Sunday, August 8, 2021

ஒலிம்பிக்கில் சறுக்கிய தருணங்கள்

ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தன. கலப்பு ரிலே இரண்டாம் கட்ட இறுதி நீச்சல் போட்டியில் அமெரிக்க குழுவின் சார்பில் கலந்துகொண்ட 17 வயதான லிடியா ஜேக்கபி  தயராக நின்றார். 100 மீ ப்ரெஸ்ட்ஸ்ட்ரோக் பட்டம்  வென்ற ஜேக்கபியின் மீது  பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

போட்டி ஆரம்பித்ததும் தலைகீழாக தண்ணீருக்குள் மூழ்கினார் ஜேக்கபி. அப்போது  அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. ஒரே இருட்டாக இருந்தது. லிடியா ஜேக்கபி நீருக்கு மேலே வந்தபோது பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஜேக்கபியுடைய  கண்ணாடி வாயில் இருந்தது. அவரால் அதை சீராக்க முடியவில்லை. சிரமத்துடன் தொடர்ந்து  நீந்தினார்.சக வீரரான ஹஸ்கே நிற்கும் இடத்துக்கு நீந்திச்  செல்ல சிரமப்பட்டார்.

"நான் நிச்சயமாக பீதியடைந்தேன், சுவரைப் பார்க்க முடியாததால் சிரமப்பட்டேன். மிகவும் கொடூரமான அனுபவர்ம்" என போட்டி முடிந்ததும் கெலடி ஜேக்கபி தெரிவித்தார். ஜேக்கபி சந்தித்த விபத்தால் அமெரிக்கக் குழு ஆறாவது இடத்தைப் பிடித்து வெளியேறியது.


No comments: