Tuesday, August 10, 2021

இந்தியாவின் தங்க மகனை செதுக்கிய உவே ஹான்


  டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு உலகில் புதிய வரலாற்றைப் பதித்துள்ளது. கொரோனா எனும் கொடிய தொற்று  அச்சுறுத்தும் வேளையில் விளையாட்டின் மகத்துவத்தை உலகுக்கு வெளிகாட்டியுள்ளது ஒலிம்பிக்.

ஒலிம்பிக் பதக்கத்தை அணியும் வேளையில் அதனை அடைவதற்காக பட்ட துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் மறைந்துவிடும். வெற்ரியும், வரலாறும் தனிமனிதனால் சாத்தியப்படுவதில்லை. வெற்ரி பெற்ற வீரனின்  பின்னால் பலர்  ஒருப்பார்கள். அவர்களில் பயிற்சியாளர் மிக முக்கியமாவர். நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளரான  உவே ஹான், தனது கனவை தன் மாணவன் முலம் நிறைவேற்றியுள்ளார்.

ஜேர்மனியைச்  சேர்ந்த உவே ஹான், ஈட்டி எறிதலில்  சாதனை செய்தவர். 1984 ஆம் ஆண்டு நடைபெற்றதடகளப் போட்டியில் 104.80 மீற்றர் தூரம் எறிந்தார்.  1984 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் உவே ஹான்  தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜேர்மனி அந்த ஒலிம்பிக்கை புறக்கணித்ததால் உவே ஹான் அந்த ஒலிம்பிக்கில் கலந்துக்கொள்ளவில்லை. அதனால் அவரின் தங்கக் கனவு கலைந்தது. நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதால் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுள்ளார்.

  நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய விளையாட்டு ஆணையத்தின் சார்பில் தடகள பயிற்சியளிக்க இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டார் உவே.,    நீரஜ் சோப்ராவை செதுக்கும் பொறுப்பு உவே ஹானிடம் கொடுக்கப்பட்டது.  உவே ஹானின் பயிற்சியில் நீரஜ் சோபரா பங்கெடுத்த சகல போட்டிகளிலும் தங்கம் வென்றார்.  2017-18 இரண்டு ஆண்டுகளில் ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய போட்டி, காமென்வெல்த் போட்டி என மூன்று பெரிய தொடரிலுமே நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றிருந்தார்.  இப்போது ஒலிம்பிக்கில் தங்கம்

முழங்கையில் ஏற்பட்ட காயத்துக்காக நீர சோப்ரா அறுவை சிகிச்சை செய்தார். அதன் பின்பும் நீரஜ் சோப்ராவின்  வேகம் குறையவில்ல. செக் குடியரசைச் சேர்ந்த ஜேன் செலன்ஷி 1996 ஆம் ஆண்டு 98.48 மீற்றர்  தூரத்துக்கு ஈட்டியை வீசியிருந்தார். நவீன ஈட்டி எறிதலில் இதுதான் உலக சாதனை.  ஜேர்மனியைச் சேர்ந்த ஜோனஸ் வெட்டர் 97.76 மீற்றர் தூரம் வீசி வரலாற்றில் இரண்டாம் இடத்தை பிடித்தார். ஜோன்ஸ் வெட்டரும் நீரஜ் சோப்ராவுடன் இறுதிப் போட்டியில் விளையாடினார்.

  ஒலிம்பிக் தொடரின் தகுதி சுற்றின் முதல் வாய்ப்பிலேயே, 86.65 மீற்றர் தூரம் ஈட்டி வீசி நீரஜ் சோப்ரா அசத்தினார். இதன் மூலம் இரண்டாவது சுற்று, காலிறுதி, அரையிறுதி செல்லாமல், நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இறுதிப் போட்டியில் தனது முதல் சுற்றில் 87. 03 மீற்றர்ர் தூரம் ஈட்டியை வீசினார் நீரஜ் சோப்ரா.   2வது சுற்றில் 87.58 மீ தூரம் வீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இவருக்கு பின்னால் வீசிய எந்தவொரு வீரராலும் இவரின் தூரத்தை எட்ட முடியவில்லை. அடுத்த  மூன்று  சுற்றுகளிலும் தூரம்  குறைந்தது. நீரஜ் சோப்ரா  வீசிய துரத்தை யாரும் எட்டாததால் அவர் முதலிடம் பிடித்தார்.

2016 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தில் நிராஜ் சோப்ரா இணைந்தார். 2016 ஆம் ஆண்டு ஜூனியர் உலக சம்பியன் போட்டியில்  86.48  மீற்றர் தூரம் வீசி புதிய சாதனையுடன் தங்கம் வென்றார். 2016 ஒலிம்பிக்கில் போட்டியுக்கு நிராஜ் சோப்ரா தகுதி பெறவில்லை.

உவே ஹானின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், இந்திய விளையாட்டு ஆணையம் கொடுத்த புதிய ஒப்பந்தத்தில் உவே ஹானுக்கு உடன்பாடில்லை. ‘’இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு விளையாட்டை பற்றிய புரிதல் பெரிதாக இல்லை. வீரர்களுக்கு தேவையான சத்தான உணவை கூட அவர்களால் கொடுக்க முடியவில்லை. இப்போது உடன்பாடில்லாத புதிய ஒப்பந்தத்தில் என்னை கையெழுத்திட சொல்லி ப்ளாக்மெயில் செய்கின்றனர்'’ என விளையாட்டு ஆணையத்திற்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.


   கடந்த ஜுன் மாதத்தில் அதாவது ஒலிம்பிக் ஆரம்பிப்பதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்பாக நடைபெற்றது. நீரஜ் சோப்ராவுக்காக எல்லாவற்றையும் பல்லை கடித்துக் கொண்டு பொறுத்திருந்தார் உவே ஹான். அப்படியே விட்டுவிட்டு சென்றிருந்தால் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்திராது.   நீரஜ் சோப்ராவின் உழைப்பு மட்டுமில்லை உவே ஹானின் பொறுமையுமே இந்தியாவிற்கு தங்கத்தை பெற்று கொடுத்திருக்கிறது

No comments: