ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் பின் வாங்கியதைப் பார்த்து இன்றைய தலைமுரையினர் வியப்புடன் நோக்குகின்றனர். உலகின் நாட்டாமையான அமெரிக்காவுகு இது தலை குனிவு என்ற விமர்சனம் பரவலாக வைக்கப்பட்டுள்ளது. கியூபா, வியட்நாம் ஆகியவற்றை ஆக்கிரமிக்க முயன்ற அமெரிக்கா அங்கிருந்து தோல்வியுடன் தலை குனிந்து வெளியேறியது வரலாறு.
உலக
வரைபடத்தில் புள்ளி அளவிற்கு கூட கியூபா,
வியட்நாம், ஆப்கானிஸ்தான் என்று அடுத்தடுத்து மூன்று
குட்டி தேசங்களிடம் அமெரிக்கா தோல்வி அடைந்து சர்வதேச
அளவில் தலைகுனிவை சந்தித்துள்ளது. உலக அரசியலில்
அமெரிக்காவுக்கு ஏற்பட்ட தோல்விகளில்
இவையும் அடக்கம்.
அமெரிக்காவுக்கு அருகே ஒரு புள்ளிபோல் இருப்பது கியூபா. கியூபாவை ஸ்பெய்ன் கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெறுவதற்காக 1800 களில் கியூபா மக்கள் போராடினார்கள். இரண்டு போர்கள் முடிந்தும் கியூபாவால் விடுதலை பெறமுடியவில்லை. இரண்டாவது போரின் போது அண்டை நடாடான அமெரிக்கா உதவும் என கியூபா எதிர்பார்த்தது.
மூன்றாவது விடுதலைப்
போர் ஆரம்பமாகியது.
ஸ்பெய்னுக்கு அடிமையாக இருக்கும் கியூபாவுக்கு விடுதலை வாங்கிக்கொடுக்க
வேண்டும் என்ற கருத்து அமெரிக்காவில்
ஓங்கி ஒலித்தது. அமெரிக்கா
தனது நாட்டுமக்களை அடிமையாக வைத்திருந்த காலம்
அது. கறுப்பின மக்களும்,
அமெரிக்க பூர்வ
குடி மக்களும் போராட்டம்
நடத்திய காலம்.
கியூபா போரில் தலையிட வேண்டும்
என்று அமெரிக்காவில் "அடிமை வாதத்தை" ஆதரிக்கும்
கட்சிகள் கோரிக்கை வைத்தன.
கியூபா விடுதலை போரில் அமெரிக்கா களமிறங்கியது. ஸ்பெயினுக்கு எதிரான கியூபாவின் சுதந்திர போரில் அமெரிக்கா நேரடியாகவும், மறைமுகமாகவும் போரிட்டு கியூபாவிற்கு உதவியது. 1895-1898 வரை நடந்த இந்த போரில் அமெரிக்காவின் உதவியுடன் கியூபா என்ற சுதந்திர தேசம் பிறந்தது. பெயரள்வில் சுதந்திர நாடான கியூபாவில் அமெரிக்காவின் சொல்லைக் கேட்கும் பொம்மை ஆட்சி ஆரம்பமாகியது.
கியூபா சுதந்திர நாடாகியதும் அங்கிருந்து வெளியேறுவதாக வாக்களித்த
அமெரிக்கா தனது வாக்குறுதிய மீறி அங்கு நிலைகொண்டது.
அமெரிக்காவின் தலையீட்டால் கியூபாவில் வறுமையும், ஊழலும் தலைவிரித்தாடியது. கியூபாவின்
கரும்பு ஆலைகளை அமெரிக்கா மறைமுகமாக
கட்டுப்படுத்தியது. கியூபாவின் ஜனாதிபதி படிஸ்டாவின் ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடியது.
அமெரிகாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக கியூபா மக்கள் போராடினார்கள். கியூபாவின் புரட்சிக்கு பிடல் கஸ்ரோ தலைமை வகித்தார். பிடல் கஸ்ரோ தலைமையில் 1953ஆம் ஆன்டு கியூபாவில் புரட்சி போராட்டம் வெடித்தது. ஐந்து வருடங்கள் நடந்த போராட்டத்தின் முடிவில் 1958 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பிடல் கஸ்ரோ கியூபாவில் செங்கொடி ஏற்றினார். அமெரிக்காவின் மூக்கிற்கு கீழேயே கம்யூனிச நாடு ஒன்று பிறந்தது. கம்யூனிச கொள்கை கொண்ட போராளிகளிடம் தோல்வி அடைந்ததை, அதிலும் கொரில்லா போராளிகளிடம் தோல்வி அடைந்ததை அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
இரண்டாவது உலகப்போர் முடிந்த பின்னர் உலக அரசியலில் பல் வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. கைப்பற்றிய நாடுகளில் இருந்து படைகள் வெளியேறின. வியடநாமில் நிலை கொண்டிருந்த ஜப்பனிஒய படைகள் தாய் நாட்டுக்குச் சென்றன. வியட்நாமில் தங்கி இருந்த ஸ்பெய்னின் ஆதிக்கம் தொடர்ந்தது.
வியட்நாமின்
வடக்கு பகுதியை கம்யூனிச சித்தாந்தம்
கொண்ட ஹோ சி மின், பிரான்ஸ்
ஆதிக்கத்திற்கு எதிராக போராடி கைப்பற்றினார்.
இதனால் வடக்கு வியட்நாம், தெற்கு
வியட்நாம் என்ற மோதல் தீவிரமாக
நடந்து வந்தது. பிரான்ஸ் ஆதிக்கத்திற்கும்,
ஹோ சிமின்னின் கம்யூனிச போராளிகளுக்கும் இடையில் மோதல் நடந்து
வந்தது. இந்த நிலையில் பெரியண்ணனான அமெரிக்கா பஞ்சாயம்
செய்ய களம் இறங்கினார்.
முதலாளித்துவ
நாடுகளான அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தெற்கு வியட்நாமையும்,
பிரான்ஸ் ஆதிக்கத்தையும் ஆதரித்தன. ரஷ்யா,
சீனா ஆகிய நாடுகள் வடக்கு
வியட்நாமை ஆதரித்தன.. பனிப்போர் சமயம் என்பதால் வியட்நாம்
போர் ஒரு துணை போர்
போல நடந்து வந்தது. இது
மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்துமோ என்ற அச்சமும் நிலவி
வந்தது. பல
லட்சம் குண்டுகள், விமானங்கள், வீரர்கள் என்று நவீனமான போரை
அமெரிக்கா வடக்கு வியட்நாம் மீது
ஏவியது. ஆனால் வடக்கு வியட்நாம்
போராளிகளோ காடுகளில் மறைந்திருந்து பதிலடி கொடுத்தனர்.
காடுகளில் கொரில்லா தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அமெரிக்கா 1973ல் வெளியேறியது. 1975ல் வடக்கு வியட்நாம் இந்த போரில் பிரான்ஸை வீழ்த்தி வென்றது. அவதார் படம் போன்று அன்றையா வியட்நாம் போராளிகள் அமெரிக்காவுக்கும் பிரான்ஸுக்கும் எதிராகப் போராடி வெற்றி பெற்றார்கள். மொத்தமாக போரில் கம்யூனிச நாடுகள் வென்றதாக அறிவிக்கப்பட்டதோடு வடக்கு தெற்கு வியட்நாம் இணைந்து வியட்நாம் என்ற கம்யூனிச நாடு பிறந்தது. கியூபாவில் தோல்வி, வியட்நாமில் தோல்வி என்று அமெரிக்கா நிலைகுலைந்து போனது. வியட்நாம் தோல்வி அமெரிக்க படை வீரர்களுக்கு மன ரீதியான பாதிப்புகளை, ஸ்கிட்ஸோபெர்னியா போன்ற அதீத மனநல பிரச்சனைகளை ஏற்படுத்தியது.ஈராக்கின் ஆக்கிரமிப்பில் இருந்து குவைத்தை விடுவித்தது, ஈரானின் போரில் வெற்றி பெற்றது போன்று ஆப்கானையும் கைப்பற்ற நினைத்த அமெரிக்கா 20 வருடங்களின் பின்னர் அங்கிருந்து தோல்வியுடன் வெளியேறியது. 1980 களின் தொடக்கத்தில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஆப்கானில் முகாஜிதீன்கள் போராடினார்கள். அப்போது அவர்களுக்கு அமெரிக்கா உதவியது.
. அமெரிக்காவை நம்பி இனி களமிறங்க கூடாது, போராட கூடாது என்ற நிலைமையை உலக நாடுகளுக்கு இந்த தோல்விகள் எடுத்துரைத்துள்ளன. அமெரிக்காவை பெரிதும் நம்பிய ஆப்கான் அரசை அமெரிக்கா கைவிட்டது. அமெரிக்க நட்பு நாடுகளுக்கும், நேட்டோ படைகளுக்கும் மிகப்பெரிய எச்சரிக்கையாக மாறியுள்ளது.
No comments:
Post a Comment