Monday, August 23, 2021

தலிபான்களை நம்பத் தயாரில்லாத ஆப்கான் மக்கள்

அமெரிக்காவின் அடகு முறையில் இருந்து ஆப்கானிஸ்தானை விடுவிக்க  வேண்டும் எனப் போராடிய தலிபான்கள் தமது  குறிக்கோளில்  வெற்றி பெற்று விட்டனர். அமெரிக்காவும்  நேச  நாடுகளும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி விட்டன. தலிபான்களின் முழுக் கட்டுப்பாடில் ஆப்கான் வந்துள்ளது. ஆனால், அங்குள்ள மக்களில் அதிகமானோர் தாய் நாட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கிறார்கள்.

தலிபான்களின் ஆட்சியில் அனுபவித்தவற்றை மறக்காத  ஆப்கான் மக்கள் மீண்டும் அப்படியான ஒரு  நிலைக்குச் செல்லத்தயாராக இல்லை என்பதையே அங்கு நடக்கும்  அம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. அமெரிக்கப் படைகளின் பின்னேலேயே ஆப்கான் மக்களில் பலர் காபூல்  விமான நிலையத்தை முற்றுகையிட்டனர்.


  ஓடும் பஸ்ஸில், ரெயினில் ஏறியதுபோல சிலர் விமானத்தில் ஏறியதும், சக்கரத்தைப் பிடித்து  தொங்கியவர்கள் விழுந்து  மரணமானதும் கடந்த  வாரம் பரபரப்பாக பகிரப்பட்ட சம்பவங்களாகும்.  ஐந்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் காபூல் விமான நிலையத்தில் குழுமியுள்ளனர். அவர்களை விரட்டுவதற்காக அமெரிக்க படையும், தலிபான்களும் துப்பாக்கிப் பிரயோகம்  செய்ததாகவும் செய்திகள் வெளியாகின.

காபூல் விமானநிலையத்தைச்  சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே யாரும் புக முடியாது. அந்த முள்வேலிக்கு வெளியே ஆப்கானிஸ்தான் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளையாவது காப்பாற்றிவிடலாம் என்ற நோக்கத்தில், முள்வேலியை தாண்டி இராணுவ வீரர்களிடம் வீசியுள்ளனர். அந்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுள்ளன.  தனக்கு என்ன‌வானாலும் பரவாயில்லை, குழந்தை தப்பிவிட  வேன்டும் என்ற எண்ணம்  பலரிடம் உள்ளது.

தலிபான்கள் ஆப்கானைக் கைப்பற்றிய ஓரிரு நாட்களில் எல்லாம் தலை கீழாக  மாறியுள்ளது. தொலைக் காட்சிகளில் செய்தி  வாசித்த பெண்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதர்குப் பதிலாக  ஆப்கான் உடையில் உள்ள  ஆண் செய்தி வாசிக்கிறார். தலிபான்களுக்கு எதிராகச் செயர்பட்டவர்கள் பழி வாங்கப்படுவதாகவும், சிலர் கடத்தப்பட்டுள்லதாகவும் செய்திகள் வெளியாகின்றன. த‌லிபான்கள் காபூலை கைப்பற்றிய பின்னர் பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும், அவர்கள் வேலை பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என கூறியிருந்தனர். ஆனால் தற்போது அங்கு நிலைமை தலைகீழாக மாறியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது,

வெளிநாடுகளில்   வாழும் ஆப்கானிஸ்தான் மக்கள் தமது  நாட்டைப்பற்றி வெளியிடும் காணொளிகள் பழைய சம்பவங்களை  ஞாபகப் படுத்துகின்றன.  அகதிகளாக வெளியேறிய  ஆப்கான் மக்களை அமெரிக்கா,பிரிட்டன்,கனடா ஆகிய நாடுகள்   தஞ்சம் கொடுத்துள்ளன. இன்னும் பல ஆயிரக்கணக்கான ஆப்கான் மக்கள் அகதி அதஸ்து  கோரத்தயாராக இருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானே த‌லிபான்களுக்கு அடிபணிந்து விட்ட நிலையில் ஒரே ஒரு மாகாணம் மட்டும் துணிச்சலாய் போருக்கு அழைப்பு விடுத்து வருகிறது.  த‌லிபான்களின் தாக்குதலுக்கு பயந்து 33 மாகாணங்களும் எதிர்ப்பே இல்லாமல் மண்டியிட்டன. ஆனால் ஆப்கானில் எஞ்சியுள்ள பஞ்ச்ஷிர் மாகாணம் மட்டும் த‌லிபான்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. தீரத்துக்கு பெயர்பெற்ற பஞ்ச்ஷிர் போராளிகள் தலிபான்க ளுக்குச் சவால் விட்டுள்ளனர்.

  சோவியத் ரஷ்யா, ஆப்கானிஸ்தான் முழுவதையும் ஆக்கிரமித்து 10 ஆண்டுகள் போரிட்டபோது கூட பஞ்ச்ஷிர் மட்டும்தான் அடிபணியவில்லை. பாரசீக மொழியில் பஞ்ச்ஷிர் என்றால் ஐந்து சிங்கங்கள் எனப் பொருள். பெயருக்கேற்பவே ஆக்கிரமிப்புக்கு அடிபணியாத சிங்கமாக பஞ்ச்ஷிர் விளங்கி வருகிறது.

சோவியத்தையும், த‌லிபான்களையும் எதிர்த்த முஜாகிதீன்களில் தீரம்மிக்க கொமாண்டரான அகமத் ஷா மசூத், பஞ்ச்ஷிர் பகுதியைச் சேர்ந்தவர்தான். பஞ்ச்ஷிர் சிங்கம் என்றே அகமது மசூத் அழைக்கப்பட்டார். அவரது தலைமையில் இயங்கிய வடக்கு கூட்டணிப் படைகள் சோவியத் யூனியனுக்கும் பின்னாளில் உள்நாட்டுப் போரின்போது த‌லிபான்கள் உள்ளிட்ட எந்த போராட்டக்குழுக்களுக்கும் பயந்ததுமில்லை, பணிந்ததும் இல்லை.

த‌லிபான்களுக்கு எதிராக போராடிய அகமத் ஷா மசூதுக்கு இந்தியா வெளிப்படையாகவே ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை தஜிகிிஸ்தான் வழியாக தந்துதவியது. தற்போது அகமது ஷா மசூதின் 32 வயது மகன், அகமது மசூதும் த‌லிபான்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். தாங்கள் ஆயுதங்களை சேமித்து வைத்திருந்தாலும் அமெரிக்கா விட்டுச் சென்ற நவீன ஆயுதங்கள் தாலிபான்களிடம் இருப்பதால் அவர்களை முழுமூச்சாய் எதிர்க்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஆயுதங்களை தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

  ஆப்கானிஸ்தானின் இடைக்கால ஜனாதிபது என சவால்விட்டுள்ள துணை ஜனாதிபதி அம்ருல்லா சலேவும் பஞ்ச்ஷிர்காரர்தான். அதுமட்டுமின்றி துணை ஜனாதிபதியாவதற்கு முன் கமாண்டர் அகமத் ஷா மசூதின் வலதுகரமாக திகழ்ந்தவர்.  சோவியத்தையும், தாலிபான்களையும் எதிர்த்த முஜாகிதீன்களில் தீரம்மிக்க கமாண்டரான அகமத் ஷா மசூத், பஞ்ச்ஷிர் பகுதியைச் சேர்ந்தவர்தான். பஞ்ச்ஷிர் சிங்கம் என்றே அகமது மசூத் அழைக்கப்பட்டார். அவரது தலைமையில் இயங்கிய வடக்கு கூட்டணிப் படைகள் சோவியத் யூனியனுக்கும் பின்னாளில் உள்நாட்டுப் போரின்போது தாலிபான்கள் உள்ளிட்ட எந்த போராட்டக்குழுக்களுக்கும் பயந்ததுமில்லை, பணிந்ததும் இல்லை.

தாலிபான்களுக்கு எதிராக போராடிய அகமத் ஷா மசூதுக்கு இந்தியா வெளிப்படையாகவே ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை தஜிகிிஸ்தான் வழியாக தந்துதவியது. தற்போது அகமது ஷா மசூதின் 32 வயது மகன், அகமது மசூதும் தாலிபான்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். தாங்கள் ஆயுதங்களை சேமித்து வைத்திருந்தாலும் அமெரிக்கா விட்டுச் சென்ற நவீன ஆயுதங்கள் தாலிபான்களிடம் இருப்பதால் அவர்களை முழுமூச்சாய் எதிர்க்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் ஆயுதங்களை தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது போதாதென தான்தான் ஆப்கானிஸ்தானின் இடைக்கால அதிபர் என சவால்விட்டுள்ள துணை அதிபர் அம்ருல்லா சலேவும் பஞ்ச்ஷிர்காரர்தான். அதுமட்டுமின்றி துணை அதிபராவதற்கு முன் கமாண்டர் அகமத் ஷா மசூதின் வலதுகரமாக திகழ்ந்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது. சலேவும் பஞ்ச்ஷிரில் இருந்துதான் குரல் எழுப்பி வருகிறார்.

பஞ்ச்ஷிர் மாகாணத்துக்கு, பல நூறு கிலோ மீட்டர் தூரம் நீளும் இந்துகுஷ் மலைத் தொடர்கள் அரணாய் காத்து நிற்கின்றன. பஞ்ச்ஷிரின் அமைவிடம், அதன் தலைவணங்காமைக்கு முக்கிய காரணமாக இருப்பதையும் மறுக்க முடியாது.

 ஆப்கானிஸ்தானில் பசியும், பஞ்சமும் ஏற்படும் என  ஐநாவின் உலக உணவுத் திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.  சுமார் 3.8 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஆப்கனில் 1.4 கோடி பேர் கடுமையான பாதிப்படைவார்கள் என அறிக்கைகள் தெரிவிகின்றன.  உலக உணவுத் திட்ட அமைப்பின் இயக்குநர் மேரி எலன் மெக்ரோடி கூறுகையில்,

"ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போர் காரணமாக மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாகக் கடுமையான வறட்சி , பஞ்சம்   ஏற்பட்டுள்ளது. இத்துடன் கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார பாதிப்பும் சேர்ந்து கொண்டதால் ஆப்கானில் பேரழி ஏற்பட்டுள்ளது.

 

 இந்த கடுமையான வறட்சியால் 40% க்கும் அதிகமான பயிர்களும் கால்நடைகளும் அழிந்துவிட்டன. த‌லிபான்களின் நடவடிக்கையால் பல்லாயிரணக்காணக்கான மக்கள் புதிய இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். குளிர்காலமும் நெருங்கி வருவதால் மிக மோசமான பஞ்சம் நாட்டில் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

 மே மாதம் வரை 40 லட்சம் பேருக்குத் தேவையான உணவுப் பொருட்களை அளித்துள்ளோம். இதை வரும் காலத்தில் 90 லட்சமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். அதேநேரத்தில் இதில் எண்ணற்ற சவால்கள் உள்ளதையும் நாங்கள் அறிவோம். இப்போது நாட்டில் அமைதி திரும்பவில்லை என்றால் ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படும். எனவே, உள்நாட்டுப் போர் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். மேலும், 200 மில்லியன் டொலர் மதிப்பிலான உணவு தானியங்களும் உடனடியாக தேவை" -என்று அவர் தெரிவித்தார்.

 ஆப்கானிச்தானைக் கட்டு எழுப்ப  வேன்டிய  பாரிய  பொறுப்பு  தலிபான்களின்  கையில்  உள்ளது. அச்சத்துஅன் இருக்கும் ஆப்கான் மக்களின்  அச்சத்தைப் போக்க வேன்டும். ஆப்கானில் உள்ள  வெளிநாட்டுத் தூதரகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. வெளிநாட்டு உதவிகள் எவையும்  இப்போதைக்கு கிடைக்காது. மக்களின் வாழ்வாதாரம்,பொருளாதாரம் போன்றவற்றை தலிபான்கள் எப்படி நிறைவேற்றப் போகிறார்கள் என்பதே உலகின் இன்றைய  கேள்வி.

No comments: