Saturday, August 14, 2021

ஒலிம்பிக்கில் சறுக்கிய தருணங்கள்

 

 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 110 மீற்றர் ஹேடில்ஸ் அரை இறுதிப்போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் சுவட்டில் தயாராக நின்றார்கள். ஒலிம்பிக்கில் முதன் முதலாகக் கலந்து கொண்ட அவுஸ்திரேலியரான   நிக்கோலஸ் ஹக், இறுதிப்  போட்டியில் விளையாடும் நம்பிக்கையுடன்  தயாராக நின்றார்.

100 மீற்றர் போட்டி மிகவும் பரபரப்பானது.  வீரர்கள் அனைவரும் அம்பில் இருந்து புற‌ப்பட்ட வில் போன்று பாய்ந்தார்கள். நிக்கோலஸ் ஹக் இரண்டாவது ஹேடில்ஸை தட்டி விழுத்தினார். அதனை எவரும் பெரிதாக எடுக்கவில்லை. ஹாக் ஓடி முடிந்ததும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். வரிசையாக எட்டு ஹேடில்ஸ்களை நிக்கோலஸ் ஹக் தட்டி விழுத்தினார்.

ஏழாவது இடத்தைப் பிடித்த நிக்கோலஸ் ஹக், இறுதிப் போட்டிக்குத் தெரிவாகவில்லை.  

 போட்டி முடிந்த பின்னர் ச‌னல் 7 -க்கு  பேட்டியளிக்கையில், வெப்பத்திற்குப் பிறகு எனக்கு கொஞ்சம் களைப்பாக‌ இருந்தது.இது சூடாக ஒரு போராட்டம். தடைகளை கடந்து செல்ல அதிக சக்தி இல்லை.ஆனால் , அவுஸ்திரேலியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன்.எனது முதல் ஒலிம்பிக் அரையிறுதியில் போட்டியிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. அடுத்த முறை இறுதிப் போட்டிக்குச் செல்வேன். ப‌ரிஸ் 2024 இல் ச‌ந்திப்பேன்" என நம்பிக்கையுடன்  தெரிவித்தார்.

No comments: