Tuesday, August 17, 2021

ஒலிம்பிக்கில் சறுக்கிய தருணங்கள்


ஆ ண்கள் ஒலிம்பிக் டிரையத்லான்  போட்டியின் போது  அதனை  ஒளிப்பதிவு செய்த ஊடகம் ஒன்றின்  படகு ஒன்று இடையில் புகுந்து போட்டியாளர்களை குழப்பியதால் பத்து நிமிடங்களின் பின்னர் போட்டி ஆரம்பமாகியது.

டிரைத்தலான் போட்டியில் பங்குபற்றுவதற்காக ஐம்பத்தாறு ஆண்கள் டோக்கியோ விரிகுடாவில் உள்ள ஒரு பொன்டூனில்   வரிசையாக நின்றார்கள்.  போட்டி  ஆரம்பமானது ஒலிம்பியன்கள் தண்ணீரில் குதித்தார்கள். போட்டியாளர்கள் 1,500  மீற்றர்  நீந்த வேண்டும்.  அவர்கள்  200  மீற்றர்  துரம்  சென்றபோது திடீரென  ஒளிப்பதிவு  செய்த   ஊடக படகு  போட்டியாளர்களுக்கு அருகில்  சென்றது. படகு  ஏற்ப‌டுத்திய அலையும், இயந்திரத்தில் இருந்து  வெளியேறிய  வெப்ப  நீரும்  போட்டியாளர்களை  தடுமாறச் செய்தன.

 போட்டியாளர்களுக்கு நடுவே படகு  புகுந்ததால் அவர்கள் தடுத்து  நிறுத்தப்பட்டனர்.  படகு  ஏற்படுத்திய  நீரலையால் சிலர் திசைமாறி நீந்தத்தொடங்கினர். நிலமையை உணர்ந்த  போட்டி  ஏற்பாட்டாளர்கள். உடனடியாக  போட்டியை நிறுத்தும் ஓசையை ஒலிக்கச்செய்தனர். போட்டியாளர்களை பாதுகாப்பாக படகுகளில் ஏற்றி ஆரம்ப இடத்துக்கு அழைத்துச்சென்றனர். பத்த் நிமிடங்களின் பின்னர்  போட்டி ஆரம்பனாமனது. பந்தய வெற்றியாளர் கிறிஸ்டியன் ப்ளம்மென்ஃபெல்ட் குழப்பம் ஒரு பெரிய பிரச்சனையாக இல்லை என்று கூறினார்.

"நான் படகைப் பார்த்தேன், அது மிகவும் விசித்திரமாக இருந்தது,     நான் டைவ் செய்யும்போது, அது பெரும்பாலும் பின்னுக்கு இழுக்கப்படும் என்று நினைத்தேன்" என‌  போட்டியாளரான நோர்வே கூறினார். 

இந்தக் களேபரத்தில் அவுஸ்திரேலிய ஜேக் பிர்ட்விஸ்டின்   உதைக்கப்பட்டு மூக்கு உடைந்தது. 

No comments: