டோக்கியோ
பாராலிம்பிக்கில் பெண்கள் சி 1-3 சாலை
சைக்கிள் ஓட்டப்போட்டியில் 50 வயதான கெய்கோ சுகியூரா தங்கம் பெற்று புதிய சாதனை
படைத்துள்ளார்.சுகியூரா 25 நிமிடங்கள் 55.76 வினாடிகளில் ஓடினார். சுவீடனின் அன்னா பெக்[ 26: 18.03]
வெள்ளியையும், அவுஸ்திரேலியாவின் பைகே கிரேகோ [26: 37.54 ] வெண்கலத்தையும் பெற்றனர்.
ஷிசுவோகா
ப்ரிஃபெக்சரை பூர்வீகமாககொண்ட சுகியூரா தனது
மறுவாழ்வின் ஒரு பகுதியாக சைக்கிள்
ஓட்டுதலைத் தொடர்ந்தார்.சுகியூராவின் உடலின் வலது பக்கத்தில்
பக்கவாதம் மற்றும் 45 வயதில் சைக்கிள் பந்தயத்தில்
விழுந்ததில் நினைவாற்றல் குறைபாடு ஏற்பட்டது. பாரா ஒலிம்பிக்கில் தங்கம்
வென்ற முதல் பெண் ஜப்பானிய
சைக்கிள் வீரர் மற்றும் ஒட்டுமொத்தமாக
நான்காவது பெண்மணி.
2017 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார். 2019 உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
No comments:
Post a Comment