Saturday, August 14, 2021

ஒலிம்பிக்கில் சறுக்கிய தருணங்கள்

 பெரு நாட்டைச் சேர்ந்த ஸ்கேட்போர்டர்  வீரர் ஏஞ்சலோ கரோ நர்வேஸ் டோக்கியோ ஒலிம்பிக்கில் தனது நாட்டுக்கு பெருமை சேர்க்க  காத்திருந்தார். ஏஞ்சலோ கரோ நர்வேஸின் முறை வந்தபோது ஸ்கேட்போடர் போட்டியில் கள‌ம் இறங்கினார்.

சில்லுப் பூட்டிய சின்னப்பலகையில் தனது உடம்பை வளைத்து நெளிந்து வேகமாக ஊர்ந்தார். அங்கே வைக்கப்பட்டிருக்கும் மேடைகளிலும்,கம்பிகளிலும் ஏறி இறங்க வேண்டும். உடம்பின் சமநிலை தவறினால் விபத்தைச் சந்திக்க நேரும். ஆபத்தான விளையாட்டு.

 பதக்கத்திற்கான சிறந்த போட்டியாளராக நர்வேஸ் தொடங்கினார். எனினும், அவர் தனது பலகையில் இருந்து கீழே விழுந்து உலோகக் கம்பியில் மோதினார். அவரது ஆரம்ப ஓட்டம் மிகவும் தவறாக நடந்தது. ஆ அவர் மேற்பரப்பில் இறங்கிய பிறகு, அவரது எடை பின்னோக்கி நகர்ந்து அவர் பலகையில் இருந்து கீழே விழுந்ததால் இடுப்பில் ஏற்பட்ட வலியால் துடித்தார். ஒரு நிமிடத்தின் பின்னர் போட்டியைத் தொடர்ந்தார்.

ஏஞ்சலோ கரோ நர்வேஸ், இரண்டாவது சுற்றில்   6.96  மதிப்பெண்களைப் பெற்றார்.  மேலும்  ஐந்து தனிப்பட்ட சாகசங்கலைச் செய்தார். இறுதியில், அவர் ஏழாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

No comments: