Friday, August 6, 2021

பர்சிலோனா அணியில் இருந்து வெளியேறினார் மெஸ்ஸி


உதைபந்தாட்ட ஜாம்பவானான மெஸ்ஸிக்கு உலகெங்கும் உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள்  உள்ளனர்ஐரோப்பிய கிளப்  அணியான பர்சிலோனாவை மெஸ்ஸி பிரதிநிதுத்துவப் படுத்துவதால் ஐரோப்பாவிலும் அவருக்கு  ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. பர்சிலோனா அணிக்கு மெஸ்சி விளையாட மாட்டார் என பர்சிலோனா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், பர்சிலோனா ரசிகர்கள்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பர்சிலோனா விளையாடும் போது 10 ஆம் இலக்கத்தில் இனிமேல் மெஸ்ஸியைப் பார்க்க முடியாது. ஆர்ஜென்ரீனா அணித் தலைவரான மெஸ்ஸி, பர்சிலோனாவுக்கு பெற்றுக்கொடுத்த சம்பியன் கிண்ணங்கள் மிக அதிகம்.தாய் நாட்டுக்கு மிக முக்கையமான சம்பியன் கிண்ணத்தை பெற்றுக்கொடுக்காத மெஸ்ஸி என அவர்மீது கடும்  விமர்சனங்கள்  எழுந்தன.

பர்சிலோனா அணிக்கும், மெஸ்சிகும் இடையிலான ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கான புதிய  ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அது தற்போது நிறைவேறாது என தெரியவந்துள்ளது. பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தத்தில் மெஸ்ஸி கையெழுத்திடவில்லை. அவர் இனி பார்சிலோனா அணிக்காக விளையாட்டமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பர்சிலோனாவுடனான மெஸ்ஸியின்  21 வருட உறவு துண்டிக்கப்பட்டுள்லது. 2000 ஆம் ஆண்டு இளம் வீரராக பார்சிலோனா அணியில் இணைந்தவர் லியோனல் மெஸ்ஸி.   13 வயது முதல் அந்த அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணியில் இருந்து வெளியேறியுள்ளார். பர்சிலோனாவுக்காக  அதிகமான போட்டிகளில் விளையாடிஅதிகமான கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமை மெஸ்ஸியை சார்ந்துள்ளது.


  பார்சிலோனாவுக்காக 778 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி, 672 கோல்களை அடித்துள்ளார். தனிப்பட்ட கிளப் அணிக்காக பீலே அடித்த 643 கோல் என்ற சாதனையை முறியடித்து மெஸ்ஸி புதிய சாதனை படைத்தார். அந்த அணிக்காக 34 சம்பியன் கிண்னங்க ளை மெஸ்சி பெற்றுக்கொடுத்துள்ளார்.


  பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைனை மெஸ்ஸி அணுகியதாகவும், பிஎஸ்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளனபார்சிலோனா அணியில் இருந்து வெளியேறியிருந்தாலும், மெஸ்ஸி இன்னும் வேறு எந்த கிளப்புடனும் ஒப்பந்தம் குறித்து பெரிய அளவில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனத்தெரிகிறது. எனவே தற்போதைக்கு அவர் எந்த அணியை சேர்ந்தவரும் இல்லை. விரைவில் அவரது புதிய ஒப்பந்தம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் மெஸ்ஸியின் ரசிகர்கள் அவர் பின்னால் செல்வார்கள்.

No comments: