்ளிகளுடன் சென்னை இருக்கிறது.

பெங்களூரு2-வது சுற்றில் சந்திக்கும் 2-வது தோல்வியாகும். கடந்த சீசனில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் பெங்களூரு  அணி தொடர்ந்து சந்திக்கும் 7-வது தோல்வியாகும். இதுவரை 9 போட்டிகளில் 5 வெற்றிகள், 4 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் தொடர்ந்து 3-வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் பெங்களூரு மிக மோசமாக இருப்பதால், அடுத்தடுத்துவரும் போட்டிகளை நல்ல ரன்ரேட்டில் வெல்லாவிட்டால், புள்ளிகள் இருந்தாலும், கடைசி நேரத்தில் ப்ளேஆஃப் செல்வதில் சிக்கலை ஏற்படுத்தும்.

 

No comments: