Friday, August 6, 2021

டோக்கியோ ஒலிம்பிக் தடகளத்தில் தடுமாறும் அமெரிக்கா


 ஒலிம்பிக் போட்டிகளில் தங்க வேட்டையாடிய அமெரிக்கா டோக்கியோ ஒலிம்பிக்கில்  தடுமாறுகிறது. அமெரிக்காவின் தங்கப் பதக்கப் பட்டியலில் தடகளமும் ஒன்று. டோக்கியோ விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கப் பதக்கத்தையும் வெல்ல முடியாமல் அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர்கள் வரலாற்றில் மிக மோசமான நிலையில் உள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டோஹாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 16  தங்கப் பதகங்களை அள்ளியஅமெரிக்க வீரர்கள் டோக்கியோவில் தடுமாறுகின்றனர்.

 2004 ஆம் ஆண்டு 100 மீற்றர் போட்டியில் முதல் தங்கப் பதக்கம்வென்ற டிரேவோன் ப்ரோமெல் டோக்கியோவில்  இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை.உலக சாம்பியன் லைல்ஸ்   200 மீற்றர்  போட்டியில் கிரீடத்தை கைப்பற்ற விரும்பினார், ஆனால் வெண்கலத்தை  பெற்று ஆறுதலடைந்தார்.

110 மீற்றர் ஹேர்டில்ஸில், மற்றொரு உலக சாம்பியனான கிராண்ட் ஹோலோவே, ஜமைக்காவின் ஹான்ஸ்லே பார்ச்மெண்ட்டால் தோற்கடிக்கப்பட்டார்.அதே நேரத்தில் 400 மீற்றர் ஹேர்டில்ஸ் சம்பியன்ஸில்  ராய் பெஞ்சமின்,  நோர்வேயின் கார்ஸ்டன் வார்ஹோமின் வேகத்தால் வீழ்ந்தார். 2016 ஒலிம்பிக்   1,500 மீற்றர் போட்டியில் ங்கப் பதக்கம் வென்ற மேத்யூ சென்ட்ரோவிட்ஸ் அரையிறுதியில் வெளியேற்றப்பட்டார்.

  ஆண்கள் 4x100 மீற்றர் அஞ்சலோட்டஅணி அரையிறுதியில் தோல்வியடைந்து ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக  இறுதிப் போட்டிக்கு தகுதிபெற முடியாமல் போனது.

அமெரிக்க  ஜாம்பவான்களான கார்ல் லூயிஸ், மைக்கேல் ஜான்சன் ஆகியோர்   ஆத்திரமடைந்தனர்

"இது ஒரு யூஎஸ்ஏ அணிக்கு முற்றிலும் சங்கடமான மற்றும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது ..." என்று லூயிஸ் ட்விட்டரில் எழுதினார், அதே நேரத்தில் ஜான்சன் பின்னர் "சங்கடமாகவும் அபத்தமாகவும்" காட்டினார். டோக்கியோவில் என்ன தவறு நடந்தது என்பது தெரியாமல் அமெரிக்க வீரர்கள் தடுமாறுகின்றனர்.

திட்டமிடலும் பயிற்சியும் இல்லாததே தோல்விக்குக் காரணம் என வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments: