Tuesday, August 10, 2021

ஒலிம்பிக்கில் சறுக்கிய தருணங்கள்


 ஒலிம்பிக்கில் ரசனை மிகுந்த  விளையாட்டுகளில் நீச்சல் முதலிடம் வகிக்கிறது. நீச்சலில் பலவகைகள் உள்ளன. அவை அனைத்தையும் பார்க்கும்போது பரவசமாக இருக்கும். நீச்சல் தடாகத்துக்கு மேல் உயரமான இடத்தில் இருந்து குதிக்கும்  போட்டியும் அழகு மிக்கது தான்.

குத்துக் கரணங்களுடன் தலை கீழாக விழுவது, அந்தரத்தில் இடப்பக்கமாக அல்லது வலப்பக்கமாக உடம்பை சுருட்டி நீரினுள் விழுவது போன்றவற்றை பார்க்கும்போது ஆசரியமாக இருக்கும்.

கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய  பமீலா வேர், ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். அவரின் ஒவ்வொரு அசைவும் மிக மோசமானதாக இருந்தன.டோக்கியோவில் தந்து முதல் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொன்ட  பமீலா வேர், ஸ்பிரிங் போர்டை அணுகுவதில் தவறிவிட்டார், இதனால் அவள் கால்களை முதலில் மேற்பரப்பில் அடித்து நீரில் விழுந்தார்.

உரிய இடத்தில் இருந்தி குதித்த பமீலா வேர் நிலை தடுமாறி கீழே இருந்த பலகையில் கால்களைப் பதித்தார். அப்போதும் பமீலாவால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கிருந்து காலகள் நீரில் படும்படியாக குதித்தார். இதனால் அவருக்கு புள்ளிகள் வழங்கப்படவில்லை.இதன் விளைவாக 0.0 மதிப்பெண் கிடைத்தது,

 காயத்தைத் தவிர்ப்பதற்காக சிக்கலான டைவ் முயற்சியில் இருந்து விலகியதை வெளிப்படுத்தினார்.

இந்த போட்டிக்கு நான் தயாராக இருந்தேன், நான் தவறு செய்தேன். இது யாருக்கும் நடந்திருக்கலாம், ஆனால் அது எனக்கு தவறான நேரத்தில் நடந்தது.நான் டைவ் செய்திருந்தால், என்னை நானே காயப்படுத்தியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.' என்றார்.

No comments: