டோக்கியோ ஒலிம்பிக் பட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் சீனாவின் ஹி பிங்யாஜிவோவை பி.வி. சிந்து எதிர்கொண்டார். இந்த போட்டியில் பி.வி. சிந்து 21-13, 21-15 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார்.
இந்த வெற்றியின்மூலம் அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் சிந்து. ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்பு, 2016ல் பிறேஸிலில் நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் சானிய நெஹர்வால் வெண்கலம் வென்றார்.தொடர்ந்து மூன்றாவது ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனைகள் பதக்கம் வென்றுள்ளனர்.
No comments:
Post a Comment