Saturday, August 21, 2021

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கப்போவது யார்?

உலகின் மிகப்பெரிய  வல்லரசின் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தான் இப்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. எதிரிகளை  விரட்டி விட்டோம் நமது நாடு  நம் கையில் வந்துள்ளது என  தலிபான்கள் வெற்றி முழக்கமிடுகின்றனர். இதுவரை காலமும் ஆப்கானில் வாழ்ந்த  மக்களின் முகத்தில் ழ்ச்சி இல்லைஅச்சத்துடனேயே வாழ்கின்றனர். வசதி உள்ளவர்கள் ஆப்கானை விட்டு வெளியேறி விட்டனர்.பலர்  கால் நடையாக எல்லை தாண்டி அயல் நாடுகளுக்குச் சென்றுவிட்டனர். இன்னும் பலர்  ஆப்கானை  விட்டு வெளியேற முயற்சி  செய்கின்றனர்.

ஆப்கானைக் கைப்பறிய தலிபான்கள் ஆட்சி அமைப்பதற்கான பேச்சு வார்த்தைகளை நடத்துகின்றனர். ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட  மாணவர்  அமைப்பான தலிபான், உலகமே பிரமிப்புடன்  பார்க்கும் வகையில் வளர்ச்சியடைந்துள்ளது.

 ஆப்கான் மக்கள் தலிபான்களை அச்சத்துடன் நோக்குகின்றனர். முன்பு அவர்கள் செய்த  அட்டகாசங்களை மக்கள் மறக்கவில்லை.  அச்சப்பட வேண்டாம் என தலிபான் தலைவர்கள் சொன்னாலும், மக்கள் அச்சத்துடனே இருக்கிறார்கள். ஊடகங்களுக்கு மக்கள் வழங்கும் பேட்டிகளில் இது வெளிப்படையாகத் தெரிகிறது.

தலிபான்களுக்கு எதிராக ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் இடம் பெறுவதாகவும் தகவகல்கள்வெளியாகின்றன. இப்படியான ஆர்ப்பாட்டங்கலை தலிபான்கள்  அனுமதிக்க  மாட்டார்கள். அவர்களுடைய அனைத்து நோக்கமும் ஆட்சி  அமைப்பதிலேயே  குறியாக உள்ளது. தலிபான் இயக்கத்தில் அங்கம் வகிக்காதவர்கலையும் இணைத்து  ஆட்சி அமைக்கப்போவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எவளவு  சாத்தியமாகும் எனத் தெரியவில்லை. ஆனால் இவர்களின் கறாரான மதரீதியான ஆட்சி ஒரு நாட்டை ஆள்வதற்குத் தேவையான கொடுக்கல் வாங்கல் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

இஸ்லாமிய சட்டங்களுக்குள் என்ன அனுமதிக்கப்படுமோ அதுதான் என்கின்றனர், கலாச்சாரம், பொருளாதாரம், சமூகம் ஆகிய தாராளவாதங்கள் புழங்க வேண்டிய இடங்களிலும் இவர்களது மத அடிப்படைவாதம் தலைத்தூக்கினால் மற்ற நாடுகளுடனான உறவுகள், உள்நாட்டில் மக்கள் ஆதரவை எப்படி பெறுவார்கள் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மக்களை சதாசர்வ காலமும் துப்பாக்கியின் கீழ், துப்பாக்கி முனையில் வைத்திருக்க முடியாது, அப்படி வைக்க முயற்சி செய்தால் கிளர்ச்சி உருவாகும். கடந்த 20 வருடங்களில் அனுபவித்த  வாழ்க்கை மாறுவதை  ஆப்கான் மாக்களில் அனேகமானோர்  விரும்பமாட்டார்கள்.

ஆப்கானிஸ்தானில் பிரபலமானவர்கள் தலிபான்களுக்குப் பயந்து நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்கள். ஆப்கானின்  பிரபல பாடகியும்  அவர்களில் அடக்கம். விமானச்  சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 19 வயதான உதைபந்தாட்ட  வீரரின் உடற்பாகங்கள் இருப்பதாக டோஹா செய்திகள் தெரிவிக்கின்றன. விமாந்த்தில் இருந்து விழுந்து இறந்தவர்க ளில் ஒருவர்  வைத்தியர் என  உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவுடன் 10 ஆண்டுகளாக காபூலிலும், டோஹாவிலும் லிபான்கள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அரசியல் பிரிவில் இரண்டாம் கட்ட தலைவரான  முல்லா அப்துல் கனி பராதர்  புதிய ஆட்சியின் தலைமைப் பீடத்தில் இருப்பார்.

தாலிபான்களின் பெருந்தலைவர்களாகக் கருதப்படும் அமிர் உல் மொமினீன், மால்வி ஹைபத்துல்லா அக்குன்ஜாதா ஆகியோர் நேரடியாக அரசில் பங்கேற்க மாட்டார்கள்.   ஈரான் போன்று ஒரு அதிகாரம் மிக்க தலைவராக ஒருவர் நியமிக்கப்படுவார்,   அந்தப் பதவிக்கு மால்வி ஹைபத்துல்லா அக்குன்ஜதா நியமிக்கப்படுவார்.

முல்லா  அப்துல் கனி பராதர்  என்பவர் பொபல்ஜாய் பஷ்தூன் இனக்குழுவைச் சேர்ந்தவர். லிபானின் இணை நிறுவனரும் இவரே. முல்லா முகமது உமருடன் இவர் சேர்ந்துதான் லிபான் அமைப்பு தொடங்கப்பட்டது. பராதர் என்றால் சகோதரன் என்று பொருள்.   2010-ல் .எஸ்.. இவரைக் கைது செய்து வைத்தது. 

 

2018‍ல்   அமெரிக்க ஜனாதிபதி  டொனால்டு ட்ரம்புடன் லிபான்கள் பேச்சு வார்த்தைகளை  தொடங்கிய போது முல்லா அப்துல் கனி பராதர் விடுவிக்கப்பட்டார். 9 உறுப்பினர் கொண்ட லிபான் குழுவின் தலைவர் இவர்தான்.   இந்தப் பேச்சு வார்த்தையின் போதுதான் அமெரிக்கப் படைகளை ஆப்கானிலிருந்து வாபஸ் பெற ஒப்புக் கொள்ளப் பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.   அல் கொய்தா, ஐஎஸ்,  பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்க மாட்டோம் என்று லிபான்கள் உறுதி அளித்தனர். அந்த  உறுதியை தலிபான்கள் காப்பாற்ற வேண்டும்.

 முல்லா முகமது யாகூப், 31, இவர் முல்லா உமரின் மகன் ஆவார். தாலிபான்களின் ராணுவப் பிரிவின் தலைவர் ஆவார். ஆட்சிப்பீடத்தில் அடிபடும் இன்னொரு பெயர் முல்லா கைருல்லா கைர்குவா, அடுத்தவ்ர் முல்லா முகமது ஃபசல். இவர்களுக்கு வயது 54,  அமெரிக்கப் படையினர் லிபான்களை வெளியேற்றிய பிறகு குவந்தநாமோ பே சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர். இவர்கள் பிறகு மே, 2014-ல் தான் விடுவிக்கப்பட்டனர். இவர்களை அமெரிக்கா சும்மா விடுவிக்கவில்லை, ஹக்கானி நெட்வேர்க்  அமைப்பு அமெரிக்க ராணுவ வீரர் பொவே பெர்க்தலை பிடித்து வைத்து மிரட்டியதையடுத்து இருவரும் விடுவிக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள சிராஜுதின் ஹக்கானி புதிய தாலிபான்கள் ஆட்சியில் இடம்பெற விரும்புகிறாரா என்பது தெரியவில்லை. ஹக்கானி நெட்வேர்க் லிபான்களுடன் ஒருங்கிணைந்தவர்கள்தான் ஆனாலும் வேறுபட்ட நடவடிக்கைகள், அமைப்பு உறுப்புகள் கொண்டவர்கள். இவர்களுக்கு அல்கொய்தாவுடன் நெருங்கிய தொடர்பு உண்டு.ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தாக்குதல்களில் ஹக்கானி நெட்வேர்க் வழி நடத்தியது.

இவர்களோடு ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய், இவர் தோகாவில் தாலிபான்கள் அலுவலகத்தை நடத்தியவர். மற்றொருவர் ஜபியுல்லா முஜாகிர் ஆகியோரும் முக்கியமானவர்கள். மேலும் ஹக்கானி சகோதரர் அனாஸ் என்பவரும் போட்டியில் உள்ளார்.

தலிபான் அரசை வழி நடத்தும் தலைவர்கள், அதன் கொள்கை,  வெளிநாட்டு உறவு, வெளிநாட்டுத்தொடர்பு  என்பனதான் ஆப்கானை உலகத்துடன் ஒன்றிணைக்க  உள்ளன

No comments: